Saturday, June 20, 2026

 

ஹஜ் அல்லது உம்ராவின் போது சிறந்த செயல்கள்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அபூபக்கர் அஸ்-சித்தீக் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “எந்தச் செயல்கள் சிறந்தவை?” என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர்கள், “(ஹஜ் அல்லது உம்ராவின் போது தல்பியாவிற்காகக்) குரலை உயர்த்துவதும், (பலிப்பிராணியின்) இரத்தத்தைச் சிந்துவதும்” என்று கூறினார்கள். ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)  சுனன் இப்னுமாஜா : 2924

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தியாகத் திருநாளன்று ஆதமின் மகன் இரத்தத்தைச் சிந்துவதை விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான வேறு எந்தச் செயலையும் செய்வதில்லை. அது மறுமை நாளில் அதன் கொம்புகள், குளம்புகள் மற்றும் முடிகளுடன் வரும். அதன் இரத்தம் தரையை அடைவதற்கு முன்பே அல்லாஹ்விடம் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது (மற்றும் அவனால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது). எனவே, நீங்கள் (இந்த தியாகத்தை நிறைவேற்றுவதில்) மனநிறைவு கொள்ளுங்கள்." ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)  சுனன் இப்னுமாஜா : 3126

الحمدلله

No comments:

Post a Comment

To get the highest status from Allah SWT