Monday, April 20, 2026

 

சொர்க்கத்தின் பொக்கிஷம்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

ஹதீஸ்:  

அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு போர்ப்பயணத்தில் இருந்தபோது, நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும்போதும், அல்லது ஒரு குன்றின் மீது ஏறும்போதும், அல்லது ஒரு பள்ளத் தாக்கில் இறங்கும்போதும் தக்பீர் கூறி எங்கள் குரல்களை உயர்த்தினோம். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நெருங்கி வந்து, "மக்களே! உங்களை (நீங்களே) வருத்திக்கொள்ளாதீர்கள்! ஏனெனில் நீங்கள் செவிடரையோ அல்லது மறைவானவனையோ அழைக்க வில்லை; மாறாக, நீங்கள் (அனைத்தை யும்) செவிமடுப்பவனையும், உற்றுநோக்கு பவனையுமே அழைக்கிறீர்கள்" என்று கூறினார் கள். பிறகு (என்னிடம்), "ஓ அப்துல்லாஹ் பின் கைஸ்! சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்றான ஒரு வார்த்தையை நான் உமக்குக் கற்றுத் தரட்டுமா? (அது): 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' (அல்லாஹ்வின் உதவியின்றி எந்த சக்தியோ, வலிமையோ இல்லை)" என்று கூறினார்கள். 

[ஸஹீஹுல் புகாரி : 6610]

الحمدلله

 

No comments:

Post a Comment

  Good (righteous) deeds السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ Narrated Ibn `Umar (RA): Allah...