Sunday, January 11, 2026


 

6. இப்படத்தைப் பார்த்து, திருக்குர்ஆனில் இது எந்த ஆயத்தை குறிக்கிறது என்று கூறவும்.                                                   


 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

சூரா யூனுஸ், வசனம் 92. (10:92). "எனினும் உனக்குப் பின்னுள்ளவர் களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது)." (10:92).

ஆணவமும் இறைநிராகரிப்பும், தீய செயல்கள் செய்வதும் இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையான தண்டனைக்கு உட்பட்டது. இதை மக்கள் உணர அல்லாஹ் சுப்ஹனஹுதாலா மூன்று அத்தாட்சிகளை பின் வரும் உலக மக்கள் படிப்பினை பெறுவதற்காக விட்டு வைத்திருக்கின்றான்.

1.  நபி நூஹ் (அலை) மின்  கப்பல்.

2.  ஃபிர்அவுனின் பதப்படுத்தப்பட்ட உடல்.

3.  லூத் (அலை)மின் தலைகீழாக புட்டப்பட்ட ஊர்.

ஃபிர்அவ்ன் தன்னை ஒரு கடவுள் என்று கூறிக் கொண்டுஅல்லாஹுதாலாவின்  அத்தாட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தும்பொய் எனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான் (20:56). பிடிவாதமும், தற்பெருமையும், வீம்பும் கொண்ட அக்கொடுங்கோலன்  நம்பிக்கையாளர்களை வரம்பு மீறி கொடுமை செய்தான்.

அவர்களை காப்பாற்ற அல்லாஹ் மூஸா (அலை)  கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக்  (20:77) கடலைக் கடக்க வைத்து, கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்த  ஃபிர்அவுனையும்  (10:90).  அவனது படைகளோடு மூழ்கடித்துவிட்டான். (20:78). மூழ்க ஆரம்பித்ததும் ஃபிர்அவுன் காலம் கடந்து நம்பிக்கை கொள்ள "வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது." (40:45).

1979-ம் ஆண்டு  முனைவர் மோர்சஸ் புகைலி தன் குழுவினரோடு ஆராய்ச்சி செய்ததில் ராம்ஸெஸ் II என்ற மம்மி, மற்ற மம்மிகளை விட உப்பு அதிகமாக இருந்ததால் அது, கடலில் மூழ்கி இறந்து இருக்கக் கூடும் என்று கண்டு பிடித்தார். ஃபிர்அவுன் மூழ்கடிக்கப் பட்ட வரலாற்றை ஆராய்ந்த மோர்சஸ் புகைலி அதில் குர்ஆனின் வசனங்களால் பெரிதும் கவரப்பட்டார்.  அவர் 1979-ல் எழுதியபுத்தகத்தில் "ராம்ஸெஸ் II" என்ற அரசன் தான் மூஸா (அலை) காலத்து ஃபிர்அவுன்.

لحمدلله

No comments:

Post a Comment

  Q-5                                                                          Ramzan Quiz السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَ...