Part I over with this question:
70. மக்காவை வெற்றி கொண்ட நாளில், ஏன் அல்லாஹ் காபாதுல்லாவிற்குள் ஒரு வசனத்தை இறக்கினான். அவ்வசனம் என்ன?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்: ஏனெனில் நபி ﷺ அவர்கள் காபதுல்லாவின் சாவியை மற்றும் பொறுப்பை தன் பெரிய தந்தை கேட்டு கொண்டதற்கு இணங்க அவரிடம் கொடுப் பதாக இருந்தார். ஆனால் அல்லாஹ்வின் விருப்பம் வேறாக இருந்தததால், அல்லாஹ் தன் திருத்தூதர் ஜிப்ரீல் (அலை) காபதுல்லாவிற்குள்ளேயே அனுப்பி இந்த வசனத்தை இறக்கினான்."நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விட வேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகின்றான். நிச்சயமாக அல் லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதே சம் செய்கிறான். நிச்ச யமாக அல்லாஹ் (யாவற் றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாக வும் இருக்கின்றான்." (4:58).
ஹிஜ்ரத்
செய்வதற்கு முன் நபி ﷺ அவர்கள் தன் தோழர்களோடு காபாவுள் சென்று இரண்டு ரகாஅத்
தொழ, அதன் சாவியை கேட்டதற்கு இஸ்லாத்தை தழுவாத குரைஷியான உதுமான் பின் தல்ஹா, சாவியை தர மறுத்து, நபி ﷺ அவர்களைப் பார்த்து கடுமையான
வார்த்தைகளைக் கூறினார்.
நபி
ﷺ அவர்கள் அவரது கடுமையான வார்த்தை களை
பொறுத்துக் கொண்டு, "ஓ உதுமான்! ஒரு நாள் வரும், அந்த நாளில் காபாவின் சாவி என்
கையில் இருக்கும். அப்போது நான் இச்சாவியை யாரிடம் வேண்டுமானாலும் தர எனக்கு
அதிகாரம் இருக்கும்." என்றார்.
அதற்கு
அவர், "குரைஷி குலத்தவர் அனைவரும் இழிவடைந்து வேரோடு பிடிங்கப்படும் போது தான்
அவ்வாறு நடக்கும்" என்றார்.
அதற்கு நபி ﷺ அவர் கள் கூறினார்: "இல்லை!
அப்போது அவர்கள் எல்லோரும்
உண்மையிலுமே நல்ல நிலைமையில் மரியாதைக்கு உரியவர்களாக
இருப்பார்கள்." என்று.
நபி
ﷺ அவர்கள் காலத்தில் ஹஜ்ஜின் போது ஒவ்வொரு
குலத்தவருக்கும் ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொடுப்பர். யாத்திரீகர்களுக்கு நீர் கொடுப்பது அப்பாஸ் (ரஜி) குலத்தவர்
செய்வர். காபாவை திறப்பதும், பராமரிப்பதும் உதுமான் பின் தல்ஹாவின் குலத்தவர் வேலை.
வருடங்கள் கடந்தன. நபி ﷺ மக்காவை விட்டு மதீனா சென்றார். பத்து வருடங்களுக்குப் பின் மக்கா வந்து போரின்றி மக்காவை வெற்றி கொண்டார். வெற்றி பெற்ற அந்த நாளில் பல குரைஷிகள் ஒளிந்துக் கொண்டனர். காபாவை திறக்க சாவியை இப்னு தல்ஹாவிடமிருந்து வாங்கிவர அலி (ரஜி) வை அனுப்பினார். அவர் சாவியை கொடுக்க மறுத்தார். அலி (ரஜி) அவர்கள் பின் பலவந்தமாக சாவியை பிடுங்கி நபி ﷺ அவர்களிடம் தந்தார்.
சாவியைப்பெற்ற
நபி ﷺ அவர்கள் காபா உள்ளே சென்று விக்கரங்களை அகற்றி
இரண்டு ரகாஅத் தொழுதார். ஒரு ஹதீஸில், அப்பாஸ் (ரஜி) அவர்கள் நபி ﷺ அவர்களிடம் தண்ணீர் தரும் வேலையோடு காபாவை பராமரிக்கும் பொருப்பையும்
தம் குலத்தவருக்கே தருமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது.
நபி ﷺ அவர்கள் காபாவை விட்டு வெளி வந்து, இந்த வசனத்தை சொல்லி புனித ஆலயத்தின் சாவியை உதுமான் பின் தல்ஹாவிடமே தருமாறு அலி (ரஜி) அவர்களிடம் தந்தார். பின் "இனி அந்த சாவி அவரிடமே இப்போதும், எப்போதும் இருக்கும் என்றும், பலவந்தமாக சாவியை பெற்றதற்கு மன்னிப்பு கேட்கவும்" என கூறி அனுப்பினார்.
அப்படி
செய்த அலி (ரஜி) பார்த்து உதுமான் பின் தல்ஹா மிகவும் ஆச்சரியப்பட்டு 'என்ன நடந்தது?' என்று
கேட்டார். அலி (ரஜி) அவர்கள் அல்லாஹ் வால் இறக்கியருளப்பட்ட வசனத்தை கூறினார். உடனே உதுமான் பின் தல்ஹா (ரஜி) கலிமா கூறி
இஸ்லாத்தில் இணைந்தார். நபி ﷺ அவர்கள் அவரிடம் "இந்த சாவி இனிமேல் உம்முடைய குடும்பத்திடமே கடைசி நாள் வரை இருக்கும். யாராவது உம்
குடும்பத்தாரிடமிருந்து எடுத்தால் அவன் கொடுங்கோலன்." "மேலும் இந்த
சேவைக்காக இஸ்லாம் ஷரியத் விதி முறை படி உங்களுக்கு பணம் வந்து
சேரும்" என்றார்.
சுப்ஹானல்லாஹ்! என்ன ஒரு மரியாதை! என்ன ஓர் அங்கீகாரம்! ஏனெனில் அவர் தன் வாழ்நாளில் ஓர் நல்ல காரியம் - அல்லாஹ்வின் திருப்தியையும் வெகுமதியையும் தனக்கும் தன் சந்ததிக்கும் பெற்று தந்திருக்கிறது. அவர் இறந்த பிறகு அவர் சகோதரர் ஷைபாவிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு மேலும், இன்றும் அந்த சாவி அந்த குடும்பத்தினரிடமே உள்ளது. சவுதி அரசு அந்த குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறது. சவுதி அரபிய அரசரும் இக்குடும்பத்தினரிடமிருந்து சாவியைப் பெற்று தான் காபாவின் உள்ளே செல்ல முடியும். பாருங்கள்! அல்லாஹ்வின் கட்டளையின் வலிமையை! இவ்வளவு வருடங்கள் அவர்கள் குடும்பத்தினரிடமே அது உள்ளது. யாரும் அல்லாஹ்வின் வாக்கை மாற்றியதில்லை. சுபஹானல்லாஹ்!
மகிழ்ச்சியும்
கண்ணீரும் கலந்த உணர்வில் இப்னு தல்ஹா சாவியை
வாங்கிக் கொண்டு நடக்க, நபி ﷺ
அவரை கூப்பிட்டு கூறினார்: "உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? சில வருடங்களுக்கு முன் நான் கூறியது நிறைவேறியதா? ஒரு நாள் வரும் அப்போது காபாவின் சாவி என் கையில் இருக்கும்
என்று" அவரும் 'ஆம்' என்று
கூறி, "அதில் சந்தேகமே இல்லை. நீங்கள்
கூறியதைப் போலவே நடந்து விட்டது."
இந்த
ஆயத் அந்த குறிப்பிட்ட சம்பவத்திற்காக இறங்கினாலும், காலத்தை,
இடத்தை கடந்தும் இது எல்லா மனிதற்கும் பொருந்தும் வகையில்
அமைந்துள்ளது. சிறந்த ஆசிரியரான அல்லாஹ் நமக்கு, கீழ் வருமாறு பாடம் கற்பிக்கின்றான்.
★அல்லாஹ் கட்டளை இடுகின்றான், நம்பி
உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள்
ஒப்படையுங்கள்.
★ அல்லாஹ் கட்டளை இடுகின்றான்: உங்களிடம் ஒப்படைக்கப் பட்டவைகளை
சரி வர பேணுங்கள்.
★ அல்லாஹ் கட்டளை இடுகின்றான்: மனிதர்களி டையே தீர்ப்பு கூறினால்
நியாயமாகவே தீர்ப்புக் கூறுங்கள்.
★ நியாயமான முறையில் தேர்வு செய்து பொறுப் பை ஒப்படையுங்கள்.
★ அல்லாஹ்
உங்களுக்கு (இதில்) மிகச் சிறந்த உபதேசம் செய்கிறான்; அதை
செயல்படுத்துங்கள்.
★ அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனா கவும், பார்ப்பவனாகவும்
இருக்கின்றான்.
★ அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும்
(அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம்
வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்.
★ உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் குர்ஆனையும்
சுன்னாவையும் கடைபிடியுங்கள்.
★ மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி
நாளையும் நம்புங்கள்.
இதுதான்
(உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
الحمدلله