67. எப்படி தொழுகையை நிறைவேற்றுவது
என்று முஃமின்களுக்கு விதியாக்கப் பட்டுள்ளது
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்: நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது (4:103).
இப்னு அப்பாஸ் (ரஜி) கூறுகிறார்: "தொழுகை ஹஜ்ஜை போலவே குறித்த நேரத்தில் தொழ கடமை ஆக்கப்பட்டுள்ளது" இதையே பலரும் வலியுறுத்தி உள்ளனர். அப்துல்லா பின் மஸுத் (ரஜி) கூறியதாக புகாரி (496) & முஸ்லிம் (122) பதிவு செய்துள்ளது: "நான் நபி ﷺ மிடம் கேட்டேன்: எந்த காரியம் அல்லாஹ்விற்கு மிக்க விருப்பமானது என்று? அதற்கு அவர் "குறித்த நேரத்தில் தொழுவது" அதன் பிறகு எது? என்று கேட்டதற்கு: "பெற்றோரை மரியாதையுடன் நடத்துவது" என்றார். "அதன் பின்?" என்று கேட்டதற்கு, "அல்லாஹ்விற்காக ஜிஹாத் செய்வது." என்று பதில் கூறினார். ஆகையால் குறித்த நேரத்தில் தொழுது விடுங்கள்.
அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறியுள்ளான்:
★ "இன்னும்,
(கவனமற்ற) தொழுகையாளி களுக்குக் கேடுதான். அவர்கள்
எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக (வும், அசிரத்தையாக) வும் இருப்போர்." (அல் மாவூன், 4 & 5).
★ "மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடை யோருக்கு அன்றி மற்றவர் களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்."(2:45)
★ "தூய்மையடைந்தவன்,
திட்டமாக வெற்றி பெறு கிறான். மேலும், அவன்
தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது
கொண்டும் இருப்பான்." (அல் ஆலா, 107:14 & 15)
★ "ஈமான்
கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையயோர் என்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்." (அல் மூமினூன்,
1 & 2).
★ தம்
தொழுகையின் மீது நிலைத்திருக்கும் தொழுகையாளிகள்
(அல் மா ரிஜ், 22&23) எவர்கள் தங்கள் தொழுகைகளைப்
பேணிக் கொள்கின் றார்களோ அவர்கள் (ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில்
கண்ணியப்படுத்தப்பட்டவர் களாக இருப்பார்கள். (அல் மாரிஜ், 34 & 35).
★ "இன்னும்
தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடான வற்றையும் தீமையையும் விட்டு
விலக்கும். நிச்சய மாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும்
பெரிதா(ன சக்தியா)கும்" (29:45).
★ "என்னையே
வணங்கிவீராக! என்னை தியானிக் கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்து வீராக". (தாஹா,
20:14)
★ "தொழுகைகளை
(குறிப்பாக) நடுத்தொழு கையை பேணிக் கொள்ளுங்கள்! (தொழுகையின் போது) அல்லாஹ்வின்
முன்னிலையில் உள் அச்சத்துடன் நில்லுங்கள்!" (2:238).
பிரார்த்திப்போமாக:
தொழுகையை
நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியில் உள்ளோரையும்
ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"
(இப்ராஹிம், 14: 40).
رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن
ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
الحمدلله
No comments:
Post a Comment