வி- 15
ரமலான் வினா - விடை
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
15. பிபி மரியமின் குழந்தை தொட்டில் பருவத் தில் கூறிய திருக்குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடுக.
பிபி மர்யம் குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் அவரை ஏசினார்கள். (19:27) தம் குழந்தையிடமே கேட்கும் படி அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள். (19:29)
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (19:30)
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை நற்பாக்கியமு டையவனாக) ஆக்கியிருக்கின் றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் கால மெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு கட்டளையிட்டு இருக் கின்றான். (19:31)
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக் காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது. (19:33)
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (அலை) பற்றிய உண்மையான சொல் ஆகும். (19:34)
الحمدلله
No comments:
Post a Comment