அரஃபாத் நாள்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
ஸாலிம் கூறியதாக இப்னு ஷிஹாப் கூறினார்கள்: அப்துல்லாஹ் (பின் உமர்) (ரலி) அவர்களிடம் அரஃபா நாளில் (மவ்கிஃப் எனும்) நிற்கும் இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஸாலிம் 'நீர் சுன்னாவைப் பின்பற்ற விரும்பினால், அரஃபா நாளில் தொழுகையை (நண்பகல் வெயிலிலேயே) முற்படுத்தித் தொழுவீராக!' என்று கூறினார். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், 'இவர் உண்மை உரைத்தார். (ஏனெனில்) அவர்கள் (நபித்தோழர்கள்) சுன்னாவின் அடிப்படையில் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர்களாக இருந்தனர்' என்று கூறினார்கள்." ஸஹீஹுல் புகாரி : 1662
الحمدلله
No comments:
Post a Comment