Sunday, March 31, 2024

 

Today’s Question

22. Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

22. How many Prophets did Prophet Muhammad ﷺ met on the different heavens during Isra al Miraaj?

22. நபி அவர்கள் மேராஜ் பயணம் மேற்கொண்ட போது எத்தனை நபிமார்களை சுவர்க்கத்தில் சந்தித்தார்?

  

 

21. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 

21.  எந்த திருக்குர்ஆன் ஆயத் மீது கலீஃபா உஸ்மான் (ரஜி) வின் இரத்தம் அவரை கொலை செய்யப்படும் போது தெறித்து விழுந்தது?

பதில்: அவருடைய இரத்தம் திருக்குர்ஆனின் சூரா பகரா, வசனம் 137-ல் தெறித்து விழுந்தது

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا  وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌  فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ  وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

"எனவே அவர்களி (ன் கெடுதல்களி) லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறு வோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கின்றான். (2:137).

உஸ்மான் (ரஜி) நபி அவர்களின் மருமகன், நபி அவர்களின் இரண்டு மகள்களை ஒன்றன் ஒன்றாக மணந்தவர். அவர் பிர்-ரும்மாஹ் என்ற கிணற்றை, ஒரு பேராசை படைத்த யூதனிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு குடிநீரை இலவசமாக வழங்கினார். மஸ்ஜீத் நபவியை விஸ்தீரப்படுத்த தன் நிலத்தை இலவசமாக வழங்கினார். அரேபியாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த அரேபியர்கள் குர்ஆனை பல் வேறு விதமாக வாசித்தார்கள். அதனை கலீஃபா  உஸ்மான் (ரஜி) கவனத்திற்கு கொண்டு வந்தனர். மீண்டும் அதே குழுவை அழைத்து குர்ஆனை எல்லோரும் ஒரே மாதிரி ஓத முறையாக எழுதப்பட்டது.

அப்படி வாரி வழங்கிய மனிதரை கிளர்ச்சியாளர்கள் அவரது வீட்டை சூழ்ந்து நின்று தண்ணீர் மற்றும் உணவு கொடுக்காமல் முற்றுகை இட்டனர். அவரை தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு கூட செல்லவிடாது தடுத்தனர். நபி அவர்களின் சஹாபாக்களில் பலர் கிளர்ச்சியாளர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். அவர்கள், அவரை நாங்கள் ஒன்று திரண்டு கிளர்ச்சியாளர்களோடு போர் புரிந்து உம்மை மீட்கின்றோம் என்று கெஞ்சி கேட்டனர். கிளர்ச்சியாளர்களும் முஸ்லிம்கள் என்பதால் தன்னால் முஸ்லிம்களிடையே பிரிவினை உண்டாக்கக் கூடாது என்றும், முஸ்லிம்கள் எவரும் தன்னால் கொல்லப்படக் கூடாது என்றும் அவர் உறுதியாக இருந்தார். அவர் அந்த நாற்பது நாட்களும் நோன்பிருந்தார். அவரோடு அவர் மனைவி நைலாவும் கூட இருந்தார். சில இளவயது நபி தோழர்களான அப்துல்லாஹ் பின் உமர் (ரஜி), ஹசேன் பின் அலி (ரஜி), ஹூசேன் பின் அலி (ரஜி) போன்றோரை பாதுகாப்பிற்காக அவரோடு இருக்க அனுமதித்தனர்.

கொல்லப்படுவதற்கு முன் உஸ்மான் (ரஜி) அவர்கள் ஒரு கனவு கண்டார். அதை கண்டவுடன் அதனை தன்னோடு இருந்தவர்களிடம் கூறினார், "அவர்கள் இன்றைக்கு என்னை கொல்லப்போகிறார்கள்" என்றார். அன்று வெள்ளிக்  கிழமை. ஹிஜ்ரி 35, துல் ஹிஜ்ஜா 18 , [ 17 ஜூன், கி.பி. 656). பின் அவர் கூறினார், " நான் நபி அவர்களை என் கனவில் கண்டேன். அபு பக்ர் (ரஜி) அவர்களும் மற்றும் உமர் பின் கத்தாப் (ரஜி) அவர்களும் அவரோடு இருந்தனர். நபி பெருமானார் அவர்கள் கூறினார்கள், " உஸ்மான் (ரஜி) நாங்கள் எங்களோடு நோன்பு திறப்பதற்காக உம்மை எதிர்பார்க்கின்றோம்" என்றார்

உஸ்மான் (ரஜி) அவர்கள் தன் பாதுகாப்பிற்காக இருந்த அனைத்து சஹாபாக்களையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினார். அவர் தனது கதவைத் திறந்து குர்ஆனை ஓதத் தொடங்கினார், இதனை அறிந்த அவரது வீட்டை முற்றுகையிட்ட கிளர்ச்சியாளர்கள் அவரது அறைக்குள் நுழைந்தனர். அவர்கள் தாடியைப் பிடித்து இழுத்து, அவரை ஒரு குச்சியால் தாக்கினர். அவர்களில் ஒருவன் உஸ்மான் (ரஜி) வை வாளால் தாக்க, அவர் தன்னை பாதுகாக்க தன் கையை மேலே தூக்கிய போது, அவர் மனைவியும் அந்நேரத்தில் அருகே வந்து காப்பாற்ற, அவர் கையும் அவரது மனைவின் விரல்களும் துண்டிக்கப்பட்டுவிட்டன.  அப்போது இரத்தம் தெறித்து அவர் வாசித்துக் கொண்டிருந்த குர்ஆனின் "ஃபஸயக்ஃ பிகஹுமுல்லாஹ்"(அல்லாஹ் உங்களுக்காக அவர்களை கவனித்துக் கொள்வான்) என்ற வசனத்தின் மீது சிந்தியது. உஸ்மான் (ரஜி) அவர்களிடம், "அல்லாஹ்வின்மீது ஆணையாக நீ துண்டித்த இந்த கை, திருக்குர்ஆனை எழுதிய முதல் கை" என்று கூறினார். கிளர்ச்சியாளர்களில் மேலும் ஒருவன் அவரது கழுத்தில் தாக்க அவர் ஷஹீத்  ஆனார்.

ஷஹீதான மூன்று நாட்களுக்குப்பின் தான் அவரது உடல் வெளியே கொண்டு வரப்பட்டது. ஜன்னதுல் பகீக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது அங்கு அவரை அடக்கம் செய்யக்கூடாது என்று கலகம் செய்ய அதற்கு பக்கத்தில் இருந்த யூதர்களின் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. பிற்காலத்தில் அவ்விடம் ஜன்னதுல் பகீயோடு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

الحمدلله

 

 

21. Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

21. Which ayath of the Quran, Khalif Usman (RA) was reciting when he was assassinated?

Answer: His blood splashed on the copy of the Quran, he was reading upon Verse 137 of Surah Baqarah.

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا  وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ‌  فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ  وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

"And Allah will suffice you for defense against them. He is the Hearer, the Knower."(2:137).

Uthman (RA), the son-in- law of the Prophet ﷺ by he married the two daughters of the Prophet ﷺ one after another. He bought the well of Bir Rumah from a Yahood (Jew) for a large price and supplied water free to anyone who came. He gave his land for the expansion of Masjidae Nabavi. He made arrangement to make the "Musaf" (written copy of Quran) in one copy to avoid the differences in dialect that was existed during his time in and around Arabia.

Such a man was surrounded by rebels, for forty days, without giving him water and food. He was not allowed to pray in the Masjidae Nabavi. All the Companions of the Prophet ﷺ, who were in large number willing to fight with the rebels, but Usman (RA) did not want them to shed the blood of the Muslims for his sake. He fasted on those forty days in his house. His wife Nuila was with him. Some of the youngsters like Abdullah bin Umar (RA), Hasan ibn Ali (RA). Husain ibn Ali (RA) were allowed to be with him for his protection.

Before his assassination Usman (RA) saw a dream. He told the people “They are going to kill me today.” That was Friday,18th of Dhul-Hijjah 35AH (17 June, 656 AD). Then he said, “I saw the Prophet ﷺ in my dream. Abu Bakr (RA) and Umar ibn Al-Khattab (RA) were with him, and the Prophet ﷺ said, ‘O Usman! We are waiting to join us to break the fast."

On that day he sends all the Companions who were accompanying him for his safety. He opened the door and started reading Quran while the rebels came inside the house. One of them came and caught his beard in his hand. Then another with a stick stroked him. Another took his sword. Usman (RA) raised his hand as a protective reflex. His wife came for his rescue. But the rebel cut off his hand and the fingers of his wife. Usman said, "I swear by Allah that the hand you have cut was the hand that wrote the Quran first". Then another one came and cut his head.

After three days, the body was taken to Jannathul Baqi.  They never allowed to burry there. Then he was taken to the nearby grave yard of Yahood. But later this place was extented to Jannathul Baqi, a grave yard of Sahabas and Muslims.

الحمدلله

 

Saturday, March 30, 2024

 

Today’s Question

21. Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

21.Which ayath of the Quran Usman (RA) was reciting when he was assassinated?

21. எந்த திருக்குர்ஆன் ஆயத் மீது கலீஃபா உஸ்மான் (ரஜி) வின் இரத்தம் அவரை கொலை செய்யப்படும் போது தெறித்து விழுந்தது?

 

 

20. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 

20.  நபிமார்களிடையே மிக அதிக அழகுடையவர் யார்?

பதில்:நபி யூசூஃப் (அலை) 

நபி யூசூஃப் (அலை) எகிப்தில் அஜீஸ் வீட்டில் ஓர் அழகான வாலிபராக வளர்ந்தார். அவரை வளர்த்த அந்த அம்மையார், அவரது அழகில் மயங்கி, கதவுகளை மூடிக் கொண்டு அவரை அழைத்தார். ஆனால் யூசூஃப் (அலை) தன் இறைவனிடம் பாதுகாப்பு தேட அல்லாஹ்வும் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்தார். (12:23).

மேலும் நகரத்தில் உள்ள மற்ற பெண்கள், “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தி இருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கி றோம்” என்று பேசிக் கொண்டார்கள். (12:30).

அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப்பெண்களுக்கு அழைப்பு அனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப்பெண்களில் ஒவ்வொருக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி)  அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக் கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்கு உரிய ஒரு மலக்கே அன்றி வேறில்லை” என்று கூறினார்கள். (12:31).

மேலும் அப்பெண்கள் அவளிடம் கூறினார்கள், "இந்த உண்மை நிலையை கண்ட  நாங்கள்  இனிமேல் உம்மை பழிக்கமாட்டோம்." அப்பெண்களும் யூசூஃபை விட அழகான வாலிபனை கண்டதில்லை ஏனெனில் உலகத்தின் பாதி அழகு அவருக்கு கொடுக்கப் பட்டிருந்தது.

நபி அவர்கள் மேராஜ் பயணம் மேற்கண்ட போது, மூன்றாவது வானத்தில் நபி யூசூஃப் (அலை ) மைக் கண்டதும், அவர் கூறியது, "உலகத்தின் பாதி அழகு அவருக்கு கொடுக்கப்பட்டது." என்று.

 الحمدلله


  

 

20. Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

 20. Who is the most handsome Prophet?

Answer: Yusuf (AS).

Yusuf (AS) was very handsome, filled with manhood and beauty, when he was growing up in Egypt in Aziz's house. The wife of Aziz, who brought him, loved him violently and once she called him by closing the doors. But Yusuf (AS) refused her call and sought refuge in Allah, his Rabb!" And his Lord answered his prayers. (12:23)

And women in the city said: "The chief's wife seeks her slave to yield himself (to her), surely he has affected her deeply with (his) love; most surely we see her in manifest error." (12:30).

She sent for all women, an invitation for a banquet to her house, she prepared a sitting room with couches, pillows and served fruits that requires knives to cut. She gave each one of them a knife. He called Yusuf (AS) to that room. After seeing him the ladies of the town deemed him great, and cut their hands (in amazement at his beauty), and said: "How perfect is Allah! No man is this! This is none other than a noble angel!'' (12:31).

They said to her, "We do not blame you anymore after the sight that we saw.'' They never saw anyone like Yusuf (AS) before, for he was given half of all beauty.

An authentic Hadhees stated that the Messenger of Allah ﷺ passed by Prophet Yusuf (AS), during the Night of Isra' in the third heaven and commented, "He was given a half of all beauty."

الحمدلله

 

 

Today’s Question

20. Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

20. Who is the most handsome Prophet?

20.  நபிமார்களிடையே மிக அதிக அழகுடையவர் யார்?

  

 

19. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 

19. உங்களுக்கு தெரியும், நம் நபி பெருமானார் அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார் என்று. வேறு எந்த நபி பரிந்துரைக்கு தகுதியானவர்?

பதில்: வேற எந்த நபியும் பரிந்துரை செய்ய முடியாது.

பரிந்துரைக்கும் சக்தி நபி அவர்களுக்கு அல்லாஹ் பரிசாக கொடுக்கவில்லை. அது மற்றவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டு இருக்கும் போது தூங்காமல் விழித்து, இரவு நேர தொழுகையை கடினமாக தொழுது தன் உம்மத்திற்காக பெற்ற தகுதி. இதனால் அவர் "மகாமே மஹமூத்" (புகழும், மகிமையும் கொண்ட உறைவிடம்)  என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.

அல்லாஹ் தஹஜூத் தொழும் படி நபி அவர்களுக்கு கட்டளை இட்டான்:

"இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜூத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமே மஹ்மூத்” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்". (17:79).

அதுவும் இல்லாமல் அவருடைய உம்மாஹ்விலுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு தடவை "அதான் (தொழுகை அழைப்பு)" கேட்ட பிறகு, "யா அல்லாஹ்! சரியாக நிறுவப்பட்ட  தொழுகையின் அதிபதியே!

முஹம்மத் நபிக்கு மற்ற எல்லா உயிரினங்களை விட மேலான "மகாமே மஹமூத்" என்றழைக்கப்படும் உயர்ந்த மேலான அந்தஸ்த்தை, உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் அவருக்கு நீ வாக்களித்தபடி  தந்தருள்வாயாக!" என்று பிரார்த்திப்பர். இறை தூதர் கூறினார், "யார் இந்த துவாவை ஓதுகிறார்களோ அவர்களுக்கு நான் நிச்சயமாக மறுமை நாளில் பரிந்துரைப்பேன்" என்று.

பரிந்துரை பற்றிய ஹதீஸ்:

மஃபத் பின் ஹிலால் அல்-அன்ஸி அவர்கள் கூறியதாவது: "நாங்கள், அதாவது, பஸ்ராவில் இருந்து சிலர் ஒன்று கூடி, , தாபித் அல்-புன்னானியிடம் எங்கள் பரிந்துரையின் ஹதீஸைப் பற்றி அவரிடம் கேட்பதற்காக சென்றோம். அங்கிருந்து நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரஜி) விடம் கேட்பதற்காக கூட்டாகச் சென்றோம். அனஸ் (ரஜி) அவரது அரண்மனையில் இருந்தார், எங்கள் வருகை அவரது துஹா தொழுகையுடன் ஒத்துப்போனது. நாங்கள் உள்ளே நுழைய அனுமதி கேட்டோம்படுக்கையில் அமர்ந்திருந்த அவர் எங்களுக்கு அனுமதி வழங்கினார். நாங்கள் தாபித்திடம் கூறினோம், முதலில் அவரிடம் பரிந்துரை செய்யும் ஹதீஸைத் தவிர வேறு எதையும் கேட்காதீர்கள் என்று. அவர், "ஓ அபு ஹம்ஸா! பாஸ்ராவைச் சேர்ந்த உங்கள் சகோதரர்கள் உங்களிடம் பரிந்துரை செய்யும் ஹதீஸைப் பற்றி கேட்க வந்திருக்கிறோம் என்றார்கள்.

 நபி அவர்கள் கூறியதாக அனஸ் (ரஜி) குறிப்பிட்டுள்ளார்: "நம்பிக்கையாளர்கள் மறுமை நாளில் ஒன்று கூடி, "எங்கள் இறைவனிடம்  எங்களுக்காகப் பரிந்து பேசுமாறு யாரிடமாவது நாங்கள் கேட்க வேண்டாமா?"  என கூறி அவர்கள் ஆதம் (அலை) மிடம் வந்து: 'நீங்கள் மனிதகுலத்தின் தந்தை; அல்லாஹ் தன் கையால் உங்களைப் படைத்தான், அவன் தன் வானவர்களை உங்களை வணங்கச் செய்தான், எல்லாவற்றின் பெயர்களையும் அவன் உங்களுக்கு கற்றுக் கொடுத்தான், எனவே எங்களுக்காக பரிந்து பேசுங்கள், அதனால் நாங்கள் இருக்கும் இந்த இடத்திலிருந்து அவர் எங்களுக்கு நிவாரணம் தருவார்." என்றோம்.  ஆதம் (அலை) பதிலளித்தார்: 'நான் [அதைச் செய்யும்] நிலையில் இல்லை - மேலும் அவர் தனது தவறைக் குறிப்பிட்டு வெட்கப்பட்டு, "நூஹ் (அலை) மிடம் செல்லுங்கள், ஏனென்றால் அவர் தான் பூமியில் வசிப்பவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர்' என்று கூறுவார்.

 எனவே அவர்கள் அவரிடம் வருவார்கள், நூஹ் (அலை) கூறுவார்: 'நான் [அதைச் செய்யும்] நிலையில் இல்லை - மேலும் அவர் தனக்கு [சரியான] அறிவு இல்லாத ஒன்றைத் தனது இறைவனிடம் கோரியதைக் குறிப்பிடுவார் (குர்ஆன் அத்தியாயம் 11 வசனங்கள் 45- 46). மேலும் அவர் வெட்கப்பட்டு இவ்வாறு கூறுவார்: இரக்கமுள்ள அல்லாஹ்வின் நண்பரிடம் (இப்ராஹீம் [அலை] மிடம்) செல்லுங்கள்' என்று.

எனவே அவர்கள் அவரிடம் வருவார்கள், இப்ராஹீம் (அலை) கூறுவார்: 'நான் [அதைச் செய்யும்] நிலையில் இல்லை. அல்லாஹ் யாரிடம் நேரிடையாக பேசி, தவ்ராத் கொடுத்தானோ, அந்த ஊழியரான மூஸா (அலை) மிடம் செல்லுங்கள்.

எனவே அவர்கள் அவரிடம் வருவார்கள், மூஸா (அலை) கூறுவார்: நான் [அதைச் செய்யும்] நிலையில் இல்லை - மேலும் அவர் ஒருவரின் உயிரை எடுத்ததைப் (குர்ஆன் அத்தியாயம் 28 வசனங்கள் 15-16) பற்றி குறிப்பிடுவார். தன் இறைவனின் முன் வர வெட்கப்பட்டு, "அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான ஈஸா (அலை) மிடம் செல்லுங்கள், அவர் அல்லாஹ்வின் வார்த்தையால் பிறந்தவர்' என்று கூறுவார்.

எனவே அவர்கள் ஈஸா (அலை) மிடம்  வருவார்கள், அவர் கூறுவார்: "நான் [அதைச் செய்யும்] நிலையில் இல்லை. முஹம்மது மிடம் செல்லுங்கள்" என்பார்.

 எனவே அவர்கள் என்னிடம்  வருவார்கள். நான் என் இறைவனிடம் சென்று பரிந்துரை பண்ணலாமா என்று அனுமதி கேட்பேன்.  அனுமதி கிடைக்கும். நான் என் இறைவனை பார்க்கும் போது ஸஜ்தா செய்வேன். அவர் அப்படியே என்னை அவர் விரும்பிய நேரம் வரை விட்டுவிடுவார்.  பிறகு கூறப்படும், "ஓ முஹம்மதே ﷺ! உங்கள் தலையை உயர்த்தி பேசுங்கள், ஏனென்றால் நீங்கள் கேட்கப்படுவீர்கள், கேளுங்கள், ஏனென்றால் உங்களுக்கு (உங்கள் கோரிக்கை) வழங்கப்படும்; மேலும் மன்றாடுங்கள், ஏனெனில் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்.' என்று எனக்கு கூறப்படும் "நான் என் உம்மாஹ்! என் உம்மாஹ்!  என்பேன். 'ஒரு பார்லி தானியத்தின் எடைக்கு சமமான இதயங்களில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் நரகத்திலிருந்து (நெருப்பிலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று கூறப்படும். நான் சென்று அவ்வாறே செய்து திரும்பவும் அதே புகழுடன் அவரைத் துதித்து, அவர் முன் விழுந்து விழுந்து வணங்குவேன். பிறகு, 'ஓ முஹம்மதே ﷺ! உங்கள் தலையை உயர்த்தி பேசுங்கள், ஏனென்றால் நீங்கள் கேட்கப்படுவீர்கள், கேளுங்கள், ஏனென்றால் உங்களுக்கு (உங்கள் கோரிக்கை) வழங்கப்படும்; மேலும் மன்றாடுங்கள், ஏனெனில் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்.நான் என் உம்மாஹ் என் உம்மாஹ்!  என்பேன்

'ஒரு சிறிய எறும்பு அல்லது கடுகு விதையின் எடைக்கு சமமான இதயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் அதிலிருந்து வெளியே அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறப்படும். நான் சென்று அவ்வாறே செய்து திரும்பவும் அதே புகழோடு அவரைத் துதித்து, அவர் முன் விழுந்து விழுந்து வணங்குவேன். பிறகு, 'ஓ முஹம்மதே ﷺ! உங்கள் தலையை உயர்த்தி பேசுங்கள், ஏனென்றால் நீங்கள் கேட்கப்படுவீர்கள், கேளுங்கள், ஏனென்றால் உங்களுக்கு (உங்கள் கோரிக்கை) வழங்கப்படும்; மேலும் மன்றாடுங்கள், ஏனெனில் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்.' நான்  ஆண்டவரே, என் உம்மாஹ், என் உம்மாஹ் என்பேன்.  'அப்போது அவர் கூறுவார்,'எவருடைய இதயங்களில் இலகுவான, இலகுவான கடுகு வரை நம்பிக்கை உள்ளதோ அவர்களைப் போய் வெளியே எடுங்கள். (அவர்களை) நெருப்பிலிருந்து வெளியே எடுக்கவும்.' நான் போய் அப்படியே செய்வேன். [அல்-புகாரி, 7510).

 முஸ்லிம், அத்-திர்மிதி மற்றும் இப்னு மாஜா ஆகியவையும் இதையே கூறுகிறது.

பரிந்துரை யாருக்கு பயனளிக்கும்:

உம்மாவில் மிகப் பெரிய பாவங்களை செய்தவருக்கு. (ஸஹீஹ், சுனன் அல்- திர்மிதி, 1983);

நல்ல செயல்களும் கெட்ட செயல்களும் சரிசமமாக இருந்ததால் சுவர்க்கத்தில் நுழையாத முஸ்லிம்களுக்கு;

கணக்கே கேட்காமல் சுவர்க்கத்தில் நுழைபவருக்கு;

தன் பெரிய தந்தை அபு தாலிபிற்கு நரக நெருப்பில் தண்டனையை இலேசாக்கும்படி.

விசுவாசிகள் மறுமை நாளில் பயங்கரங்களிலிருந்து விடுபட்டு விரைவாக சொர்க்கம் நுழைய.

الحمدلله

 

 

19. Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

19. You know our Prophet Mohammad ﷺ will be the only one who can intercede Allahuthala for the people on the Day of judgement. Is there any other Prophet who can do so?

 Answer: No other Prophet has the power to intercede.

This power the Prophet Mohammad ﷺ, was not a gift of Allahuthala. But it is due to the hard earned position, Maqaman Mahamud (a station of praise and glory) obtained by the Prophet ﷺ praying at night strenuously, when all the others are sleeping.

Allah commanded the Prophet ﷺ to pray Thahajjud:

“And in some parts of the night offer the Salat (prayer) with it (i.e. recite the Qur’an in the prayer), as an additional prayer (Tahajjud) for you (O Muhammad ﷺ). It may be that your Lord will raise you to Maqaman Mahmuda (a station of praise and glory, i.e. the highest degree in Paradise!)”. [17:79].

His Umma, as an answer to the call for prayer (Azan) supplicate every time, “Allah, the Lord of this perfect call and established prayer, grant Muḥammad ﷺ the status (the highest station in Paradise) and pre-eminence (superiority over the rest of the creation), and resurrect him to the praiseworthy station that You have promised him.” The Messenger of Allah ﷺ said, “Whoever says [the above] after the azan shall receive my intercession on the Day of Judgement” (Bukhari).

 Hadhees about intercession:

Narrated Mabad bin Hilal Al-Anzi: “We, i.e., some people from Basra gathered and went to Anas bin Malik, and we went in company with Thabit Al-Bunnani so that he might ask him about the Hadith of Intercession on our behalf. Behold, Anas (RA) was in his palace, and our arrival coincided with his Duha prayer. We asked permission to enter and he admitted us while he was sitting on his bed. We said to Thabit, "Do not ask him about anything else first but the Hadith of Intercession." He said, "O Abu Hamza! There are your brethren from Basra coming to ask you about the Hadith of Intercession."

Anas (RA) told them a long Hadhees which he heard from the Prophet ﷺ, who proclaimed: “When the Day of Resurrection comes, the people will surge with each other like waves. They will state: ‘Should we not ask [someone] to intercede for us with our Lord?’ So they will come to Adam (AS) and will say: ‘You are the Father of mankind; Allah created you with His Hand He made His angels bow down to you and He taught you the names of everything, so intercede for us with you Lord so that He may give us relief form this place where we are’. And he will say: ‘I am not in a position [to do that] - and he will mention his wrongdoing and will feel ashamed and will say: Go to Nuh (AS), for he is the first messenger that Allah sent to the inhabitants of the earth’.

So they will come to him and he will speak: ‘I am not in a position [to do that] - and he will mention his having requested something of his Lord about which he had no [proper] knowledge (Quran Chapter 11 Verses 45-46), and he will feel ashamed and will say: Go to the Friend of the Merciful, (Ibraham [AS])’.

So they will come to him and he will declare: ‘I am not in a position [to do that]. Go to Musa (AS), a servant to whom Allah talked and to whom He gave the Taurah.’

So they will come to him and he will announce: ‘I am not in a position [to do that] - and he will mention the talking of a life other that for a life (Quran Chapter 28 Verses 15-16), and he will feel ashamed in the sight of his Lord and will pronounce: Go to Isa ibn Marium (AS), Allah's servant and messenger, Allah's word and spirit’.

So they will come to him and he will state: ‘I am not in a position [to do that]. Go to Muhammad ﷺ, a servant to whom Allah has forgiven all his wrongdoing, past and future’.

So they will come to me and I shall set forth to ask permission to come to my Lord, and permission will be given, and when I shall see my Lord I shall prostrate myself. He will leave me thus for such time as it pleases Him, and then it will be said [to me]: 'O Muhammad ﷺ, raise your head and speak, for you will be listened to, and ask, for you will be granted (your request); and intercede, for your intercession will be accepted.' I will say, 'O Lord, my followers! My followers!' It will be said, 'Go and take out of it all those who have faith in their hearts equal to the weight of a barley or wheat grain, small ant or a mustard seed.'

I will go and do so and return to praise Him with the same praises, and fall down in prostration before Him. It will be said, 'O, Muhammad ﷺ, raise your head and speak, for you will be listened to, and ask, for you will be granted (your request); and intercede, for your intercession will be accepted.' I will say, 'O Lord, my followers!' Then He will say, 'Go and take out (all those) in whose hearts there is faith even to the lightest, lightest mustard seed. (Take them) out of the Fire.' I will go and do so. Then there shall come out of Hell-fire he who has said: There is no god but Allah and who has in his heart goodness weighing an atom’. “Then I will come back a fourth time and praise Him with those words of praise and I will fall prostrate before Him. He will say, ‘O Muhammad ﷺ, raise your head. Speak and intercession will be granted to you, ask and you will be given, intercede and your intercession will be accepted.’ I will say, ‘O Lord, give me permission (to bring forth) all those who said La ilaha ill-Allah.’ He will say, ‘By My Might, My Majesty, My Supremacy and My Greatness, I will most certainly bring forth from it those who said La ilaha ill-Allah.’” (Narrated by Al-Bukhari, 7510) "' [Sahih al-Bukhari, 7510]. It was related by Muslim, at-Tirmidhi, and Ibn Majah.

The intercession of the Messenger ﷺ will be for those:

★ among his ummah who committed major sins.” (Sahih, Sunan al-Tirmidhi, 1983).

★ whose good deeds and bad deeds are equal, that they may enter Paradise, and for others who had been ordered to Hell, that they may not enter it.

★ few who may enter Paradise without being brought to account.

★ to his paternal uncle Abu Talib, to reduce the torment of the Fire for him.

★ to the believers to relieve them of the horrors of the Day of Judgement and granted permission to enter Paradise. 

الحمدلله

  

Friday, March 29, 2024

 

Today's Question

19. Ramzan Quiz

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 

19. You know our Prophet Mohammad ﷺ will be the only one who can intercede Allahuthala for the people on the Day of judgement. Is there any other Prophet who can do so?

19. உங்களுக்கு தெரியும், நம் நபி பெருமானார் அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார் என்று. வேறு எந்த நபி பரிந்துரைக்கு தகுதியானவர்?

 

 

18. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ 

18. திருக்குர்ஆனின் எந்த அத்தியாயத்தில் 'அல்லாஹ்' என்ற வார்த்தை ஒவ்வொரு வசனத்திலும் உள்ளது?

பதில்: 58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்)

58:1. (நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.

58:2. “உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.

58:3. மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி) னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ்,  நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.

58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.

58:5. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் - திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.

58:6. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.

58:7. நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.

58:8. இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் “நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை” என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும்; அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.

58:9. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

58:10. ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய (ப் பேச்சாகு) ம்; ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (அவர்களுக்கு) அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது; எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும்.

58:11. ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

58:12. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.

58:14. எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர். அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க; ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!

58:15. அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.

58:16. அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்; ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.

58:17. அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது; அவர்கள் நரகவாதிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்

58:18. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள்; அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!

58:19. அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க; ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!

58:20. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.

58:21. “நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்” என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்; யாவரையும் மிகைத்தவன்.

58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.

 الحمدلله


                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...