Sunday, January 11, 2026

5. இப்படத்தைப் பார்த்து, திருக்குர்ஆனில் இது எந்த ஆயத்தை குறிக்கிறது என்று கூறவும்.                                                   

 


السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

யூஸீஃப்  (அலை) காலத்து எகிப்திய அரசன்:

"நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்என்று (தம் பிரதானிகளையழைத்து ) கூறினார்.  (12:43)

அதற்கு அவர்கள்: “(இவை) குழப்பமான கனவுகளே யாகும், எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங்கூற அறிந்தவர்கள் அல்லர்என்று கூறினார்கள். (12:44)

யூஸூஃபோடு (அலை) (சிறையிலிருந்து) விடுதலையடைந்த, இருவரில் ஒருவன், நீண்ட காலத்திற்குப் பின்னர், [யூஸுஃப் (அலை)] நினைவு கூர்ந்துஇக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை  (யூஸுஃப் (அலை) மிடம்) அனுப்பி வையுங்கள்என்று சொன்னார். (12:45)


(
சிறையில் யூஸுஃப் ( அலை) மைக் கண்ட) அவர், “ அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
(12:46)

யூஸூஃப் ( அலை) அக்கனவின் விளக்கத்தை கூறினார்:

நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.

பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தை யுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்று விடும்பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்என்று கூறினார்.
(12:47 to 49)

இதை அரசரிடம் கூற அவர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃப்  [அலை] வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றி லிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்என்று கூறினார். (12:54).

அல்லாஹ் தான் நாடியவர்களை இப்படி உயர்த்துவான்!


لحمدلله


No comments:

Post a Comment

  Q-5                                                                          Ramzan Quiz السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَ...