மினாவிற்குத் திரும்பும் போது, வழியில்
முதலிஃபா / அல்-மஷர் அல்-ஹராமில் இரவைக் கழிக்கிறார்கள்.
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
சூரியன் மறைவதற்கு முன்பு ஹஜ் யாத்ரீகர்கள் அரஃபாவிலிருந்து புறப்பட்டு, மினாவிற்குத் திரும்பும் போது, வழியில் முதலிஃபா (ஜமா) / அல்-மஷர் அல்-ஹராமில் இரவைக் கழிக்கிறார்கள். (குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) "ஆனால் நீங்கள் அரஃபாவிலிருந்து புறப்படும்போது, அல்-மஷர் அல்-ஹராமில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். அவன் உங்களுக்கு வழிகாட்டியபடியே அவனை நினைவுகூருங்கள், ஏனெனில், நிச்சயமாக, அதற்கு முன்பு நீங்கள் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்." [சூரா அல்-பகரா 2:198]
பிரார்த்தனையின் மூலம் ஆன்மீக உயர்வை நாடும் யாத்ரீகர்களுக்கு முதலிஃபா ஒரு அமைதியான சூழலை வழங்குகிறது. அவர்கள் மஃக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளை, தனித்தனியே அதான் மற்றும் இகாமா கூறி தொழுவார்கள். யாத்ரீகர்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் இதனால் அதான் பின் இரவு வரை மிதமான சப்தத்துடன் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகையை அவ்விரவில் தவிர்த்தார்கள். இல்லாவிடில் அது சுன்னா ஆகிவிடும் என்று. தொழுது முடித்தப் பின் இளைப்பாறி, அதிகாலையிலே ஃபஜர் தொழுவார்கள். 49 முதல் 70 வரையிலான கூழாங்கற்களைச் சேகரித்துக் கொள்வார்கள். பின் மினாவிற்கு பயணிப்பார்கள்.
الحمدلله
No comments:
Post a Comment