28. Ramzan Quiz
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
வேகச் சுற்று:
1. எந்த மனிதர்கள் நம் வசனங்களின் மீது
உறுதி கொள்ளவில்லையென்று சொல்லிக் காண்பிக்கும் [பூமியிலிருந்து வெளியாகும்]
பிராணி.
பதில்: [ دَآبَّةً
مِّنَ الْاَرْضِ- பூமியிலிருந்து வெளியாகும் பிராணி]
(27:82).
2. சொர்க்கத்தின் இஞ்சி சுவை கலந்த பானம்.
பதில்: [زَنْجَبِيْلًا
- ஸன்ஜபீல்] ((76:17)
3. “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு
மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? என்று
கேட்டு, ஃபர்அவுனுக்கு
நீண்ட உபதேசம் செய்தவர்.
பதில்: ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு
நம்பிக்கை கொண்டவர் (40:28).
4. பெயரிடப்பட்ட சுட்ட களிமண்ணால் ஆன
கற்களை பொழிந்து அழிந்த சமுதாயம்.
பதில்: லூத் (அலை) சமுதாயம்.
5. எந்த இரண்டை தடை செய்வதற்காக மூன்று
வெவ்வேறு கால கட்டங்களில் குர்ஆன் வசனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டன.
பதில்: வட்டி [4:161; 3:130 and 2:275]; மது [2:219; 4:43; 5:90 & 91]
الحمدلله
No comments:
Post a Comment