13. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
13. எந்த இரண்டு நபிமார்கள் பிறப்பதற்கு முன் அல்லாஹ்வால் பெயரிடப்பட்டவர்கள் யார்?
பதில்:
1. குன் என்ற அல்லாஹ்வின் கட்டளையால் தந்தையில்லாமல் பிறந்த பிபீ மர்யமின் மகன் ஈஸா மஸீஹ் (அலை).
2. பிள்ளை ஒன்று வேண்டும் என்று பிரார்த்தித்த வயதான ஜகரிய்யா தம்பதியருக்கு பிறந்த யஹ்யா (அலை).
மர்யமின் மகன் ஈஸா (அலை) பற்றி திருக்குர்ஆன் கூறியிருப்பது:
(3:45) "மலக்குகள் பீபி மர்யமை பார்த்து கூறினார்கள: “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகின்றான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா (அலை) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்"
(19:30) “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்."
(19:31). “இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை நற்பாக்கியமுடை யவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் கால மெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்".
(19:32) “என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்); நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை".
(19:33). “இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது".
(19:34) "இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மை யான சொல் (இதுவே ஆகும்)".
யஹ்யா (அலை) பற்றி திருக்குர்ஆன் கூறியிருப்பது:
(19:7) “ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்)."
[19:12] (அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
[19:13] "அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பய பக்தியுடையவராகயிருந்தார்"
[19:14] "மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை".
[19:15] "ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்".
الحمدلله
No comments:
Post a Comment