Sunday, January 18, 2026

 

12. எந்த இரு திருக்குர்ஆனின் வசனங்கள் இந்த படத்தை பார்த்தவுடன் நினைவிற்கு வருகின்றன?

 

                              

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

 اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗo بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤی اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ ۟

[75: 3 4]

"(மரித்து மக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று அவன் விரல் நுனி களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்!" (அல் கியாமா, 75:3 & 4).

நம்மை படைத்தவன் நம்மை எப்படி முதன்முறை யாக படைத்தானோ, அவனே நம் விரல் நுனி களை மறுபடியும் அதே துல்லியத்துடன் படைக்க ஆற்றல் கொண்டவன்.


திருக்குர்ஆன் இறங்கிய காலத்தில் விரல் நுனி களில் உள்ள ரேகைகள் முக்கியத்துவம் இல்லாத வெறும் கோடுகளாக கருதப்பட்டன. புகழ் பெற்ற சார்ல்ஸ் டார்வினின் ஒன்றுவிட்ட சகோதரரான, சர் வில்லியம் கால்ட் என்பவர் நிறைய
கைரேகைகளை ஆராய்ச்சி செய்து, "இரண்டு மனிதர்களின் கைரேகைகள் ஒன்றாய் இருப்பதில்லை, ஒத்த இரட்டையர்கள் உட்பட." என 1856 ல் தான் கண்டுபிடித்தார்.

நீர் நிறைந்த கர்ப்பப்பையில் கருவின் அசைவி னால் உண்டாகும் அழுத்தம் மற்றும் உராய்வு காரணமாக, வளரும் குழந்தையின் சிறிய விரல்களில் முகடுகள் தோன்றுகின்றன. இம்முகடு கள் இருக்கும் இடத்தில் மேல் தோலும் கீழ் தோலும் ஒட்டி காணப்படும். அவை குழந்தை பிறந்த பின் உடல் வளர்ச்சிற்கேற்ப வளர்ந்து எவ்வித மாற்றமு மின்றி சாகும் வரை அழியாமல் அப்படியே இருக்கும்.


தற்போது பல துறைகள், தான்-இயங்கி கைரேகை அடையாள கருவியை கொண்டு கைரேகைகளை சேகரித்தும், படமெடுத்தும், பதிவு செய்தும், ஆராய்ந்தும், சேமித்தும் வருகை பதவிலும் வைத்துள்ளன.

அல்லாஹ், ரேகைகளை உடலின் சில சென்டி மீட்டர் அளவே உள்ள, உள் ளங்கை, பாதம், கைவிரல்கள், கால் விரல்கள் ஆகியவற்றில் வடிவமைத்துள் ளான். வேற்றுமையிலும் தனித்தன்மை கொண்ட கைரேகைகள் அல்லாஹ் வின் மாபெரும் ஆற்றலையும் சிறப்பையும்
அத்தாட்சிகளையும் பறை சாற்றுகின்றன.

الحمدلله


No comments:

Post a Comment

  மறுமையில் உயிர்த்தெழுவதை நம்பாதவர் கேட் கும் கேள்விகளுக்கு அல்லாஹ் கூறும் பதில்கள் السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱ...