சித்ரதுல் முன்தஹா (سِدْرَةُ الْمُنْتَهَىٰ) என்றால் என்ன?
السلام عليكم
ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்
சித்ரத் அல்-முன்தஹா என்பதன் நேரடி அர்த்தம், "வானயெல்லையின் உயரத்தில் இருக்கும் இலந்தை மரம்" அல்லது "யாரும் கடந்து செல்ல முடியாத இலந்தை மரம்".
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரில் (அலை) அவர்களுடன் மேற்கொண்ட அற்புதமான வான இரவுப் பயணம் (இஸ்ரா மற்றும் மி'ராஜ்) இந்த இலந்தை மரத்தின் அருகே முடிந்தது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்'ஊத் [ரலி] கூறினார்: இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் ஆறாவது வானத்தில் உள்ள எல்லை யிலுள்ள மரத்திற்குக் கொண்டுவரப்பட்டார், பூமியிலிருந்து ஏறுபவை அங்கே அடைகின்றன. மேலும் மேலிருந்து வருபவை, அதில் இருந்து இறக்கப்படுகின்றன. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை எது சூழ்ந்து கொண்டிருந்ததோ" (53:16) என்பது அதன் ஒப்பில்லா வர்ணமயமான ஒளியைக் குறிக்கிறது" என்று அவர் கூறினார்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மூன்று விஷயங்கள் அருளப்பட்டன: அவருக்கு ஐந்து முறை தொழுகை வழங்கப்பட்டது, சூரா-அல்-பகராவின் கடைசி வசனங்கள் அவருக்கு இறக்கப்பட்டன, மேலும் அல்லாஹ்வுடன் எதையும் இணைக்காத அவரது உம்மத்தில் கடுமையான பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது" [மிஷ்கத் அல்-மசாபிஹ் 5865]. இமாம் அஹ்மதும் இதைப் பதிவு செய்துள்ளார்.
இந்த புனித இலந்தை மரம் கம்பீரமான, அற்புதமான மரம், எப்போதும் வர்ணங்கள் மாறிக்கொண்டேயிருக்கும் மரம், அதன் வேர்கள் ஆறாவது வானத்திலும், அதன் கிளைகள் ஏழாவது வானத்திலும் உயர்ந்து உள்ளன. யானையின் காது போன்ற பெரிய இலைகளுடன், பானை போன்ற பெரிய பழங்களுடனும் திகழ்கிறது. இது தெய்வீக ஒளியுடனும், விவரிக்க முடியாத கண்கவர், வண்ணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது."
அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள் அஸ்மா (ரலி) அவர்கள், " வான எல்லையில் உயர்ந்த இலந்தை மரத்தைப் பற்றிக் கூறப்பட்டபோது, "ஒரு குதிரை சவாரி செய்பவர் அதன் கிளைகளின் நிழலில் நூறு ஆண்டுகள் பயணிக்க முடியும்" அல்லது "நூறு சவாரி செய்பவர்கள் அதன் நிழலில் தஞ்சம் அடையலாம்; அதில் தங்கத்தினால் ஆன வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. அதன் பழங்கள் மண் ஜாடிகளைப் போல இருக்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்டதைக் கேட்டதாகக் கூறினார். [மிஷ்கத் அல்-மசாபிஹ் 5640]
அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பி. மாலிக் (ரலி) தெரிவித்தார்: (இந்த இலந்தை மரத்தின் வேரிலிருந்து) ஓடும் நான்கு ஆறுகளை அவர் கண்டார்: இரண்டு கண்களுக்கு தெரியும் ஆறுகள் மற்றும் இரண்டு மறைக்கப்பட்ட ஆறுகள். நான் ஜிப்ரில் (அலை) அவர்களிடம் கேட்டேன், "இவை எந்த ஆறுகள் ?" என்று. அவர் பதிலளித் தார்: இரண்டு மறைக்கப்பட்ட ஆறுகள் சொர்க்கத் தின் ஆறுகள், மேலும் இரண்டு கண்களுக்கு தெரியும் ஆறுகள் நைல் மற்றும் யூப்ரடீஸ்." என்று. [ஸஹிஹ் முஸ்லிம் 164 அ].
இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவரது உண்மையான வடிவத்தில் கண்டார். "ஜிப்ரிலுக்கு அறுநூறு இறக்கைகள் இருந்தன. அவரது இறக்கைகளின் இறகுகளிலிருந்து விழும் வண்ணமயமான முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள் உதிர்ந்து கொண்டிருந்த போது நான் அவரைக் கண்டேன்" என்று கூறினார்.
அல்லாஹுதாலா இந்த சூழலையும் இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் கண்டதை விவரிக்கும் போது, "திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.” [53:19] என்று அல்லாஹ் குர்ஆனில் பதிவு செய்துள்ளான்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
பூமியில் உள்ள இலந்தை மரம் கடுமையான சூழலில் சிறிய இலைகள் மற்றும் பழங்களுடன் வளரும் ஒரு முள் மரம். சொர்க்கத்தில் அதே மரம் மிகப்பெரியதாகவும், அற்புதமானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், ஒப்பிடமுடியாத அழகுடனும் அல்லாஹ்வின் சிறந்த அடையாள மாக நிற்கிறது. இது போலவே எளிமையான, அடக்கமான விசுவாசிகள் தங்கள் நம்பிக்கை, சரணடைதல், சிறந்த வழிபாடு, தவறுகளுக்காக வருந்தி மன்னிப்பு கேட்பது, நற்செயல்கள் செய்வதன் காரணமாக சிறந்த மனிதர்களாக சொர்க்கத்திற்கு உயர்த்தப்படுகின்றனர். அல்லாஹ் எதையும் செய்ய ஆற்றல் உடையவன்.
No comments:
Post a Comment