வி- 20
ரமலான் வினா - விடை
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
20. லவ்ஹுல் மஹ்ஃபூள் என்பது என்ன?
லவ்ஹுல் மஹ்ஃபூள் என்பது பாதுகாக்கப்பட்ட பதிவேடு (வரை பட்டிகை) (85:22) இது ஒரு தெய்வீக பதிவேடு. இதில் அண்ட சராசரத்தின் அத்தனை திட்டங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அல்லாஹ் எழுதுகோலை முதலில் படைத்தான். கட்டளையிட்டான் அதற்கு ‘எழுதுக!’ என்று. அவனது கட்டளைக்கு ஏற்ப அது இந்த ஏட்டை பதிவு செய்தது. இது வரை நடந்தது, கியாமத் நாள்வரை இனி நடக்கப் போவது எல்லாம் அது எழுதியது. அது விதியாக்கப்பட்ட புத்தகம். இது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட புத்தகம். அதன் அகலம் நாம் நாறு வருடம் நடக்கும் தூரத்திற்கு சமம்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும், இப்னு அப்பாஸ் அவர்கள் அதிகாரப் பூர்வமாக மேற் கோள் காட்டிய மற்றவர்களும் கூறியதாவது: "இது சிவப்பு மாணிக்கங்களால் ஆனது அதன் மேல்பாகம் அல்லாஹ்வின் அர்ஷில் கட்டப் பட்டுள்ளது. இதனுடைய கீழ்பாகம் ஒரு வான தூதரின் மடியில் கட்டப்பட்டுள்ளது. அதனுடைய தாள்கள் இலேசானவை. எழுது கோலும் இலேசானது. அதை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு நாளும் 363 தடவை பார்க்கின்றான்.
அவன் தான் விரும்பியவாறு அதை
கையாளு கின்றான். அடக்கமான ஒருவனை உயர்த்து கின்றான். அவன் கெளரமானவனை
இழிவுப்படுத் துகிறான், ஏழையை பணக்காரன் ஆக்குகின்றான்,
பணக்காரனை ஏழையாக்குகிறான், ஒருவருக்கு
உயிர் கொடுக்கிறான், மற்றவரின் உயிரை எடுக் கிறான்.
இப்படியாக தான் விரும்பியவற்றை செய்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு
எவரும் இல்லை."
இப்பதிவேடு வானதூதர்களால் நன்கு பாதுகாக்கப் பட்டுள்ளது. இதில் எல்லாம் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷைத்தானுக்கு அதன் பக்கத்தில் கூட செல்ல முடியாது. சுப்ஹானல் லாஹ்! ஜபூர், தவ்ராத், இன்ஜீல் போல் யாரும் திருக்குர்ஆன் வசனங்களை இதுவரை நீக்கியோ, சேர்த்தோ அல்லது மாற்றியோ அமைக்க வில்லை.
அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
[6:59] “அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனின்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றை எல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமி யின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறுவித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந் தப் பொருளும்) தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை."
[27:75] "வானத்திலும், பூமியிலும்
மறைந்துள்ள வற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான
குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.”
[36:12] “நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே
உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள்
விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுது கிறோம்; எல்லாவற்றையும்,
நாம் ஒரு விளக்க மான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.”
[57:22] பூமியிலோ, அல்லது
உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே
(லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக
அல்லாஹ்வுக்கு அது மிக எளிதானதேயாகும்.”
[56:77-79] (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து
(அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக் கின்றதோ அதைத் திட்டமாக நாம்
அறிந்திருக் கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று)
பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.”
[43:4] "இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத் திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது.”
[56:77-79] "நிச்சயமாக,
இது மிகவும் கண்ணிய மும், சங்கையும் மிக்க
குர்ஆனாகும். பாதுகாக்கப் பட்ட ஏட்டில் இருக்கிறது. தூய்மையானவர்களைத் தவிர
(வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்."
[22:70] “நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும்,
பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா?
நிச்சயமாக இவை (யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப் பட்டு)
இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ் வுக்கு மிகவும் சுலபமானது.”
[13:38 & 39]. “ஒவ்வொரு
தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. (எனினும்,) தான்
நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்துவிடுவான். (தான் நாடியதை அதில்)
நிலைத்திருக்கவும் செய்வான் – அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்)
இருக்கிறது.”
அல்- ஹீசேன் பின் அல்-ஃபாதல் நபி ﷺ அவர் களிடம் கேட்டார்: “வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்பே அல்லாஹ் எல்லாவற் றிற்கும் தன் கட்டளைகளை விதிக்கவில்லையா?” அவர் 'ஆம்' என்று பதிலளித்தார். “அப்படி யென்றால் லைலத்துல் கதரில் என்ன நடக்கும்?”
இப்னு காதிர் தம்முடைய குர்ஆனின் விளக்கத்தில் கூறியதாவது:
"அந்த இரவில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக் கப்படுகிறது." (44:4). அதாவது ஒவ்வொரு உயிரின் நடக்கப் போகும் காரியங்களை லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டு வானவர்களிடம் கொடுக்கப்படும். அவர்கள் வாழ்நாள், ஆரோக்கியம், நோய், ஆகாரம், ஏழ்மை, செல்வம் அல்லது ஏற்படப்போகும் துன்பங்கள், நல்ல விளச்சல், வறட்சி, போர், பூகம்பம், மழை மேலும் அந்த ஆண்டின் கடைசி வரை நடக்கும் எல்லாக் காரியங்களையும் விதிப்பர்." “அதில் மலக்குக ளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.” (97:4).
நபி (ﷺ), “இறைவனை ஏதோ ஒரு வகையில் வழிபட்டும், உறவு முறைகளை நிலை நிறுத்தியும், பிரார்த்தனை புரிந்தும் கடவுள் நிர்ணயித்த விதியை மாற்றலாம்.” கூறியுள்ளார். இதையே இன்னொரு ஹதீஸில் நபி (ﷺ) கூறியுள்ளார்: "நேர்மை வாழ்நாளை நீடிக்க வைக்கும், பிரார்த் தனை விதியை மாற்றி அமைக்கும், செய்த பாவம் வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடும்" (அல் அல்பானி- ஸஹி இப்னு மாஜாஹ்).
உமர் இப்னு கத்தார் (ரஜி) கூறியது: “அவர் காபாவை தவ்வாஃப் செய்யும்போது அழுதுக் கொண்டே: "ஓ அல்லாஹ்! நான் அழிய வேண்டும் என்றோ அல்லது பாவம் செய்வேனன்றோ விதித் திருந்தால் அதை அழித்துவிடு. எதை நீ விரும்பு கிறாயோ, எதை நீ உறுதிபடுத்து கிறாயோ அதை உன் பதிவு புத்தகத்திலிருந்து அழித்துவிடு. அதனை சந்தோஷப்படுத்தக் கூடியதாகவும், மன்னிக்கக் கூடியதாகவும் ஆக்கு."
இதுபோலவே அல்-தாபரானி தாபி அபு வேல் ஷகீக் பின் சலமாஹ் அடிக்கடி இவ்வாறு பிராத்திப்பார்: "ஓ அல்லாஹ்! நீ அழிவு விதித்தி ருந்தால் அதை அழித்துவிடு. நீ எங்களுக்கு உன் ஆசிர்வாதங்களை விதித்திருந்தால் அதை உறுதிப்படுத்துவிடு. நீ விரும்பினால் உன்னுடைய தாய் பதிவேற்றிலிருந்து எங்களுக்கு விதித்திருக்கும் அழிவைக் கலைக்கலாம் அல்லது ஆசிர்வாதத்தை அருளலாம்."
الحمدلله
No comments:
Post a Comment