Monday, December 19, 2022

 

68. இமாம் அஹமதில் உம்ம சலமா (ரஜி), நபி அவர்களின் துணைவியார், நபி மிடம் கேட்கிறார்: " ஏன் குர்ஆனில் ஆண்களைப் பற்றி பேசப்பட்ட அளவுக்கு பெண்களைப் பற்றி பேசப்படவில்லை?''என்று. இதற்கு பதில் கூறும் வகையில் எந்த வசனம் திருக்குர்ஆனில் இறக்கப்பட்டது?

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்: "நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண் களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; ம் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக்கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகம் அதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலி யையும் சித்தப்படுத்தி இருக்கின்றான்." (33:35).

உம்ம சலமா (ரஜி) தொடர்ந்து கூறுகிறார்:

"…..ஒரு நாள் நான் என் தலையை வாரிக்  கொண்டிருந்தேன். மிம்பரில் நின்று கொண்டு நபி அவர்கள் சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார். நான் என் தலைமுடியை அள்ளி முடித்துக் கொண்டு என் அறைக்கு விரைந்து சென்று நபி கூறுவதை கேட்டேன். அவர்,  நான் கேட்ட கேள்விற்கு பதில் கூறும் வகையில் 33-வது அத்தியாயத்தில் உள்ள 35-வது வசனத்தை ஓதிக்கொண்டிருந்தார்.''

அல்லாஹ் எண்ணற்ற வசனங்களை பெண்களுக் காகவே இறக்கியுள்ளான்.

மதச்சார்புள்ள விஷயங்களைப் பொறுத்த வரை ஆண்கள் பெண்கள் இருவரும் சமமே:

"உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்" (3:195). ஒரு முஸ்லிம் ஆணோ, பெண்ணோ கீழ்படிதல், உண்மை, அடக்கம், தூய்மை  அல்லாஹ்வை நினைவு கூறுவதுமாகிய நற்பண்புகளைப் பெற்றிருந்தால் அல்லாஹ் அவர்கள் இருவருக்கும் சமமான அந்தஸ்தையும், சமமான வெகுமதி யையும் அளிப்பான்.

அல்லாஹ் இதை குர்ஆனில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றான்:

 " ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த (வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்த (வற்றில் உரிய) பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவனருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.''(4:32)

"ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர் களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்." (4:124). இதே கருத்தை வசனங்கள் 16:97 & 40:40 வலியுறுத்து கின்றன.

"முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்க ளையும்.....  அவர்களின் பாவங்களையும் அவர் களை விட்டு நீக்கி விடுவான். அதுவே மகத்தான வெற்றியாகும்" (48:5)

"முஃமின்களான ஆண்களையும், முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களு டைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர் களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக் கும் (அப்போது அவர்களை நோக்கி:) "இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் என்றென்றும் தங்கி யிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்" (என்று கூறப்படும்)." (57:12).

நிச்சயமாக தான தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் (அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.''(57:18)

தண்டனையும் அவர்களிருவருக்கும் சமமே: "அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதனையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது. இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லும் இடங் களில் மிகவும் கெட்டது." (48:6).

 (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர் களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (மக்காவில் பிரவேசிக்க உங்களை அவன் அனுமதிக்கவில்லை அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்தி ருப்போம்.''(48:25).

"நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்ய வில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு. மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.'' (85:10).

அல்லாஹ் தன் நபி அவர்களுக்கு முஸ்லிம் ஆண்கள் பெண்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்குமாறு கட்டளையிடுகிறான்:

"ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின் களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக"(47:19)

"நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணை வைப்பதில்லை ன்றும், திருடவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும் தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லை என்றும், அவர்கள் உம்மிடம் வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீ ராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராகநிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்மிக கிருபையுடையவன்.'' (60:12)

அல்லாஹ் தன் கணவனைப்பற்றி முறையிட்டு கொண்டிருந்த பெண்ணிற்கு பதில் கூறினான்:

"(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து,  அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ,  அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும்,அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.'' (58:1)

 ★  அல்லாஹ் பெண்களுக்கு விஷேஷமாக நேர்வழி காட்டியுள்ளான்:

 "முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள்:

  * தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்,

  * தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்,

  * தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு  எதையும்) வெளிக்காட்டலாகாது,

  *தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

 * தங்களுடைய அழகு அலங்காரத்தை அன்னியரிடம் வெளிப்படுத்தக் கூடாது.

 *தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத் திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;

 * நீங்கள் தவ்பாசெய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு,அல்லாஹவின் பக்கம் திரும்புங்கள்." (24:31)

 * எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்;  இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையும் ண்டு.'' (24:23).

 * ஈமான்கொண்ட ஆண்களையும், ஈமான்கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.(33:58)

  அல்லாஹ், நபி யுடைய மனைவிமார்களுக் காக சில வசனங்களை இறக்கியுள்ளான்:

அல்லாஹ் ஆயிஷா(ரஜி)வின் மீது எழுந்த அவதூறைப் போக்க சூராத்தே நூரில் 10-த்திலிருந்து 18- வசனங்களை இறக்கி அவர் மீது பெருங் கருணை புரிந்தான்.

பின்னர்: ''நபியே ﷺ !  நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றா னைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமல்  ருக்க இது சுலப மான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப் பவன்; மிக்க அன்புடையவன். (33:59).

"நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள். இறையச்சத் தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத் தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத் தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்;  இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.''(33:32)

"நபியே ﷺ ! உம்முடைய மனைவிகளிடம், "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும்இதன் அலங்காரத் தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கின் றேன்." என்று கூறுவீராக! (33:28)

"நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாரா யின்அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!''(33:30)

"முஃமின்களே! ............ நபியுடைய மனவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்க ளைளும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒரு போதும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.''(33:53)

 ★ அல்லாஹ் ஒரு சூராவை "மர்யம்"  என்ற பெண்ணின் பெயரால் இறக்கி உள்ளான். 

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...