Thursday, March 5, 2026

 

வி- 14

                    ரமலான் வினா -  விடை

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

14. அல்லாஹீதாலா எங்கு, எப்போது காகத்தை திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்?

ஆதமுடைய இரு குமாரர்களும் (ஹாபில் மற்றும் காபில்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப் படவில்லை; (பின்னவர்- காபில்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்- ஹாபில்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர் களிடமிருந்து தான்” என்று கூறினார்.(5:27)

பின்னவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார். (5:30)

பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்கு வதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென் பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத் திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். (5:31)

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்ப தற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். (5:32)

الحمدلله

No comments:

Post a Comment

  18. திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ َ           ...