வி- 13
ரமலான் வினா - விடை
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
13. 'அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்'. (74:26). யார் அவன்?
விடை: வாலித் இப்னு முகீரா.
வாலித் இப்னு முகீரா ஒரு புகழ்பெற்ற அரபு கவிஞர், செல்வாக்கு மிக்கவர், மக்காவின் பணக்கார குறைஷி தலைவர். நபி (ஸல்) சூரா ஃபுஸ்ஸிலத் (ஹாமீம் ஸஜ்தா) ஓதுவதை வாலித் முதன் முதலாக கேட்டான்: அரபி மொழியிலும் கவிதையிலும் தனித்து நின்றவனான அவனுக்கு, "ஹாமீம்" என்ற முதல் வார்த்தையே அவனுள் மிக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. முழு சூராவும் கேட்ட அவன், அதன் நடை, சொல்நயம், இசைநயம், உண்மை, வழிகாட்டுதல், அதிசய தக்க சொற்கள் மற்றும் அதன் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட தரம் - அவற்றால் மிகவும் கவரப்பட்டான்.
அவன் கூறியது, "நான் எதை சொல்ல? இங்கு என்னை கவிதையிலும் உரைநடையிலும் மிஞ்ச ஒரு மனிதரும் இல்லை, ஒரு ஜின்னும் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் ஓதியது, இங்கு நிலவும் அறிவுக்கு இணையற்றது. அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்கிறேன் அது கவிதையும் இல்லை, சூன்யமும் இல்லை, பைத்தியகாரனின் பிதற்றலும் அல்ல. அவர் கூறுவது அல்லாஹ்வின் சொற்களாகும். அதில் ஒரு இனிமை இருக்கிறது. வசீகரம் இருக்கிறது, அதன் உச்சவரம்பு பயனளிக்கக்கூடியது. அதன் கீழ்வரம்பு பொங்கிவழியும் கருணையை கொண்டது. அது ஆதிக்கம் செலுத்தக்கூடியது. ஆனால் அது ஆதிக்கத்திற்கு உட்பட்டதல்ல, அது எல்லாவற்றையும் நொறுக்கிவிடும் தன்மை உடையது." என்றான்.
குரைஷிகள் இதைப் பற்றி அறிந்ததும், அவர்கள் ஒன்றுகூடி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, வலீத் (இஸ்லாத்திற்கு) மாற்றப்பட்டால், அனைத்து குரைஷிகளும் மதம் மாறுவார்கள்' என்று கூறினர். அதனால் அபூ ஜஹ்ல், வாலித்தின் வீட்டிற்குச் சென்று, "நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம், உங்கள் மக்களை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று நம்ப வைக்கும் ஒன்றைச் சொல்லுங்கள்" என்று மிரட்டினாரன். குரைஷிகளிடையே தனது தலைமைத்துவத்தையும் பதவியையும் விட்டுவிட வாலித் விரும்பவில்லை. அவர் அபூ ஜஹ்லிடம் சிறிது காலம் "என்னைத் தனியாக விட்டுவிடும்" என்று கூறினார்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் அவன் தன் வீட்டில் எப்படி தனியே யோசித்தான் என்பதை படம்பிடித்து காட்டுகின்றான்:
“என்னையும், நான் தனித்தே படைத்தவனை யும் விட்டுவிடும். இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத் தேன். அவனிடம் இருக்கி றவர்களாகவுள்ள புதல்வர் களையும் கொடுத்தேன். இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்பு களை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன். பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டு மென்று அவன் ஆசைப்படு கிறான். அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான். விரைவி லேயே, அவனைக் கடின மான ஒரு சிகரத்தின்மேல் ஏற்றுவேன்! நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான். அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்? பின்னரும், அவன் அழிவானாக!
குர்ஆனின் வசனங்களை அவன் நோட்டமிட்டான். பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவ னாக) கடுகடுத்தான்; இன்னும் (முகஞ்) சுளித்தான். தன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான். அப்பால் அவன் கூறினான்: “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை. “இது மனிதனின் சொல்லல் லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.)” [74: 11-25]
அவனுடைய அறிவுரை பிரகாரம் குரைஷிகள் நபி (ஸல்) அவர்களை சூனியக்காரர் என்றும் அவருடைய சூனியச் செய்தி ஒருவனை அவனுடைய தந்தையிடமிருந்தும், சகோதரனிடமிருந்தும், மனைவியிடம் இருந்தும் மற்றும் குடும்பத்தினரிடமிருந்தும் பிரிக்க வைக்கிறது என்றும் கூறினர். இதையே பயன்படுத்தி வர்த்தக கண்காட்சிக்கு வரும் மக்களை எச்சரித்து இஸ்லாத்தில் சேராமல் தடுத்தனர் குறைஷிகள். அல்லாஹ் அவனை இரண்டு தடவை சபித்துவிட்டான்!
அல்லாஹ் கூறினான்:அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன். “ஸகர்” என்னவென்பதை உமக்கு எது விளக்கும்? அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது. (அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும். (74:26 - 29).
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பானாக!
الحمدلله
No comments:
Post a Comment