Monday, October 31, 2022

 

Today’s Question:

21. Tick the odd one out:

        1) use of arrows to seek luck or decision.

        2) gaming of animals at Ihram.

        3) food of people of Scripture.

        4) marrying two sisters at a time.

        5) fighting in the holy months.

        6) calling a person by nick name.

        7) back biting.

 

21. இந்த செயல்களில் தனித்து நிற்கும் செயலை குறிப்பிடுக:

        1)  அம்புகள் ஏவி குறி பார்த்தல்.

       2)  இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டையாடுதல்.

       3)  வேதம் கொடுக்கப்பட்ட சமூகத்தாரிலிருந்து வந்த உணவு.

       4)  இரண்டு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணப்பது.

       5)  புனித மாதங்களில் போரிடுவது.

       6) கெட்ட பெயரிட்டு அழைப்பது.

       7)  புறம் பேசுவது.

 

20. அல்லாஹ் நபி (ﷺ)  அவர்களுக்கு "தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுது வருவீராக!" என்று கட்டளையிட்டான். அதனால் அவருக்கு கிடைப்பது:

 

   a)  இந்த உலகத்தில் உயர்ந்த அந்தஸ்து.

   b)  இறைவனின் கருணை

   c)  'மகாமே மஹ்மூத்' என்ற சிறந்த தலம்/அந்தஸ்து.

   d)  தன் இறைவனின் எல்லா திருவருட்களும்.

 

பதில்: c) 'மகாமே மஹ்மூத்' என்ற சிறந்த தலம்/அந்தஸ்து.

 

 இரண்டாவதாக இறக்கியருளிய வசனங்களில் அல்லாஹ் நபி (ﷺ) அவர்களை அழைத்து கூறுகின்றான்:  "போர்வையை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து)  நிற்பீராக, அதில் பாதி (நேரம்)  அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக அல்லது அதை விடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தியும் ஓதுவீராக." (73:1-4).

 

பின் அல்லாஹ், நபி (ﷺ) அவர்களை தினமும், உபரியாக இந்த இரவு தொழுகையை அதாவது  'தஹ்ஜுத்'  தொழ கட்டளையிட்டான்.  இதனால் அவருடைய இறந்த கால, வருங்கால பாவங்களை மன்னிப்பதுடன் மகிமை மிக்க புகழுக்குரிய  நிலையையும், உயிர் கொடுத்து எழுப்பும் நாளில் தருவதாக வாக்களித்துள்ளான். "இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக.  (இதன் பாக்கியத்தினால்( உம்முடைய இறைவன், 'மகாமே மஹ்மூத்' என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும் " (17:79)

 

இப்னு காதிர் கூறுகிறார்,  இறை தூதர், உயிர் கொடுத்து எழுப்பப்படும்  மறுமை நாளில்  நபி (ﷺ) அவர்கள் அவரது உயர்ந்த நன்னடத்தை காரணமாக சில சலுகைகளை பெறுவார். அவை  பூமியிலுள்ள யாவரையும் விட முதலாவதாக உயிர் கொடுத்து எழுப்பப்படுவார். பின் எல்லோரும் குழுமி இருக்கும் இடத்திற்கு வருவார் அவர் பதாகையின் (banner)  கீழ் ஆதம் (அலை) முதல் கடைசி மனிதர்கள் வரை உள்ள எல்லா மனிதர்களும் பிறந்த போது இருந்தது போல் வெறுங்கால்களுடன் பிறந்த மேனியராய் கூடுவர்.


அல்லாஹ், 'ஓ முஹம்மத்!' என்று அழைக்க, அதற்கு அவர் உடனே கூறுவார்: " நான் தங்களுக்கு பணி செய்ய காத்துக் கொண்டுள்ளேன்!  எல்லா நன்மைகளும் உங்கள் கையில் எந்த தீமையும் உங்களை அண்டாது. நல்வழியின் சென்றவன் உம்மால் வழிநடத்தி செல்பவன். உங்கள் அடிமை, உங்களால், உங்கள் முன் நிற்கிறேன் ! உம்மால் தான் நாங்கள் இரட்சிக்கப்படுகிறோம். உம்மிடமே நாங்கள் அடைக்கலம் தேடுகின்றோம்.  நீர் ஆசிர்வதிக்கப்பட்டவர், உயர்ந்தவர்.  காபாவின் இறைவனே  உம்மை நாம் மகிமை படுத்துகிறோம். !" அப்போது எல்லா படைப்பினங்களும் அல்லாஹ்வை மகிமை படுத்தும்.  அதோடு அவை முஹம்மது (ﷺ) அவர்களின் புகழையும் மகிமையையும் கூறும். இதை தான் அல்லாஹ் மகாமே மஹமூத் என்று குறிப்பிடுகின்றான். இப்னு அப்பாஸ் இதை “பரிந்துரைக்கும் தகுதி/உரிமை” என்று கூறுகிறார்.

 

பின்னர் அல்லாஹ், அங்கு கூடியிருக்கும் தன் படைப்பினங்களுக்கு நீதியை வழங்குவார். நிறைய மனிதர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஆதம் (அலை) மிடம்,  பின் நூஹ் (அலை) மிடம், பின்  இப்ராஹிம் (அலை) மிடம், பின் ஈஸா (அலை) மிடம்  என்று ஒவ்வொருவரிடமும் சென்று பரிந்துரைக்க கோருவர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயலாது என்று கூறிவிடுவர் பின் அவர்கள் யாவரும் முஹம்மது நபி  (ﷺ) அவர்களிடம் வருவர்.

 

இப்னு ஜரீர் கூறுகிறார்: " பெரும்பாலான வர்ணனையாளர்களின் வர்ணனைப்படி, "மறுமை நாளில் நபி (ﷺ) அவர்களுக்கு கிடைக்கும்  இந்த தகுதிற்குத்தான் மகாமே மஹ்மூத் என்று கூறுகின்றனர். . கஷ்டப்படும் தன் உம்மத்திற்கு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்து அவர்களை சுவனபதி கிடைக்கும்படி செய்வார்.'' அவருக்கு மட்டும் தான் இந்த "பெரிய பரிந்துரை" செய்யும் உரிமை வழங்கப்படும்.

 

இன்னொரு அறிவிப்பில் நபி (ﷺ) கூறினார், "அவர்கள் என்னிடம் வருவார்கள்.  ஓ முஹம்மத்! நீர் அல்லாஹ்வின் தூதர், இறுதி நபி! அல்லாஹ் உங்கள் கடந்த கால மற்றும் வருங்கால பாவங்களை எல்லாம் மன்னித்தான்! எங்களுக்காக உம் இறைவனிடம் பரிந்துரைப்பீராக! நீங்கள் பார்க்கவில்லையா நாங்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறமென்று?”


நான் அல்லாஹ்வின் அர்ஷிற்கு கீழ், முன்னால் வருவேன். அவர் முன் ஸஜ்தாவில் வீழ்வேன்,  அல்லாஹ் யாருக்குமே கற்றுக் கொடுக்காத சில வார்த்தைகளை,  எனக்கு கற்று கொடுப்பான். நான் அந்த வார்த்தைகளால்  அவனை புகழ்ந்து பாராட்டுவேன். அல்லாஹ் கூறுவான், ஓ முஹம்மத்!  உம் தலையை நிமிர்த்தும்! பேசும்! பரிந்துரைக்கும் தகுதியை உமக்கு கொடுக்கின்றோம் நீர் கேளும்.  உமக்கு கொடுக்கப்படும். பரிந்துரைப்பீர்! உம் பரிந்துரை ஏற்கப்படும்."  நான் கூறுவேன், " ஓ இறைவா! என் உம்மத், என் உம்மத்". அவர் கூறுவார், நரகத்திற்கு போய் யார் உள்ளத்தில்  மிகச் சிறிய பார்லி மணியளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரக நெருப்பிலிருந்து கூட்டி கொண்டு வாரும்!" ஆகையால் நான் சென்று அது போல் செய்வேன்!

 

பிறகு நான் திரும்பி வந்து அந்த புகழ் மிக்க வார்த்தைகளை கூறி புகழ்ந்து, அவன் முன்னிலையில் ஸஜ்தாவில் வீழ்வேன். அல்லாஹ் கூறுவான், ஓ முஹம்மத்!  உம் தலையை நிமிர்த்தும்! பேசும்! பரிந்துரைக்கும் தகுதியை உமக்கு கொடுக்கின்றோம் நீர் கேளும்.  உமக்கு கொடுக்கப்படும். பரிந்துரைப்பீர்! உம் பரிந்துரை ஏற்கப்படும்." நான் கூறுவேன், " ஓ இறைவா ! “என் உம்மத், என் உம்மத்".  அவர் கூறுவார்நரகத்திற்கு போய் யார் உள்ளத்தில்  மிகச் சிறிய எறும்பு அல்லது கடுகளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரக நெருப்பிலிருந்து கூட்டி கொண்டு வாரும்!" ஆகையால் நான் சென்று அது போல் செய்வேன்!

 

பிறகு நான் திரும்பி வந்து அந்த புகழ் மிக்க வார்த்தைகளை கூறி புகழ்ந்து, அவன் முன்னிலையில் ஸஜ்தாவில் வீழ்வேன். அல்லாஹ் கூறுவான், "ஓ முஹம்மத்!  உம் தலையை நிமிர்த்தும்! பேசும்! பரிந்துரைக்கும் தகுதியை உமக்கு கொடுக்கின்றோம் நீர் கேளும்.  உமக்கு கொடுக்கப்படும். பரிந்துரைப்பீர்! உம் பரிந்துரை ஏற்கப்படும்." நான் கூறுவேன், " ஓ இறைவா! என் உம்மத், என் உம்மத்".  அவர் கூறுவார்  நரகத்திற்கு போய் யார் உள்ளத்தில் மிக மிக லேசான கடுகளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரக நெருப்பிலிருந்து கூட்டி கொண்டு வாரும்!" ஆகையால் நான் சென்று அது போல் செய்வேன்! (ஸஹீஹ் அல் புகாரி, 7510)

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் பதிவு செய்துள்ளார் நபி (ﷺ) கூறினார்:, "யார் அஜானை செவி மடுக்குகிறார்களோ அவர்கள் கூறட்டும்,

 اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْووَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَاماً مَحْمُوداً الَّذِي وَعَدْتَهُ، إَنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ.

"ஓ அல்லாஹ், இந்த முழுமையான அழைப்பின் மற்றும் தொழப் போகும் தொழுகையின் இறைவனே! முஹம்மத் (ﷺ) அவர்களுக்கு உன் நெருக்கத்தையும், மிகச் சிறந்த வெகுமதியையும், நீ வாக்குறுதி அளித்தது போல் அவரை உயிர்த்தெழவைக்கும் போது அவருக்கு மகாமே மஹ்மூத் அளிப்பாயாக!  எனக்காக  கூலி கொடுக்கும் மறுமை நாளில் அவர் பரிந்துரைக்க வேண்டுகின்றேன்." (ஸஹீஹ் அல் புகாரி, 614)

 

அல்லாஹ் திருக்குர்ஆனில் தஹஜ்ஜுத் பற்றி இந்த வசனங்களில் குறிப்பிட்டு உள்ளான்:

        "பகலின் காலை, மாலை ஆகிய இருமுனை களிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக!” (11:114).

      “சூரிய உதயத்திற்கு முன்னரும்அது அஸ்தமிப்பதற்கு பின்னரும்

       (இரவில்) உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹ் செய்வீராக." (50:39-40).

     “இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) “…..தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும்   வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள் ". (25:63) (25:64)

        "எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவரா கவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? " ( (39:9.

         "பயபக்தியுடையவர்கள்  இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனை களின் போது இறைவனிடம்  மன்னிப்புக் கோரிக் கொண்டஇருப்பார்கள். "(51:17 & 18)

       ‘ நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்அல்லாஹ்வே  இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்  ஆகவே அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான்....."  (73:20).

 

தஹஜ்ஜுத்தை இரவின் கடைசி மூன்றில் ஒரு பாகத்தில் தொழுவது சாலச்சிறந்தது.  ஏனெனில் நபி  (ﷺ) அவர்கள் கூறுகிறார், "இரவின் கடைசி மூன்றில் ஒரு பாகத்தில் அல்லாஹ் ஒவ்வொரு    இரவும் கீழே உள்ள  வானத்திற்கு இறங்குகின் றான்.  அப்போது கூறுவான், " யார் என்னை அழைகின்றார்களோ அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்!  யார் என்னிடம் கேட்கிறாரோ  அவர்களுக்கு கொடுப்பேன். யார் மன்னிப்பு கேட்கிறாரோ அவரை நான் மன்னிப்பேன்!"  (ஸஹீஹ் புகாரி,1145  மற்றும் ஸஹீஹ் முஸ்லிம்,     1261 ).  இவ்வாறு அல்லாஹ் கூறினாலும் அல்லாஹ்வின் கருணை நம் மீது எந்நேரமும் இருக்கும்.

 

அல்லாஹ் தஹ்ஜ்ஜுத்தை கட்டாயமாக்காமல் விரும்பினால் தொழுமாறு நபி (ﷺ) அவர்களின் உம்மத்திற்கு கூறியுள்ளான . அதனை தொழுதால் அவர்கள் செய்த பாவத்தை மட்டும் மன்னிக் கின்றான் 

 

இந்த தொழுகையை விரும்பி தொழுவோருக்கு அல்லாஹ்வின் அருகாமை கிடைக்கும் மன அழுத்தம் உள்ளவருக்கு மனச்சாந்தியை அளிக்கும். அது மனத் தைரியத்தையும், பொறுமையையும் கொடுத்து அன்றாடம் நடக்கும் பிரச்சனையை எதிர்கொள்ள வைக்கும். ஆகையால் இரவின் கடைசி மூன்றில் ஒரு பாகத்தில் விழித்தெழுந்து தொழுவீர்களானால் இம்மையிலும் மறுமையிலும் மகத்தான வெற்றியை அடைவீர்!

 

20. Allah commands to Mohammed () the reward of performing Thahajud prayer for him is to get

    a) a high rank in this world

    b) the mercy of Allah

    c) a status Maqam Mahmud

    d) all favors from Lord

Answer: c) to get a status Maqam Mahmud,


In the second revelation, Allah called the Prophet () and said, “O you wrapped in a garment! Arise (to pray) the night, except for a little—half of it—or subtract from it a little—or add to it and recite the Qur’an with measured recitation.” (73:1-4). Then He commands specifically to the Prophet (to pray extra, daily, the “Night prayer” - Tahajjud. All his previous and future sins had been forgiven by performing this nafil prayer. Allah promised to raise him on the Day of Resurrection, to Maqam Mahmud - a station of praise and glory. "And rise at the last part of the night, offering additional prayers, so your Lord may raise you to Maqam Mahmud. " (Al-Isra,17:79)


Ibn Kathir, said that the Messenger of Allah () will have honors in the Day of Resurrection. He will be the first one to resurrect from earth, ride to the place of gathering and will have a banner under which Adam and all mankind will have gathered together, barefoot and naked as they were born. Allah will call out `O Muhammad,' he will respond, “At your service, all goodness is in Your Hands and evil is not to be attributed to You. The one who is guided is the one whom You guide. Your servant is before You, from You, and to You and there is no salvation or refuge from You except with You. May You be blessed and exalted, Glory be to You, Lord of the Kaba’’ All will glorify and exalt their Creator – Allah. Along with that all creations will praise the Prophet () also. To this only Allah mentioned as Maqam Mahmud - a station of praise and glory. Ibn Abbas said, "The position of praise and honor is the position of intercession.''


Then Allah comes to judge between His creation. Many of the mankind will be facing hardship.  They will go to Adam (AS), then Nuh (AS), then Ibrahim (AS), then Musa (AS), then `Isa (AS) to intercede, and each of them will say, "I am not able for that.'' Then they will come to Muhammad (). Ibn Jarir said, "Most of the commentators said, `This is the position to which Muhammad () will be raised on the Day of Resurrection, to intercede for the people so that their Lord will relieve them of some of the hardships they are facing on that Day.' He will have the right of the ‘Grand Intercession’ with Allah.


In another version the Prophet () said, “They will come to me and say, ‘O Muhammad! You are the Messenger of Allah and the Seal of the Prophets. Allah has forgiven you your past and future wrong actions. Intercede with your Lord on our behalf. Do you not see what we are suffering?’ I will go and arrive under the Throne and fall down in prostration to my Lord. Then Allah will inspire me with some words to praise and laud Him with which He will have inspired no one before me. Then it will be said, ‘O Muhammad, raise your head. Ask and your request will be granted. Intercede and your intercession will be accepted. Lift your head!’ I will lift my head and say, ‘O my Lord, my community! O my Lord, my community!’ He will say, ‘Go and bring forth everyone in whose heart there is faith the weight of a barley-grain.’ So I will go and do that.


Then I will come back and praise Him with those words of praise and I will fall down prostrate before Him. He will say, ‘O Muhammad, raise your head. Speak and intercession will be granted to you, ask and you will be given, intercede and your intercession will be accepted.’ I will say, ‘O Lord, my ummah, my ummah!’ He will say, ‘Go and bring forth everyone in whose heart there is faith the weight of a small ant or a mustard-seed.’ So I will go and do that.


Then I will come back and praise Him with those words of praise and I will fall down prostrate before Him. He will say, ‘O Muhammad, raise your head. Speak and intercession will be granted to you, ask and you will be given, intercede and your intercession will be accepted.’ I will say, ‘O Lord, my ummah, my ummah!’ He will say, ‘Go and bring forth from the Fire everyone in whose heart there is faith the weight of the lightest, lightest grain of mustard-seed.’ So I will go and bring them forth.”  (Al-Bukhaari, 7510)

 

Jabir ibn Abdullah reported: The Prophet said: “Whoever hears the call to prayer and says,

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَاماً مَحْمُوداً الَّذِي وَعَدْتَهُ،  حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ ‏‏‏

"O Allah, Lord of this perfect call and established prayer, give Muhammad () the means of nearness and the most excellent reward, and raise him to the praiseworthy station that You have promised him,’ then my intercession will be allowed for him on the Day of Resurrection." (Sahih al-Bukhari, 614)

 

Allah has revealed thahajud to the believers in the following verses:

"Perform Salath at the two ends of the day and in hours of the night" (11:114).

"Glorify the praises of your Lord before sunrise after sunset a part of the night after prayers" (50:39-40).

“And the (faithful) slaves of the most Gracious Allah are those (25:63) ...... who spend the night in worship of their Lord, prostrate and standing.” (25:64).

 "Is one who is obedient to Allah, prostating himself or standing (in prayers) during the hours of the night, fearing the Hereafter and hoping for the mercy of his Lord (like one who disbelieves)? (39:9).

 "Muttaqun (pious) used to sleep but little by night & before dawn asking for forgiveness" (51:17 & 18

"Your Lord knows that you do stand for prayer little less than two-third of night or half night or one-third of the night and also a party of those with you" (73:20). 

         

It is preferable to pray Thahajjud the last third of the night. The Prophet ﷺ said: The Lord descends every night to the lowest heaven when one-third of the night remains and says "Who will call upon Me, that I may answer him? Who will ask of Me, that I may give him. Who will seek my forgiveness that I may forgive him?" (Sahih Bukhari, 1145 & Muslim, 1261 by Abu Hurairah). Of course His command and Mercy descend all the time, it is not restricted only at this part of the night.

 

Allah has made thahajud an optional to Ummah. Even though it is optional, Allah forgive the committed sins of the one who performs it. It brings closeness to Allah. It gives mental peace to the stressed ones. It also gives inner strength and patience to face everyday problems. So wake up and pray at the last one third of the night to attain supreme success in this world and Hereafter.

Sunday, October 30, 2022

 

 

Today’s question:

 

20. Allah commands to Mohammed (ﷺ) the reward of performing Thahajud prayer for him is to get

     a) a high rank in this world

    b) the mercy of Allah

    c) a status Maqam Mahmud

    d) all favors from Lord

 

20. அல்லாஹ் நபி (ﷺ)   அவர்களுக்கு "தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுது வருவீராக!" என்று கட்டளையிட்டான். அதனால் அவருக்கு கிடைப்பது:

   a)  இந்த உலகத்தில் உயர்ந்த அந்தஸ்து.

   b)  இறைவனின் கருணை

   c)  'மகாமே மஹ்மூத்' என்ற சிறந்த தலம்/அந்தஸ்து.

   d)  தன் இறைவனின் எல்லா திருவருட்களும்.

 


 

19. "அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங் களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத் தாருக்கும் பளுவாக இருந்தன.” கீழே கொடுக்கப்பட்டவர்களிலில் இருந்து அது யார் என்று கூறுக.

        1. ஃபிர்அவுன்

        2. ஹாமான்

        3. காரூன்

          4. ஸாமிரி

         5.  நம்ரூத்       

 

பதில்:  3. காரூன்.      

 

காரூன் என்பவன் மூஸா (அலை) மின் தந்தையின் சகோதரர் மகன். அவன் இஸ்ராயிலின் சந்ததியைச் சேர்ந்தவன். கதாதா கூறுகிறார்: "காரூன் தன் மிக இனிமையான குரலில் தவ்ராத் வேதத்தை வாசித்தவன். ஆனால் அவன் தன் நயவஞ்சகத்தால் மூஸா (அலை) மை நிராகரித் ததுடன் அவருக்கு கீழ்படிய மறுத்தான். தனக்கு கொடுக்கப்பட்ட அளவிலா செல்வத்தால் வரம்பு மீறி நடந்து, தன்னை தானே அழித்துக்கொண்டான்."

 

அவன் தன் இனத்தாரிடம் மிகவும் கர்வத்தோடு நடந்து கொண்டான். ஷஹ்ர் இப்னு ஹௌஷாப் என்பவர் அவனைப்பற்றி குறிப்பிடுகையில்: "அவன் தன் ஆடையை தரைமேல் படிய இழுத்தபடி மிகவும் கர்வத்துடனும் ஆணவத்துடனும் நடந்து  செல்வான்" என்று கூறினார் .

 

அல்லாஹ் திருக்குர்ஆனில்  கஸஸ் என்ற சூராவில் இவனைப்பற்றி இவ்வாறு விவரித்துள்ளான்: "நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்தி ருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன;  நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்." (28:76)

 

அப்பொழுதுள்ள சிலர்  “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்று உபதேசம் கூறினார்கள்). (28:77).

 

அதற்கு அவன் கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக் கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள். (28:78).

 

அப்பால், அவன் ஒரு நாள் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள். (28:79).

 

கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.  (28:80).

 

அவன் தன் சமூகத்தாரிடம் மிகுந்த குழப்பத்தை உண்டு பண்ணினான். காரூன் ஒரு பெண்ணை பணம் கொடுத்து மூஸா (அலை)மை எல்லோர் முன்னிலையிலும் அவதூறு கூறுமாறு ஏற்பாடு செய்தான். அவளும் அதை அடிக்கடி எல்லோர் முன்னிலையிலும் கூறலானாள். மூஸா (அலை) அல்லாஹ்விடம்  உதவி கோரி பிரார்த்தித்தார். அல்லாஹ் அவருக்கு அறிவித்த பிரகாரம் அவளை எல்லோர் முன்னிலையிலும், "உன்னை பணம் கொடுத்து இப்படி கூறச்சொன்னது யார்?"  என்று கேட்க, அவள் பயந்து உண்மையை கூறினாள். அதாவது காரூன் தன்னை அப்படி கூறுமாறு பணம் தந்ததாக ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்க மூஸா (அலை) அவளை மன்னித்தார். பின்னர் மூஸா (அலை) அவனையும் அவனது செல்வத்தை அழிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்.

 

"ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வை யன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை." (28:81).

 

முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் வெற்றியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள். (28:82).

 

ஆகையால் அல்லாஹ் கூறினான்: "அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு." (28:83).

 

கதாதா: "அவனும் அவனுடைய சொத்துக்கள் அனைத்தும் மறுமை நாள் வரை பூமிக்குள் புதைந்துக் கொண்டே இருக்கும்" என்று. இப்னு அப்பாஸ் (ரஜி) : "அவனும் அவனுடைய சொத்துக்களும் பூமியின் அடி ஆழத்தில் புதைந்து போயின" என கூறினார்.

 

19. " We gave him treasures, that of which the keys would have been a burden to a body of strong men." Choose the name from below:

        a)  Firaun

        b)  Haman

        c)  Qaroon

        d)  Samiri

        e) Namrooth

Answer: The correct answer is "c) Qaroon"

 

Qaroon is the son of paternal uncle of Musa (AS), one among the people of Children of Israel. Qatadah said: “He was called "An-Nur" (the light) for he had a beautiful voice while reciting the Torah, but he became a hypocrite and rejected Musa (AS) and disobeyed him. Thus, Qaroon was destroyed because of his transgression due to the wealth and riches he had.” He was arrogant towards their own folk. Shahr Ibn Haushab said: “He used to drag his garments on the ground out of pride and arrogance”

Allah says in surah Qasas, We had granted Qaroon such treasures that even their keys would burden a group of strong men. (28:76) Some of his people advised him, “Do not be prideful! Surely Allah does not like the prideful. Rather, seek the reward of the Hereafter by means of what Allah has granted you, without forgetting your share of this world. And be good to others as Allah has been good to you. Do not seek to spread corruption in the land, for Allah certainly does not like the corruptors.”  (28:77).  He replied, “I have been granted all this because of some knowledge I have.” Allah asks, “Did he not know that Allah had already destroyed some from the generations before him who were far superior to him in power and greater in accumulating wealth? There will be no need for the wicked to be asked about their sins. (28:78).

Then one day he came out before his people in all his glamour (luxuries like servants, clothes and riding animals). Those who desired the life of this world wished, “If only we could have something like what Qaroon has been given. He is truly a man of great fortune!” (28:79) But those gifted with knowledge said, “Shame on you! Allah’s reward is far better for those who believe and do good. But none will attain this except the patient ones.” (28:80).

He was also a mischief maker. Ibn Abbas said (RA) that Qaroon paid a woman, to accuse Musa (AS) in public for doing an evil action. She did that repeatedly. Musa (AS) sought help from Allah He asked her oneday, to tell the person who hired her. She accepted the truth and said it was Qaroon, who asked her to do that. And Musa (AS) prayed for the destruction Qaroon and his wealth.

Then We caused the earth to swallow him up, along with his home. There was no one to help him against Allah, nor could he even help himself. (28:81) And those who had craved his position the previous day began to say, “Ah! It is certainly Allah Who gives abundant or limited provisions to whoever He wills of His servants. Had it not been for the grace of Allah, He could have surely caused the earth to swallow us up! Oh, indeed! The disbelievers will never succeed.” (28:82). So Allah says, “That eternal Home in the Hereafter We reserve only for those who seek neither tyranny nor corruption on the earth. The ultimate outcome belongs only to the righteous.” (28:83).

It was narrated from Qatadah that he said: "They would sink into the earth till the Day of Resurrection." Ibn Abbas (RA)  said: "They sank into the earth till they reached the the lowest portion of the earth."

Saturday, October 29, 2022

 

 

Today’s Question:

19. " We gave him treasures, that of which the keys would have been a burden to a body of strong men." Choose the name from below:

        a)  Firaun

        b)  Haman

        c)  Qaroon

        d)  Samiri

        e) Namrooth

 

19. "அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங் களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத் தாருக்கும் பளுவாக இருந்தன.” கீழே கொடுக்கப்பட்டவர்களிலில் இருந்து அது யார் என்று கூறுக.

        1. ஃபிர்அவுன்

        2. ஹாமான்

        3. காரூன்

        4. ஸாமிரி

        5.  நம்ரூத்       

 

18. கீழே கொடுக்கப்பட்ட நபர்களில் யார் யாருக்கு அல்லாஹ் அவர்களின் முதிர்ந்த வயதில் குழந்தையை அருளினான்?

                1.  ஆதம் (அலை)

                2.  இப்ராஹிம் (அலை)

                3. நூஹ் (அலை)

                4. ஜகரிய்யா

                5. பீபி சாரா

                6. இம்ரானின் மனைவி

                7. யாஃகூப் (அலை)

 

பதில்: இப்ராஹிம் (அலை) மற்றும் பீபி சாரா, ஜகரிய்யா

1. இப்ராஹிம் (அலை) மற்றும் பீபி சாரா:

அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான், ‘‘இப்ராஹீம் (அலை)மின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தியை அறிவிப்பீராக! அவர்கள், [ஜிப்ரீல் (அலை), மிக்காயில் (அலை) இஸ்ராஃபில் (அலை)] அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின் றார்களே” என்று எண்ணிக் கொண்டார்). எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார். அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார். (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு அவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, (51:25 to 27) ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார். (11:70).  

 

(ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.  நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள். (15:52 and 53). அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம். (11:71). பின்னர் இதைக் கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார். “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!” (51:29, 11:72). “இவ்வாறே (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று)  உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள். (51:30)

அதற்கு, இப்ராஹீம் (அலை)மும்  “என்னை முதுமை வந்தடைந்திருக்கும் போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார். அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள். வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று சொன்னார். (15:54 to 56). “(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள். (11:73).


2. ஜகரிய்யா:

அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்: “(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.  (19:2). ஜகரிய்யா பீபி மர்யமின்  பாதுகாப்பாளர். மேலும் ஜகரிய்யா அவர் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவரிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உமக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள் (பதில்) கூறினாள். (3:37).

அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்). (அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; இறைவனே!! நிச்சயமாக நீர் உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”  “இறைவனே!! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." (19:3 to 6 and 3:38)

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர். (3:39 and 19:7). (அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார். (19:8) அதற்கு இறைவன் “(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான். (19:9) அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” (3:40)

(அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; (19:10).  நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமல் இருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான். ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார். (3:41 and 19:11). இவ்வாறு ஜகரிய்யாவிற்கு யஹ்யா பிறந்தார்.

 

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...