69. இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இஹ்ஸான் என்றால் என்ன?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்: உமர் (ரஜி) "ஹதீஸ் ஜிப்ரீல்" என்னும் இந்த ஹதீஸை கூறுகையில் இதற்கான விளக்கத்தை அறிவித்துள்ளார்:
நாங்கள்
ஒரு நாள் நபி ﷺ அவர்களோடு அமர்ந் திருந்தோம். அப்போது
கறுத்த கேசம் கொண்ட மிக்க தூய்மையான வெள்ளை உடையணிந்த ஒரு மனிதர் வந்தார். அவர் எங்கள் எவருக்கும் அறிமுகமில்லாத
நபர். அவர் உடை கசங்காமல் இருந்ததால் அவர்
வெகு தூரம் பயணித்தாரா என் பதையும் அறிய முடிய வில்லை. அவர் நபி ﷺ அவர்களின் மிக அருகில் வந்து அமர்ந்தார்.
இஸ்லாம்:
அதற்கு
நபி ﷺ அவர்கள்: அல்லாஹ்வைத் தவிர
வணக்கத்துக்குரியவர் எவருமில்லை, முஹம் மது நபி ﷺ
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல்; தொழுகையைக்
கடைபி டித்தல், ஸகாத் கொடுத் தல், ரம்ஜானில் நோன்பு நோற்றல், உடல் சக்தி யும்,
பொருளும் உள்ள வர்கள் மக்காவிலுள்ள க’பாவிற்கு ‘ஹஜ்’ என்ற புனித
பயணம் மேற் கொள்ளுதல்." இதை கேட்ட அந்நபர் "நீர்உண்மையே பேசினீர்"
என்றார். இதை கேட்ட நாங்கள் ஆச்ச ரியத்தால் உறைந்து போக அவர், "ஈமான் என்றால் என்ன என்பதை எனக்கு கூற முடியுமா?" என்று
தொ டர்ந்தார்.
ஈமான்:
ஈமான்
என்பதுஅல்லாஹ் வின் மீதும், வானவர்கள் (மலக்குகள்) மீதும், அல் லாஹ்வுடைய வேதங்கள் மீதும், அவனுடைய
தூதர் கள் மீதும், இறுதி நாள் மீதும், நன்மை, தீமை
எதுவாக இருந்தாலும், விதி (கதர்) மீதும் நம்பிக் கை வைப்பது தான்." என்று
பதிலளித்தார். அவர் மீண்டும், "நீர் உண் மையே
பேசினீர்" என் றார்.
நீங்கள்
அல்லாஹ்வைப் பார்ப்பது போல் வழிபட வேண்டும், ஏனென்றால்,உங்களால் அவனைப் பார்க்க முடியாவிட்டாலும்,அவன்
உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
பின்
அவர் மீண்டும், "இஹ்ஸான் என்றால் என்ன என்பதை எனக்கு
விளக்க முடியுமா?" என்று கேட்டார்.
இஹ்ஸான்:
அதற்கு
நபி ﷺ அவர்கள் "இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை
(நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட் டாலும்
நிச்சயமாக அவன்உம்மைப்பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்’
அடுத்து,‘மறுமை நாள் எப்போது?‘ என்று அம்
மனிதர் கேட்டதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார் கள்: ‘அதைப் பற்றிக்
கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந் தவரல்லர்.
(வேண்டுமா னால்) அதன் (சில) அடை யாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை,
"ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானா கப் போகிறவனை
ஈன் றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்க ளை
மேய்த்துக் கொண் டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள்
பெருமையடித் துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும்
அறியமாட்டார்” என்று கூறிவிட்டு, பின் வரும் வசனத்தை ஓதிக்
காட்டினார்கள். ‘மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” (திருக்குர்ஆன் 31:34).
அதன்பின்
அம்மனிதர் சென்றுவிட்டார். நாங்கள் சிறிது நேரம் காத்திருந் தோம். பின் என்னை
பார்த்து, "உமர்! வந்தவர் யார் என்று உமக்கு
தெரியுமா?" என்று கேட் டார். நான், "அல்லாஹ் மற்றும் அவர் திருத்தூதர் அவர்கள் நன்கு அறிவர்"
என்றேன்.
அதற்கு:
"வந்தவர் ஜிப்ரீல் (அலை) என்றும், உமக்கு உம்
மார்க்கத்தை கற்றுக்கொடுக்க வந்தார்" என்றும் கூறினார்.
الحمدلله
No comments:
Post a Comment