Thursday, February 5, 2026

 

7. குர்ஆன் & ஹதீஸ்:  சூரா ஃபாத்திஹா பற்றிய ஹதீஸ்கள்:

     


                                                         

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

அபூ சயீத் பின் அல்-முஅல்லா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: "நான் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள், ஆனால் நான் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நான் தொழுது கொண்டிருந்தேன்" என்று கூறினேன்". அதற்கு அவர்கள், "அல்லாஹ், 'அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்குப் பதிலளியுங்கள்' (8:24) என்று கூறவில்லையா?" என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், "நீர் பள்ளிவாசலை விட்டு வெளியே றுவதற்கு முன்பு, குர்ஆனிலேயே மகத்தான சூரா ஒன்றை நான் உமக்குக் கற்றுத் தருகிறேன்" என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் (பள்ளி வாசலை விட்டு) வெளியேற நினைத்தபோது, நான் அவர்களிடம், "நீங்கள் என்னிடம் 'குர்ஆனிலேயே மகத்தான சூரா ஒன்றை உமக்குக் கற்றுத் தருகி றேன்' என்று கூறவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (அதாவது, எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே). அதுவே திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங் களும் (அஸ்ஸப்வுல் மஸானீ), எனக்கு வழங்கப் பட்ட மகத்தான குர்ஆனும் ஆகும்" என்று கூறினார்கள். [ஸஹீஹுல் புகாரி: 4474]

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் தவ்ராத்திலோ அல்லது இன்ஜிலிலோ உம்முல் குர்ஆன் (அல்-ஃபாத்திஹா) போன்ற எதையும் வெளிப்படுத்தவில்லை, இந்த ஏழு வசனங்கள் திரும்பத் திரும்ப ஓதப்படும் .மேலும் (அல்லாஹ் கூறினான்) அது எனக்கும் என் அடியாருக்கும் இடையில் பிரிக்கப் பட்டுள்ளது, மேலும் அவன் கேட்டது அவனுக்குக் கிடைக்கும் என்று கூறினார்.” [ஜாமி அத்-திர்மிதி,  3125]

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யாரேனும் ஒரு தொழுகையைத் தொழுது, அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதவில்லையானால் அது குறை யுள்ளதாகும் - (இவ்வாறு) மூன்று முறை கூறினார் கள் - அது நிறைவற்றதாகும்." அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம், "நாங்கள் இமாமுக்குப் பின்னால் இருக்கிறோமே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: "அதனை உனக்குள்ளே (மனதிற்குள்) ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹுதாலா கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: 'தொழுகையை எனக்கும் என் அடியானுக்கும் இடையில் நான் இரு பாதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்.'

அடியான் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்'** என்று கூறும்போது, 'என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்' என்று அல்லாஹு தாலா கூறுகிறான். அவன் 'அர்ரஹ்மானிர் ரஹீம்' என்று கூறும்போது, 'என் அடியான் என்னைப் போற்றிப் புகழ்ந்து விட்டான்' என்று அல்லாஹு தாலா கூறுகிறான். அவன் 'மாலிகி யவ்மித் தீன்' என்று கூறும்போது, 'என் அடியான் என்னை மகிமைப்படுத்திவிட்டான்' என்று அவன் கூறு கிறான். – ஒரு முறை, 'என் அடியான் (தன் விவகாரத்தை) என்னிடம் ஒப்படைத்துவிட்டான்' என்றும் கூறினான். அவன் 'இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தயீன்' என்று கூறும்போது, 'இது எனக்கும் என் அடியானுக்கும் இடையில் உள்ளது; என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்' என்று அவன் கூறுகிறான்.

அவன் 'இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம், ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மக்ளூபி அலைஹிம் வலல்லாளீன்' என்று கூறும்போது, 'இது என் அடியானுக்குரியது; என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்' என்று அவன் கூறுகிறான்." என சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அலா இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு யஃகூப் அவர்கள் நோயுற்று வீட்டிலிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். அப்போது நான் இது குறித்து அவரிடம் கேட்ட போது, அவர் எனக்கு இதை அறிவித்தார். [ஸஹீஹ் முஸ்லிம்:395 a]

அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்: நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது ஓரிடத்தில் தங்கினோம். அப்போது ஒரு பணிப் பெண் வந்து, “இந்தக் கூட்டத்தின் தலைவர் (விஷ ஜந்துவால்) தீண்டப்பட்டுள்ளார். எங்களில் ஆண்கள் யாரும் இங்கில்லை. உங்களில் மந்திரிப் பவர் (ருக்யா செய்பவர்) எவரேனும் உண்டா?” என்று கேட்டார். எங்களுள் ஒருவர் அவருடன் சென்றார். அவருக்கு மந்திரிக்கத் தெரியும் என்று நாங்கள் (இதற்கு முன்) எண்ணியிருக்கவில்லை. அவர் (தலைவருக்கு) மந்திரித்தார்; அவர் குணமடைந்தார். ஆகவே, அவருக்கு முப்பது ஆடுகளைக் (கொடுக்குமாறு) அ(த் தலை)வர் உத்தரவிட்டார். மேலும் எங்களுக்குப் பாலைக் குடிக்கத் தந்தார்.

அவர் திரும்பியதும் நாங்கள் அவரிடம், “உமக்கு (நன்றாக) மந்திரிக்கத் தெரியுமா? அல்லது (முன்பே) மந்திரிப்பவராக இருந்தீரா?” என்று கேட்டோம். அவர், “இல்லை, ‘உம்முல் கிதாப்’ (அல்-ஃபாத்திஹா அத்தியாயத்தைக்) கொண்டே தவிர (வேறெதையும் கொண்டு) நான் மந்திரிக் கவில்லை” என்றார்.  நாங்கள் (எங்களுக் கிடையில்), “நபி (ஸல்) அவர்களிடம் நாம் செல்லும் வரை - அல்லது கேட்கும் வரை - (இந்த ஆடுகள் விஷயத்தில்) எதையும் செய்யாதீர்கள்” என்று பேசிக் கொண்டோம். நாங்கள் மதீனாவை அடைந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கூறினோம். அதற்கு அவர்கள், “அது ஒரு மந்திரிப்பு (ருக்யா) என்று அவருக்கு எப்படித் தெரியும்? (அந்த ஆடுகளைப்) பங்கிடுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கை ஒதுக்குங்கள்” என்று கூறினார்கள். [ஸஹீஹ் புகாரி: 5007]

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது, தமக்கு மேலே ஒரு கிறீச் சிடும் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே அவர் தம் தலையை உயர்த்தி, "இது வானத்தில் இன்று திறக்கப்பட்ட ஒரு வாசல்; இன்றே தவிர இதற்கு முன் ஒருபோதும் இது திறக்கப்பட்டதில்லை" என்று கூறினார்கள். பிறகு அதிலிருந்து ஒரு வானவர் இறங்கினார். அப்போது (ஜிப்ரீல் [அலை]), "இவர் பூமிக்கு இறங்கியுள்ள ஒரு வானவர்; இன்றே தவிர இதற்கு முன் ஒருபோதும் இவர் இறங்கியதில்லை" என்று கூறினார்கள்.

பிறகு (அந்த வானவர்) ஸலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு வழங்கப் பட்டுள்ள இரண்டு ஒளி களைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள். உங்க ளுக்கு முன்னிருந்த எந்த நபிக்கும் அவை வழங் கப்படவில்லை. (அவை:) ஃபாத்திஹா அல்-கிதாப் மற்றும் சூரத்துல் பகராவின் இறுதி வசனங்களா கும். அவற்றிலிருந்து ஓர் எழுத்தை நீங்கள் ஓதி னாலும், அது உங்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதில்லை" என்று கூறினார். [ஸஹீஹ் முஸ்லிம்: 806]

الحمدلله

No comments:

Post a Comment

  Narrated Abu Huraira  (RA): I heard Allah's Messenger (SAW) saying." By Allah! I ask for forgiveness from Allah and turn to Him ...