Thursday, June 18, 2026

 

அரஃபாத் செல்லுதல்

السلام عليكم ورحمة الله وبركاتة

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

முஹம்மத் பின் அபூபக்ர் அஸ்-ஸகஃபீ அவர்கள் அறிவித்தார்கள்: நானும் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களும் காலையில் மினாவிலிருந்து அரஃபாவிற்குச் சென்று கொண்டிருந்தபோது, நான் அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜின் போது) இருந்த சமயத்தில் இந்த நாளில் (அரஃபா தினத்தில்) என்ன செய்வது வழக்கம்?" என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், "எங்களில் தல்பியா கூறுபவர் தல்பியா கூறுவார்; அவருக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார்; அவருக்கும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள்" என்று கூறினார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ்; ஸஹீஹுல் புகாரி : 1659

الحمدلله

No comments:

Post a Comment

To get the highest status from Allah SWT