20. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
20. நபிமார்களிடையே மிக அதிக அழகுடையவர் யார்?
பதில்:நபி யூசூஃப் (அலை)
நபி யூசூஃப் (அலை) எகிப்தில் அஜீஸ் வீட்டில் ஓர் அழகான வாலிபராக வளர்ந்தார். அவரை வளர்த்த அந்த அம்மையார், அவரது அழகில் மயங்கி, கதவுகளை மூடிக் கொண்டு அவரை அழைத்தார். ஆனால் யூசூஃப் (அலை) தன் இறைவனிடம் பாதுகாப்பு தேட அல்லாஹ்வும் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்தார். (12:23).
மேலும் நகரத்தில் உள்ள மற்ற பெண்கள், “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தி இருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கி றோம்” என்று பேசிக் கொண்டார்கள். (12:30).
அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப்பெண்களுக்கு அழைப்பு அனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப்பெண்களில் ஒவ்வொருக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக் கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்கு உரிய ஒரு மலக்கே அன்றி வேறில்லை” என்று கூறினார்கள். (12:31).
மேலும் அப்பெண்கள் அவளிடம் கூறினார்கள், "இந்த உண்மை நிலையை கண்ட நாங்கள் இனிமேல் உம்மை பழிக்கமாட்டோம்." அப்பெண்களும் யூசூஃபை விட அழகான வாலிபனை கண்டதில்லை ஏனெனில் உலகத்தின் பாதி அழகு அவருக்கு கொடுக்கப் பட்டிருந்தது.
நபி ﷺ அவர்கள் மேராஜ் பயணம் மேற்கண்ட போது, மூன்றாவது வானத்தில் நபி யூசூஃப் (அலை ) மைக் கண்டதும், அவர் கூறியது, "உலகத்தின் பாதி அழகு அவருக்கு கொடுக்கப்பட்டது." என்று.
الحمدلله
No comments:
Post a Comment