18. கீழே
கொடுக்கப்பட்ட நபர்களில் யார் யாருக்கு அல்லாஹ் அவர்களின் முதிர்ந்த வயதில்
குழந்தையை அருளினான்?
1. ஆதம் (அலை)
2.
இப்ராஹிம் (அலை)
3. நூஹ் (அலை)
4. ஜகரிய்யா
5. பீபி
சாரா
6. இம்ரானின் மனைவி
7. யாஃகூப்
(அலை)
பதில்:
இப்ராஹிம் (அலை) மற்றும் பீபி சாரா, ஜகரிய்யா
1. இப்ராஹிம்
(அலை) மற்றும் பீபி சாரா:
அல்லாஹ்
குர்ஆனில் குறிப்பிடுகின்றான், ‘‘இப்ராஹீம் (அலை)மின் கண்ணியம் மிக்க
விருந்தினர்களின் செய்தியை அறிவிப்பீராக! அவர்கள், [ஜிப்ரீல்
(அலை), மிக்காயில் (அலை) இஸ்ராஃபில் (அலை)] அவரிடம்
பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்”
என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு)
“ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்
றார்களே” என்று எண்ணிக் கொண்டார்). எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து
சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்)
கொண்டு வந்தார். அதை அவர்கள் முன் வைத்து, “நீங்கள்
புசிக்க மாட்டீர்களா?” என்று கூறினார். (அவர்கள் அதைப்
புசிக்காததால்,) அவருக்கு அவர்களைப் பற்றி உள்ளூர ஓர்
அச்சம் ஏற்பட்டது, (51:25 to 27) ஆனால், அவர்களுடைய
கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர்
அவர்களைப் பற்றி ஐயப்பட்டார். (11:70).
(ஆனால்)
அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய
சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி
நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள். (15:52
and 53). அப்போது, அவருடைய
மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர்
சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப்
பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம். (11:71). பின்னர்
இதைக் கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!”
என்று கூறினார். “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ
என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!” (51:29, 11:72). “இவ்வாறே (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று) உம் இறைவன் கூறினான், நிச்சயமாக
அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்”
என்று கூறினார்கள். (51:30)
அதற்கு,
இப்ராஹீம் (அலை)மும் “என்னை
முதுமை வந்தடைந்திருக்கும் போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக்
கேட்டார். அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள்
உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை
கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள். வழிகெட்டவர்களைத் தவிர,
வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று சொன்னார்.
(15:54 to 56). “(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய
பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள்
மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை
வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள். (11:73).
2. ஜகரிய்யா:
அல்லாஹ்
குர்ஆனில் குறிப்பிடுகின்றான்: “(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய
ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
(19:2). ஜகரிய்யா பீபி மர்யமின் பாதுகாப்பாளர். மேலும் ஜகரிய்யா அவர் இருந்த
மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவரிடம்
உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உமக்கு
எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான்
நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள் (பதில்) கூறினாள். (3:37).
அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்). (அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; இறைவனே!! நிச்சயமாக நீர் உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!” “இறைவனே!! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." (19:3 to 6 and 3:38)
அவர்
தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள்
அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து)
நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு
வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே
நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர். (3:39 and 19:7). (அதற்கு
அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின்
தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன்
உண்டாகுவான்?” எனக் கூறினார். (19:8) அதற்கு இறைவன் “(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு
மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான். (19:9) அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” (3:40)
(அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர்
அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; (19:10). “நீர் சவுக்கியத்துடன் இருக்கும்
நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமல் இருப்பீர்;
(அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.
ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்;
பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர்,
“காலையிலும், மாலையிலும்
(அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார். (3:41
and 19:11). இவ்வாறு ஜகரிய்யாவிற்கு யஹ்யா பிறந்தார்.
No comments:
Post a Comment