13. மூஸா (அலை) மிற்கு கொடுக்கப்பட்ட பத்து கட்டளைகளைப் போல் முஹம்மது நபி (ஸல்) கொடுக்கப்பட்ட கட்டளைகள் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்
பட்ட கட்டளைகள்:
★ அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்
[17:22].
★ அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்க லாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன்
விதித் திருக்கின்றான்; [17:23].
★ இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை
அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த் துவீராக; [17:24]
★ (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய)
மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்ப வனாக இருக்கின்றான். [17:25]
★ இன்னும், உறவினருக்கும், ஏழைகளுக்கும்
வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து
விடுவீராக)! வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர். [17:26]
★ நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான் களின் சகோதரர் களாவார்கள்;
[17:27].
★ இறைவனின் அருளை ஆதரவு வைத்து (பொருளை) எதிர்ப்பார்த் திருக்கும்
சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு வந்தால்) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக! [17:28]
★ (உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப்
பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்;
[17:29]
★ நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை
செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை
(வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும்
பிழையாகும். [17:31]
★ நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக
அது மானக்கேடானதாகவும். தீய வழியாகவும்
இருக்கின்றது. [17:32]
★ நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து
விடாதீர்கள்; [17:33]
★ அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின்
பொறுப்பேற் றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய
பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்)
விசாரிக்கப்படும். [17:34]
★ மேலும் நீங்கள் அளந்தால், அளவைப்
பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு
நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில்
அழகானதும்.[17:35]
★ எதைப்பற்றி உமக்கு (த் தீர்க்க) ஞானமில் லையோ அதை(ச் செய்யத்)
தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன்
செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.[17:36]
★ மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க
வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப்
பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து
விடவும் முடியாது. [17:37]
★ இவையனைத்தின் தீமையும் உம் இறைவனி டத்தில் வெறுக்கப்பட்ட தாக
இருக்கிறது. [17:38]
الحمدلله