Monday, January 12, 2026

 

7. எந்த இரு திருக்குர்ஆனின் வசனங்கள் இந்த படத்தை பார்த்தவுடன் நினைவிற்கு வருகின்றன?


السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்: சூரா ஃபாத்திர், வசனம் 27. (35:27&28).


[أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجْنَا بِهِۦ ثَمَرَٰتٍۢ مُّخْتَلِفًا أَلْوَٰنُهَا ۚ وَمِنَ ٱلْجِبَالِ جُدَدٌۢ بِيضٌۭ وَحُمْرٌۭ مُّخْتَلِفٌ أَلْوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٌۭ].

وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلْأَنْعَـٰمِ مُخْتَلِفٌ أَلْوَٰنُهُۥ كَذَٰلِكَ ۗ إِنَّمَا يَخْشَى ٱللَّهَ مِنْ عِبَادِهِ ٱلْعُلَمَـٰٓؤُا۟ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ

"நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கு கின்றோம். மலைகளில் வெண்மையான, சிவந்த, பற்பல விதமான நிறங்கள் கொண்ட, சுத்தக் கரிய நிறமுடைய கோடுகள் உள்ளன......." (35:27).

"இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்கள், அறிவுள்ளவர்கள் - அவனுக்கு அஞ்சுவர். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக்க மன்னிப்பவன்." (35:28).

அல்லாஹ் இப்பூமியில் பலவற்றை படைத்துள் ளான். இவை வீண்விளையாட்டிற்கு அல்லாமல், நாம் புரிந்து கொள்ள முடியாத ஒரு குறிக்கோளுக் காக, அல்லது தேவைக்காக படைத்துள்ளான், வடிவமைத்துள்ளான்.

அவனுடைய படைப்புகள் ஒன்று போல் இல்லாமல் ஒவ்வொன்றும் தனித் தன்மையோடு இருக்கின் றன. உதாரணமாக  எல்லா மரங்களும் ஒரே தண்ணீரை உறிஞ்சுகின்றன. ஒரே பூமியில் வளர்கின்றன. ஆனால் நிறத்திலும், சுவையிலும் மாறுபட்ட கனிகளை அவை தருகின்றன.

மலைகள் தூரத்திலிருந்து பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் தோற்றமளித்தாலும், உற்று நோக்கு கையில் அவற்றிலுள்ள  கனிமவளத்தை பொறுத்து பல வித நிறங்களில் கோடுகள் தென்படும்.

மலையின் தாது பொருட்கள் ஆக்ஸிஜனுடனும் மழை நீரோடும் சேர்ந்து ஆக்ஸைடுகளாக மாறுகின்றன.  இரும்பு ஆக்ஸைட் சிகப்பு நிறத் தையும், லெமனைட் மற்றும் கோதைட் ஆக் ஸைட் பழுப்பு/மஞ்சள் நிறத்தையும், மேக்டைட் ஆக்ஸைட் கருப்பு நிறத் தையும், இரும்பு சல்பைட் மஞ்சள் நிறத்தையும், இரும்பு சிலிகேட் பச்சை நிறத்தையும் கொடுக்கும்.  வானவில்லின் நிறங்களைப் போன்று வண்ணமயமான கோடுகளுடன் சூரிய ஒளியில் அவைமின்னும்.
இவ்வற்புதமான வானவில் மலைகள் உலகத்தின் ஒன்பது பகுதிகளில் உள்ளன.

அல்லாஹ் மனிதனைப் படைக்கும் போது பூமியின் பல இடங்களிலிருந்து மண்ணை எடுத்து கலவை ஆக்கினான். அதனால் மனிதர்கள் அவர்கள் வாழும் இடத்தை பொறுத்து  நிறம்  கொண்டு இருக்கின்றன. அது போலவே ஊர்வன மற்றும் கால்நடைகளின் நிறங்கள் மாறுபட்டுள்ளன.

கற்பனை பண்ணி கூட  பார்க்க முடியாத இந்த அதிசயங்கள், வரையரையற்ற, எண்ணற்ற படைப்புகள் - படைத்தவனின் சிறந்த அறிவை, ஆற்றலை பறைசாற்றுகின்றன. அவன் இணை யற்ற திட்டம் வகுப்பவன், தனித்தன்மை வாய்ந்த படைப்பாளன், ஒப்புவமையற்ற வடிவமைப் பாளன், பல தலை சிறந்த படைப்புகளை உண்டாக்கியவன், சக்தி வாய்ந்தவன், திறமை சாலி! இத்தகைய பண்புகளுடைய அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்!

الحمدلله






No comments:

Post a Comment

  மறுமையில் உயிர்த்தெழுவதை நம்பாதவர் கேட் கும் கேள்விகளுக்கு அல்லாஹ் கூறும் பதில்கள் السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱ...