19. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
19. உங்களுக்கு தெரியும், நம் நபி பெருமானார் ﷺ அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார் என்று. வேறு எந்த நபி பரிந்துரைக்கு தகுதியானவர்?
பதில்: வேற எந்த நபியும் பரிந்துரை செய்ய முடியாது.
பரிந்துரைக்கும் சக்தி நபி ﷺ அவர்களுக்கு அல்லாஹ் பரிசாக கொடுக்கவில்லை. அது மற்றவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருக்கும் போது தூங்காமல் விழித்து, இரவு நேர தொழுகையை கடினமாக தொழுது தன் உம்மத்திற்காக பெற்ற தகுதி. இதனால் அவர் "மகாமே மஹமூத்" (புகழும், மகிமையும் கொண்ட உறைவிடம்) என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.
அல்லாஹ் தஹஜூத் தொழும் படி நபி ﷺ அவர்களுக்கு கட்டளை இட்டான்:
"இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜூத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமே மஹ்மூத்” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்". (17:79).
அதுவும் இல்லாமல் அவருடைய உம்மாஹ்விலுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு தடவை "அதான் (தொழுகை அழைப்பு)" கேட்ட பிறகு, "யா அல்லாஹ்! சரியாக நிறுவப்பட்ட தொழுகையின் அதிபதியே!
முஹம்மத் நபிக்கு மற்ற எல்லா
உயிரினங்களை விட மேலான "மகாமே மஹமூத்" என்றழைக்கப்படும் உயர்ந்த மேலான அந்தஸ்த்தை, உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் அவருக்கு நீ வாக்களித்தபடி தந்தருள்வாயாக!" என்று பிரார்த்திப்பர்.
இறை தூதர் கூறினார், "யார் இந்த துவாவை ஓதுகிறார்களோ
அவர்களுக்கு நான் நிச்சயமாக மறுமை நாளில் பரிந்துரைப்பேன்"
என்று.
பரிந்துரை பற்றிய ஹதீஸ்:
மஃபத் பின் ஹிலால் அல்-அன்ஸி அவர்கள் கூறியதாவது: "நாங்கள், அதாவது, பஸ்ராவில் இருந்து சிலர் ஒன்று கூடி, , தாபித் அல்-புன்னானியிடம் எங்கள் பரிந்துரையின் ஹதீஸைப் பற்றி அவரிடம் கேட்பதற்காக சென்றோம். அங்கிருந்து நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரஜி) விடம் கேட்பதற்காக கூட்டாகச் சென்றோம். அனஸ் (ரஜி) அவரது அரண்மனையில் இருந்தார், எங்கள் வருகை அவரது துஹா தொழுகையுடன் ஒத்துப்போனது. நாங்கள் உள்ளே நுழைய அனுமதி கேட்டோம், படுக்கையில் அமர்ந்திருந்த அவர் எங்களுக்கு அனுமதி வழங்கினார். நாங்கள் தாபித்திடம் கூறினோம், முதலில் அவரிடம் பரிந்துரை செய்யும் ஹதீஸைத் தவிர வேறு எதையும் கேட்காதீர்கள் என்று. அவர், "ஓ அபு ஹம்ஸா! பாஸ்ராவைச் சேர்ந்த உங்கள் சகோதரர்கள் உங்களிடம் பரிந்துரை செய்யும் ஹதீஸைப் பற்றி கேட்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.
எனவே அவர்கள் அவரிடம் வருவார்கள், இப்ராஹீம் (அலை) கூறுவார்: 'நான் [அதைச் செய்யும்] நிலையில் இல்லை. அல்லாஹ் யாரிடம் நேரிடையாக பேசி, தவ்ராத் கொடுத்தானோ, அந்த ஊழியரான மூஸா (அலை) மிடம் செல்லுங்கள்.
எனவே அவர்கள் அவரிடம் வருவார்கள், மூஸா (அலை) கூறுவார்: நான் [அதைச் செய்யும்] நிலையில் இல்லை - மேலும் அவர் ஒருவரின் உயிரை எடுத்ததைப் (குர்ஆன் அத்தியாயம் 28 வசனங்கள் 15-16) பற்றி குறிப்பிடுவார். தன் இறைவனின் முன் வர வெட்கப்பட்டு, "அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான ஈஸா (அலை) மிடம் செல்லுங்கள், அவர் அல்லாஹ்வின் வார்த்தையால் பிறந்தவர்' என்று கூறுவார்.
எனவே அவர்கள் ஈஸா (அலை) மிடம் வருவார்கள், அவர் கூறுவார்: "நான் [அதைச் செய்யும்] நிலையில் இல்லை. முஹம்மது ﷺ மிடம் செல்லுங்கள்" என்பார்.
'ஒரு சிறிய எறும்பு அல்லது கடுகு விதையின் எடைக்கு சமமான இதயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் அதிலிருந்து வெளியே அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறப்படும். நான் சென்று அவ்வாறே செய்து திரும்பவும் அதே புகழோடு அவரைத் துதித்து, அவர் முன் விழுந்து விழுந்து வணங்குவேன். பிறகு, 'ஓ முஹம்மதே ﷺ! உங்கள் தலையை உயர்த்தி பேசுங்கள், ஏனென்றால் நீங்கள் கேட்கப்படுவீர்கள், கேளுங்கள், ஏனென்றால் உங்களுக்கு (உங்கள் கோரிக்கை) வழங்கப்படும்; மேலும் மன்றாடுங்கள், ஏனெனில் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்.' நான் ஆண்டவரே, என் உம்மாஹ், என் உம்மாஹ் என்பேன். 'அப்போது அவர் கூறுவார்,'எவருடைய இதயங்களில் இலகுவான, இலகுவான கடுகு வரை நம்பிக்கை உள்ளதோ அவர்களைப் போய் வெளியே எடுங்கள். (அவர்களை) நெருப்பிலிருந்து வெளியே எடுக்கவும்.' நான் போய் அப்படியே செய்வேன். [அல்-புகாரி, 7510).
பரிந்துரை யாருக்கு பயனளிக்கும்:
★ உம்மாவில் மிகப் பெரிய பாவங்களை செய்தவருக்கு. (ஸஹீஹ், சுனன் அல்- திர்மிதி, 1983);
★ நல்ல
செயல்களும் கெட்ட செயல்களும்
சரிசமமாக இருந்ததால் சுவர்க்கத்தில் நுழையாத முஸ்லிம்களுக்கு;
★ கணக்கே
கேட்காமல் சுவர்க்கத்தில் நுழைபவருக்கு;
★ தன்
பெரிய தந்தை அபு தாலிபிற்கு நரக நெருப்பில் தண்டனையை இலேசாக்கும்படி.
★ விசுவாசிகள்
மறுமை நாளில் பயங்கரங்களிலிருந்து
விடுபட்டு விரைவாக சொர்க்கம் நுழைய.
الحمدلله
No comments:
Post a Comment