மனிதன் நன்மையை கோரி பிரார்த்திப்பது போல் தீமையை கோரி பிரார்த்திக்கிறான்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நோயுற்று) மெலிந்து கோழிக்குஞ்சைப் போன்று ஆகியிருந்த முஸ்லிம்களில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ (அல்லாஹ்விடம்) எதை யேனும் வேண்டிப் பிரார்த்தித்தாயா? அல்லது அவனிடம் எதையேனும் கேட்டாயா?" என்று வினவினார்கள்.
அதற்கு அவர், "ஆம், நான்: 'அல்லாஹும்ம மா குன்த முஆகிபீ பிஹி ஃபில் ஆகிரத்தி ஃபஅஜ்ஜில்ஹு லீ ஃபித் துன்யா' (யா அல்லாஹ்! மறுமையில் எதைக் கொண்டு என்னை நீ தண்டிப்பாயோ, அதை இப்போதே இவ்வுலகில் எனக்கு விரைவாக்கி விடு) என்று கூறுபவனாக இருந்தேன்" என்றார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்). உம்மால் அதைத் தாங்க முடியாது -அல்லது உமக்கு அதற்குச் சக்தியிராது-. நீர்: 'அல்லாஹும்ம ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனதன், வஃபில் ஆகிரத்தி ஹஸனதன், வகினா அதாபந் நார்'
(யா அல்லாஹ்! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை வழங்குவாயாக! நரக வேதனை யிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்று கூறியிருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். பிறகு அவருக்காக (நபி (ஸல்) அவர்கள்) அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்; அல்லாஹ் அவருக்குக் குணமளித்தான். [ஸஹீஹ் முஸ்லிம் : 2688 a]
الحمدلله
No comments:
Post a Comment