Saturday, June 20, 2026

 

ஜம்ராவில் கல்லெறிதல்

السلام عليكم ورحمة الله وبركاتة

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அஸ்-ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார் கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினா மஸ்ஜிதுக்கு அருகிலுள்ள (முதல்) ஜம்ராவில் கல்லெறியும்போதெல்லாம், ஏழு சிறு கற்களால் அதன் மீது எறிவார்கள்; ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு அவர்கள் முன்னே சென்று, கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தியவாறு (நீண்ட நேரம்) நிற்பார்கள்; (அல்லாஹ்விடம்) பிரார்த் தனை செய்வார்கள்.  பிறகு அவர்கள் இரண்டா வது ஜம்ராவுக்கு வந்து, ஏழு சிறு கற்களால் அதன் மீது எறிவார்கள்; ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு பள்ளத் தாக்கை ஒட்டியுள்ள இடது புறமாக இறங்கி, கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்திய வாறு நின்று (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்வார்கள். பிறகு அவர்கள் அகபாவுக்கு அருகிலுள்ள ஜம்ராவுக்கு வந்து, ஏழு சிறு கற்க ளால் அதன் மீது எறிவார்கள்; ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு அவர் கள் (அங்கிருந்து) திரும்பிச் சென்று விடுவார்கள்; அதன் அருகில் நிற்க மாட்டார்கள்.  [ஸஹீஹுல் புகாரி : 1753]

 الحمدلله

                                  

No comments:

Post a Comment

6 திருக்குர்ஆன் வசனமும் அது தொடர்பான ஹதீஸ்: السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِ يمِ                  ...