Monday, April 20, 2026

 

நற்செயல்கள்:

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூன்று நபர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகையில் ஒதுங்கினர். மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து அவர்களது குகை வாசலை மூடிக் கொண் டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் அல்லாஹ்விற்காகச் செய்த நற்செயல் களை நினைத்துப்பாருங்கள். அவற்றைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் (இக்கஷ்டத்தை) உங்களை விட்டு நீக்கக்கூடும்' என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். எனக்குச் சிறிய குழந்தைகளும் இருந்தனர். அவர்களுக்காக நான் (கால்நடைகளை) மேய்த்து வருவேன். நான் (மேய்ச்சலிலிருந்து) திரும்பினால் பால் கறப்பேன்; என் குழந்தைகளுக்கு முன்பாக என் பெற்றோ ருக்கே (பாலை) புகட்டுவேன். ஒரு நாள் மேய்ச்சல் என்னைத் வெகுதூரம் கொண்டு சென்றுவிட்டது. மாலை நேரம் வரை நான் திரும்பவில்லை. (நான் வந்தபோது) அவர்கள் இருவரும் உறங்கிவிட் டிருந்தனர். நான் எப்போதும் போல் பால் கறந்து, பாத்திரத்துடன் அவர்கள் தலைமாட்டில் நின்றேன். அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பவும் எனக்கு மனமில்லை; அவர்களுக்கு முன் குழந்தைக ளுக்குக் கொடுக்கவும் மனமில்லை. என்காலடியில் குழந்தைகள் (பசியால்) அழுதுகொண்டிருந்தனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், வானம் தெரியும் அளவிற்கு எங்களுக்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்துவாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களுக்கு வானம் தெரியும் அளவிற்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்தினான்.

இரண்டாமவர் கூறினார்: 'இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் (என் மாமன் மகள்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதிலேயே மிகக் கடுமையான நேசத்தை அவள் மீது நான் கொண்டேன். நான் அவளை அடைய விரும்பினேன். ஆனால் நான் நூறு தீனார்கள் கொண்டுவரும் வரை அவள் மறுத்து விட்டாள். நான் (கடுமையாக) உழைத்து நூறு தீனார்களைச் சேகரித்து அவளிடம் கொண்டு சென்றேன். அவள் கால்களுக்கு இடையே நான் (உறவாட) அமர்ந்தபோது, 'அல்லாஹ்வின் அடியாரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிமையின்றி முத்திரையை உடைக்காதே' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு விலகினேன். (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், இதிலிருந்து எங்களுக்கு விடுதலை யளிப்பாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களுக்கு (பாறையை இன்னும் சற்று) விலக்கினான்.

மற்றவர் கூறினார்: 'இறைவா! நான் ஒரு பணியாளரை ஒரு 'ஃபரக்' (அளவை) நெல்லுக்குக் கூலியாக அமர்த்தினேன். அவர் வேலையை முடித்துத் தன் கூலியைக் கேட்டார். நான் அவருக் குரியதை அவரிடம் கொடுத்தபோது, அவர் (அற்ப மெனக் கருதி) அதை விட்டுவிட்டு, வெறுத்துச் சென்றுவிட்டார். நான் அப்பயிரைத் தொடர்ந்து பயிரிட்டு (விளைச்சலைப் பெருக்கி), அதிலிருந்து மாடுகளையும் அதற்கென ஒரு இடையனையும் வாங்கினேன். பின்னர் அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! எனக்கு அநீதி இழைக்காதே! என் கூலியைத் தந்துவிடு' என்றார். நான், 'அந்த மாடுகளையும் அதன் இடையனையும் எடுத்துக்கொள்' என்றேன். அவர், 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! என்னைக் கேலி செய்யாதே' என்றார். நான், 'உன்னை நான் கேலி செய்ய வில்லை; அந்த மாடுகளையும் இடையனையும் எடுத்துக்கொள்' என்றேன். அவர் அதை ஓட்டிச் சென்றார். (இறைவா!) இதை நான் உனது திருப் பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந் தால், எஞ்சியிருக்கும் பகுதியையும் விலக்குவா யாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர் களை (முழுமையாக) விடுவித்தான்." [ஸஹீஹுல் புகாரி : 5974]

الحمدلله 

 

No comments:

Post a Comment

  Good (righteous) deeds السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ Narrated Ibn `Umar (RA): Allah...