வி- 19
ரமலான் வினா - விடை
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
19. இஸ்ராயிலின் சந்ததிகள் மூஸா (அலை) மிடம் அல்லாஹ்வை நேரில் காண வேண்டும் எனக் கூற, நடந்தது என்ன?
மிகச் சிறந்த, எவருக்குமே கிடைக்காத அருள் வளங்களைப் பெற்ற இஸ்ராயிலின் சந்ததிகள் மூஸா (அலை) மீது எப்போதும் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். மூஸா (அலை) இறைவனைச் சந்தித்துப்பின் தவ்ராத் எழுதிய கற்பலகைகளைக் கொண்டு வந்தபோது இஸ்ரவேலர்கள் அவர் இல்லாத போது ஒரு காளைக்கன்றை தங்கள் தெய்வமாக வழிபட்டனர்.
இச்சம்பவத்தை அப்துர் -ரஹ்மான் பின்
ஜயீத் பின் அஸ்லம் விவரிக்கும் போது: அதற்கு பிராயச் சித்தமாக மூஸா (அலை) அவர்கள் தங்களை தாங்களே வெட்டிக்
கொள்ளும்படி கூற அவர்களும் அதற்கு இணங்கினர். பின் அவர்கள் அல்லாஹ் விடம் மன்னிப்பு
கேட்க அல்லாஹ்வும் அவர் களை மன்னித்தான்.
மூஸா (அலை) கூறினார்; "இந்த கற்பலகைகள் அல்லாஹ் அனுப்பிய வேதம். அதில் அல்லாஹ் வின் கட்டளைகளும், மனிதர்களுக்கு தடுக்கப் பட்டவைகளும் உள்ளன." அவர்கள் கூறினார்கள்: "மூஸாவே! நீங்கள் சொல்வதால் நாங்கள் இதை நம்பவேண்டுமா? அல்லாஹ்வின் மீது ஆணையாக இதை அல்லாஹ்வே எங்கள் முன்னிலையில் தோன்றி தன்னைக் காண்பித்து, 'இது நான் அருளிய வேதம்' என்று கூறும்வரை அதை நாங்கள் நம்பமாட்டோம். அல்லாஹ் உங்களிடம் பேசுவது போல் எங்களிடம் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டனர்.
எனவே மூஸா (அலை) அவர்களில் சிறந்த எழுபது பெயரை தேர்ந்தெடுத்தார். அவர்கள் அல்லாஹ் வை நேரில் காண வேண்டும் என கூறிய போதே அவர்களை ஓர் இடி முழக்கம் பற்றிக் கொண்டது. (2:55). "அதனால் அவர்கள் அனைவரும் மரணித் தார்கள்."
அப்போது மூஸா (அலை) இஸ்ரவேலர்களை தனியே அழைத்துச் சென்று அவர்களை கொன்று விட்டீர் என கூறுவார்கள் என்ற பயத்தினால் அழுது இறைவனிடத்தில் வேண்டினார்: "என்னு டைய இறைவா! இஸ்ராயிலின் சந்ததிகளுக்கு நான் என்ன பதில் கூறுவேன்? அவர்களில் சிறந்தவர்களை நீ மரணிக்க வைத்துவிட்டாய். இது உன்னுடைய விருப்பமாய் இருந்திருந்தால் முதலிலே என்னையும் இவர்களையும் அழித்தி ருக்கலாமே! சில அறிவீலீகள் செய்த விஷமச் செயலிற்காக எங்களை அழிக்கலாமா?" என்று.
அல்லாஹ் அவருடையப் பிரார்த்தனையை அங்கீகரித்து அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பினான். இறந்த அந்ந எழுபது பேரும் காளைக் கன்றின் சிலையை வணங்கியவர்கள் என்று மூஸா (அலை) மிற்கு அல்லாஹ் அறிவித் தான். அல்லாஹ் ஒவ்வொருவராக உயிரோடு எழுப்பி, மற்றவர்கள் உயிர்பெற்று எழுவதைக் காணுமாறு செய்தான்!
الحمدلله
No comments:
Post a Comment