Sunday, March 8, 2026

 

வி- 18

                   ரமலான் வினா -  விடை

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

18. சுவனம் செல்ல என்னென்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹீ தாலா திருக்குர்ஆனில் பட்டியலிட்டு கூறியிருக்கின்றான்அப்பட்டியல் என்ன?

இப்பட்டியலை கொண்டு சுவனம் செல்ல உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். அர்-ரஹ்மானுடைய நல்லடியார்கள் (யாரென்றால்):

★ [25:63] “அவர்கள் தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசிட முற்பட்டால் "ஸலாம்" சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.”

★ [25:64] “இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர் களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவில் இருப்பார்களே அவர்கள்".

★ [25:65] “எங்கள் இறைவனே! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும் என்று கூறுவார்கள்.”

★ [25:67] இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்ய மாட்டார்கள்; உலோபித் தனமாகக் குறைக்கவும் மாட்டார்கள் எனினும், இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள்.

★ [25:68] “அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்க மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்ல மாட்டார்கள், விபசா ரமும் செய்யமாட்டார்கள். ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

★ [25:69] “கியாமத் நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக் கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.”

★ [25:70] “ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான செய்கை கள் செய்கிறார்களோ (நற்) – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான்.  மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப் போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.”

★ [25:71] “இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப் புத் தேடியவர் ஆவார்.”

★ [25:72] “அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய (ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார் களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.”

★ [25:73] “இன்னும் அவர்கள், தங்கள் இறைவ னுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட் டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்த னையுடன் செவி சாய்ப்பார்கள்).”


மேலும் அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பர்கள்:

எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (25:74).

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர் களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர் கொண்டழைக் கப்படுவார்கள். (25:75). அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வ தற்கும், வசிப்பதற்கும் அழகிய இடமாகும். (25:76).

இந்த பட்டியல், சுவர்க்கம் செல்ல ஆசைப்படு வோர்க்கு நல்ல பட்டியல் அல்லவா?


الحمدلله

 

No comments:

Post a Comment

  வி - 18                     ரமலான் வினா -   விடை السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 18. சுவ...