Monday, March 2, 2026

வி- 11

ரமலான் வினா -  விடை

 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

12. அல்லாஹ் (அவருக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பி யவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்கா விட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) (2:251) யார் அவர்?

விடை:

الحمدلله



 

 

Q-12                                                                     

Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

12. Allah gave him the kingship and prophethood and taught him fromthat which He willed. And if it were not for Allah checking [some] people bymeans of others, the earth would have been corrupted. (2: 251). Who is thatProphet?

 

الحمدلله

 

 

வி- 11

ரமலான் வினா -  விடை

 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

11.  அல்லாஹ் தன் திருக்குர்ஆனில், "அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்". (21:78) என்று குறிப்பிட்டுள்ளான். யார் அந்த இருவர்?

விடை: தாவூத் (அலை) மற்றும் சுலைமான் (அலை).

இப்னு காதிர் தனது தஃப் ஸீரில் இந்த வழக்கைக் குறிப்பிடுகிறார்: இப்னு மஸ்`ஊத் கூறியதாக இப்னு ஜரீர் பதிவு செய்துள்ளார்: "திராட்சைகள் காய்த்து தொங்கிய தோட்டத்தில் பக்கத்து வயலின் செம்மறி ஆடுகள் இரவில் மேய்ந்து வீணாக்கி விட்டன. இருவரும் தாவூத் (அலை) வந்து தீர்ப்பு கேட்டனர். திராட்சை வயலின் உரிமையாளருக்கு அந்த  ஆடுகளை கொடுக்க வேண்டும் என்று தாவூத் (அலை) தீர்ப்பளித்தார்".

வயலில் ஏற்பட்ட இழப்பு ஆடுகளின் மதிப்புக்கு சமம். ஆனால் ஆடுகளின் உரிமையாளருக்கு ஆடுகளைத் தவிர வேறு எந்த வருமானமும் இல்லை. அவர், "எந்த வருமானமும் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்?" என்றார்.

பக்கத்தில் இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சுலைமான் (அலை)  தனது தந்தையிடம், 'இப்படி இல்லை, அல்லாஹ் வின் தூதரே!' என்று பணிவுடன் கூறினார். தாவூத் (அலை) 'அப்படியானால் எப்படி?' என்று கேட்டார்.

சுலைமான் (அலை) கூறினார்: 'ஆடுகளின் உரிமையாளரிடம் வயலைக் கொடுத்து, அதை கண்காணித்து உழைத்து மீண்டும் பழைய நிலைக்கு வரும் வரை திராட்சை கொடிகளை வளர்த்து வர வேண்டும். ஆடுகளை அவர் வயலின் உரிமையாளரிடம் கொடுத்து, திராட்சைகள் மீண்டும் வளரும் வரை ஆடுகளிலிருந்து அத்தோட்டக்காரர் பயனடையட்டும். பின்னர் நிலத்தை, காய்த்த திராட்சைகளோடு அவற்றின் உரிமை யாளரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும், அவர் ஆடுகளை அவற்றின் உரிமையாளரிடம்  திருப்பிக் கொடுக்கவேண்டும்'.  இதனால் இரு தரப்பினரும் தங்கள்  நிரந்தர சொத்தை இழக்காமல் மீட்டுக் கொண்டார்கள்.

அல்லாஹ் கூறினான்: "(வழக்கை) சுலைமான் (அலை) அவர்களுக்குப் புரிய வைத்தோம்; மேலும் அவர்கள் இருவரில் ஒவ்வொருவருக்கும் ஞானத்தையும் அறிவை யும் வழங்கினோம். (21:79) அல்லாஹ் சுலைமான் (அலை) அவர்களைப் புகழ்ந்தான். ஆனால் தாவூத் (அலை) அவர்களைக் கண்டிக்க வில்லை.

இந்தத் தீர்ப்பு சுலைமான் (அலை) அவர்களை ஒப்பில்லா, ஞானம் மற்றும் நீதியின் உருவமாக நிறுவியது. இது  "சுலைமான் ஞானி"  (Sulaiman the Wise) என்ற பட்டத்தை அவருக்கு தந்தது. 

ஆனால் அல்லாஹ் தாவூத் (அலை) அவர்களுக்கு பிரிதொரு இடத்தில் கூறினான்: "ஓ தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்;

மேலும் அல்லாஹ் கூறினான்: "நிச்சயமாக தாவூத் (அலை) மிற்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு" என்று (38:25).  ஸுலைமான் (அலை)  கூறினார்:  "நாங்கள் எல்லா விதப் பொருள்களி லிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். (27:16)

الحمدلله

 

Q-11                                                                     

                             Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

11. Allahuthala says in Quran, "We were witness to their judgement." [21:78] This statement refers to whom?

Answer: Dawud (AS) & Sulaiman (AS).

Ibn Khathir in his tafsir referred the case:

Ibn Jarir recorded that Ibn Mas`ud said: "Grapes which had grown and their bunches were spoiled by the sheep in night. Dawud (AS) ruled that the owner of the grapes should keep the sheep". The loss in the field is equalent to the value of sheep. But the owner of the sheep had no other income other than sheep. He said, "How will I live without any income?"

So Sulaiman (AS) humbly said to his father, `Not like this, O Prophet of Allah!' Dawud (AS) said, `How then?' Sulaiman (AS) said: `Give the field to the owner of the sheep and let him tend them until they grow back as they were, and give the sheep to the owner of the field  and let him benefit from them until the grapes have grown back as they were. Then the grapes should be given back to their owner, and the sheep should be given back to their owner.' So both the parties recover their losses without permanent loss of property.

This judgment established Sulaimon (AS) as a, figure of, unparalleled, wisdom and justice, often referred to as "Sulaiman the Wise".

Allah said: "We made Sulaiman (AS) to understand (the case); and to each of them We gave wisdom and knowledge. (21:79) Allah praised Suleiman (AS) but He did not condemn Dawud (AS).'' He advised Dawud (AS): "O Dawud! Verily, We have placed you as a successor on the earth; so judge you between men in truth and follow not your desire -- for it will mislead you from the path of Allah" (38:26). This verse is a guidance and warning to all Judges.

Allah bestowed Dawud (AS) "Nearness to Us and a good place of return." (38:25). Dawud and Sulaimon (AS’) said with gratitude, “Praise [is due] to Allah, who has favored us over many of His believing servants." (27:16).

الحمدلله


வி- 10

                 ரமலான் வினா -  விடை                 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

10. நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களில்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார். (11:45) யார் அந்த தந்தை தன் இறைவனிடம் தன் மகனுக்காக முறையிட்டது?

விடை: தந்தை நூஹ் (அலை)

நிச்சயமாக நாம் நூஹ் (அலை) அவர்களை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம், அவர் ஐம்பது ஆண்டுகள் குறைய ஆயிரம் ஆண்டுகள் அவர்களிடையே இருந்தார் (29:14). அவர் தனது சமூகத்தாரை ஈமானின் பக்கம் அழைத்தபோது, அவர்கள் தங்கள் காதுகளில் விரல்களை வைத்துக்கொண்டு, அவரைக் கேட்பதையோ அல்லது பார்ப்பதையோ தவிர்க்க தங்கள் ஆடைகளால் தங்களை மூடிக்கொண்டனர். பின்னர், நிச்சயமாக, அவர் அவர்களை வெளிப்படையாக அழைத்தார்; அந்தரங்கமாக அவர்களிடம் முறையிட்டார், ஆனால் அவரது அழைப்பு (அவர்கள்) (சத்தியத்திலிருந்து) வெளியேறுவதைத் தவிர வேறொன்றையும் அதிகரிக்கவில்லை. (71:5 & 9)

அவர்கள் கூறினார்கள்: “ஓ நூஹ்! நீ எங்களுடன்  அதிகமாக நீ தகராறு செய்துள்ளீர். இப்போது நீ உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால், நீர்  அச்சுறுத்துவதை எங்களிடம் கொண்டு வாரும். (11:32 & 33)

எனவே அல்லாஹுதாலா நூஹ் (அலை)யிடம், அவனது அருளாலும் வழிகாட்டுதலாலும் ஒரு கப்பலை உருவாக்கும்படி கட்டளையிட்டார். (11:37). கப்பல் கட்டி முடித்ததும், நூஹ் (அலை) ஒவ்வொரு இன உயிரினங்களையும் (ஆண் மற்றும் பெண்), அவரது குடும்பத்தினர் மற்றும் எண்பது விசுவாசிகளை  அக்கப்பலில் ஏற்றினார். அல்லாஹ்வின் கட்டளைப்படி பூமியிலிருந்து அடுப்பு பொங்கி எழுந்தது, வானத்திலிருந்து தண்ணீர் கொட்டியது, கப்பல் மலைகள் போன்ற அலைகளுக்கு மத்தியில் அல்லாஹ்வின் கட்டளையுடன் பயணித்தது. நூஹ் (அலை) தன்னைப் பிரிந்து சென்ற தனது மகனை அழைத்து, “ஓ என் மகனே! எங்களுடன் ஏறிக்கொள், அக்கிரமக்காரர்களுடன் இருக்காதே” (11:42)

மகன் பதிலளித்தார்: “நான் ஒரு மலையில் ஏறுவேன், அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்.” நூஹ் (அலை) அவர்கள் கூறினார்கள்: “இன்று அல்லாஹ்வின் கட்டளை யிலிருந்து தப்பிபபவர்  வேறு யாரும் இல்லை, அவன் கருணை காட்டுகிறவனைத் தவிர” அவர்களிடையே ஒரு அலை வந்து, அவன் (அந்த மகன்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகிவிட்டான். (11;43)

நூஹ் (அலை) அவர்கள் தம் இறைவனை அழைத்து, “ஓ என் இறைவா! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்! நிச்சயமாக உன் வாக்குறுதி உண்மையானது, நீயே நீதிமான்.” (11:45)

எல்லாம் அறிந்த அல்லாஹ் கூறினான்: “ஓ நூஹ் (அலை)! நிச்சயமாக அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல; நிச்சயமாக அவன் செயல் அநீதியானது, எனவே உமக்குத் தெரியாததை என்னிடம் கேட்காதீர்! நீர் அறியாதவர்களில் ஒருவனாகிவிடாதபடிக்கு நான் உம்மை உபதேசிக்கிறேன்.” (11:46).

நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் வருந்தி பச்சாதபட்டு, “ஓ என் இறைவா! எனக்கு அறிவு இல்லாததை உன்னிடம் கேட்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து என் மீது கருணை காட்டா விட்டால், நான் நஷ்டமடைந்த வர்களில் ஒருவ னாகிவிடுவேன்” என்று பிரார்த்தித்தார்கள். (11:47)

الحمدلله



 

 

Q-10                                                                      

                                  Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

10. "My Lord, indeed my son is of my family; and indeed, Your promise is true; and You are the most just of judges!" [11:45]. Who is that father?

Answer: Nuh (AS)

And We certainly sent Nuh (AS) to his people, and he remained among them a thousand years minus fifty years (29:14). When he invited his people to faith, they responded with extreme arrogance by putting their fingers in their ears and covering themselves with their garments to avoid hearing or seeing him.Then verily, he called to them openly; appealed to them in private but all his calling  added nothing but to (their) flight (from the truth). (71:5 & 9)

They said: “O Nuh (AS)! You have disputed with us and much have you prolonged the dispute with us, now bring upon us what you threaten us with, if you are of the truthful. (11:32 & 33)

So Allahuthala asked Nuh (AS) to construct a ship under His inspiration and guidance. (11:37). As he finished, he embarked each (male and female) in each kind of two and his family and eigty believers Nuh (AS). By Allah's Command the oven gushed forth from the earth, water poured from sky and the ship sailed with Allah's Command amidst the waves like mountains. Nuh (AS) called out to his son, who had separated himself (apart), “O my son! Embark with us and be not with the wrong doers.” (11:42)

The son replied: “I will betake myself to a mountain, it will save me from the water.” Nuh (AS) said: “This day there is no saviour from the Decree of Allah except him on whom He has mercy.” And a wave came in between them, so he (the son) was among the drowned. (11;43)

Nuh (AS) called upon his Lord and said, “O my Lord! Verily, my son is of my family! And certainly, Your Promise is true, and You are the Most Just of the judges.” (11:45)

All Knower Allah said: “O Nuh (AS)! Surely, he is not of your family; verily, his work is unrighteous, so ask not of Me that of which you have no knowledge! I admonish you, lest you be one of the ignorants.” (11:46).

Nuh (AS) repented much to Allah invoking Him: “O my Lord! I seek refuge with You from asking You that of which I have no knowledge. And unless You forgive me and have Mercy on me, I would indeed be one of the losers.” (11:47)

الحمدلله


வி- 9     

                  ரமலான் வினா -  விடை                 

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

9. அவர்கள் புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது  அனுப்பினோம், (34:16) எந்த இன மக்களுக்கு இந்த தண்டனை இறக்கப்பட்டது?

விடை: ஸபா மக்கள்

ஸபா என்பது கடந்த காலத்தில் வாழ்ந்த ஏமன் மன்னர்களையும் மக்களையும் குறிக்கிறது. அவர்களின் பண்டைய மன்னர்கள் துப்பா என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு பெரிய, வலுவான அணை யைக் கட்டினார்கள், அதனால் இரண்டு மலைகளுக்கு இடையில் நீர் உயர்ந்த மட்டத்தை எட்டியது.

அல்லாஹ் அவர்களைப் பற்றி கூறுகிறான்: "நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்தி லிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்”  (34:15)

அவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தனர். ஏராளமான உணவுகள், பயிர்கள் மற்றும் பழங்கள் அவர் களுக்கு கிடைத்தன. வானிலை நன்றாக இருந்ததன் காரணமாக அவர்களின் நிலத்தில் ஈக்கள், கொசுக்கள் அல்லது எந்த வகையான பூச்சிகளின் தொல்லை இல்லை. மக்கள் ஆரோக்கியமாக இருந்தனர், மேலும் அல்லாஹ் அவர்களை நன்கு கவனித்துக் கொண்டான்.

அல்லாஹ் தூதர்களையும் அவர்களிடம் அனுப்பினான். அல்லாஹ் நாடியவர்கள் அதைப் பின்பற்றினார்கள். ஆனால் பலர் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; அவர்கள் அல்லாஹ்வை விட்டு சூரியனை வணங்கத் தொடங்கினர். ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம். (34:16).

அல்லாஹுதாலா  அவ்விடத்தில் பெரிய பெரிய எலிகளை பெருகச் செய்தான். அவற்றைக் கட்டுப் படுத்த அவர்கள் பூனைகளை கொண்டு வந்தனர். இருப்பினும் எலிகள் அதிகமாக வளர்ந்து அணையில் துளைகளை உருவாக்கியதால் அணை இடிந்து விழுந்தது.

பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் தண்ணீர் பாய்ந்து அவற்றின் பாதையில் உள்ள அனைத்தையும் அழித்தது. மலைகளில் வலது மற்றும் இடதுபுற மரங்களிலிருந்து தண்ணீர் வடிந்ததால், அந்த மரங்கள் காய்ந்து அழிந்து போயின. அந்த அழகான, பழம்தரும் மரங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைக் கொண்டு மாற்றப்பட்டன, மேலும் அவர்களின் இரண்டு தோட்டங்களையும் கசப்பான கெட்ட பழங்களை உற்பத்தி செய்யும் தோட்டங்களாக மாற்றினோம்.

குர்ஆனின் பிறிதொரு இடத்தில், சுலைமான் (அலை) அவர்களின் பறவை ஹுத்ஹுத் வந்து கூறிற்று: “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.” “நிச்சயமாக அவர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது. “அவளும், அவளுடைய சமூகத்தார் களும், சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. (27:22 - 24)

அவர்கள் நன்றி கெட்டதன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம்.  வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா? (34:17).

இன்னும், அவர்களுக்கிடை யிலும், நாம் பரக்கத்து  செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில்  (பாதை களையு)ம் அமைத்தோம்; “அவற்றில் இரவுகளிலும், பகல்களி லும் அச்சமற்ற வர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்) (34:18)

ஆனால், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!” என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்;

எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்தி லிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான். (34:20 & 21)

எனவே, அவர்கள்  வெள்ளத்தால் சிதறடிக்கப்பட்டு ஸபாவைச் சுற்றியுள்ள நாடுகளில்  குடியேறினர்.

الحمدلله



Q-9                                                                      

                                       Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

9. They turned away [refusing], so We sent upon them the flood of the dam (34:16).  Which people were afflicted with this punishmentst?

Answer: People of Saba

Saba' refers to the kings and people of the Yemen in the past.Their ancient kings are called as Tubbah. They built a huge, strong dam and the water reached a high level between the two mountains.

Allah says about them: Indeed, there was for Saba’ (Sheba) a sign in their dwelling place, – two gardens on the right hand and on the left (and it was said to them) “Eat of the provision of your Lord, and be grateful to Him, a fair land and an Oft-Forgiving Lord. (34:15)

They lived in luxury with plentiful provisions, crops and fruits. In their land there were no flies, mosquitoes or fleas, or any kind of vermin. This was because the weather was good and the people were healthy, and Allah took care of them. Allah sent them messengers telling them to eat and give thanks to Him by worshipping Him alone, and they followed that for as long as Allah willed. They started to worship the sun instead of Allah.

But they turned away (from the obedience of Allah), so We sent against them Sail Al-‘Arim (flood released from the dam), and We converted their two gardens into gardens producing bitter bad fruit, and tamarisks, and some few lote-trees. (34:16).

Allahuthala sent beasts from the earth to the dam, large rats. They brought cats to control them. But rats overgrow and destroyed the dam by producing holes and the dam collapsed causing great flood. The waters rushed through the bottom of the valley and destroyed everything in their path. As the water drained from the trees on the mountains, to the right and the left, those trees dried up and were destroyed. Those beautiful, fruit-bearing trees were replaced with something altogether different, and We converted their two gardens into gardens producing bitter bad fruit.

Hoopie (bird) of Sulaiman (AS) said to him, "I found a woman ruling over them, she has been given all things, and she has a great throne. I found her and her people worshipping the sun instead of Allah, and Shaytan has made their deeds fair seeming to them, and has barred them from the way, so they have no guidance.'' (27:22-24) 

Like this We requited them because they were ungrateful. And never do We requite in such a way except those who are ungrateful (34:17)

And We placed between them and the towns which We had blessed, towns easy to be seen, and We made the stages (of journey) between them easy (saying): “Travel in them safely both by night and day.” (34:18)

But they said: “Our Lord! Make the stages between our journey longer,” and they wronged themselves, so We made them as tales (in the land), and We dispersed them all, totally. (34:19) Verily, in this are indeed signs for every steadfast grateful (person).

And indeed Iblis did prove true his thought about them, and they followed him, all except a group of true believers and he (Iblis) had no authority over them, except that We might test him, who believes in the Hereafter from him who is in doubt about it. And your Lord is a Hafiz over everything.  (34:20 & 21)

So they were punished with a flood which scattered them throughout the lands around Saba' in all directions.

الحمدلله


வி - 11 ரமலான் வினா -   விடை   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 12. அல்லாஹ் (அவருக்கு) அர...