6. திருக்குர்ஆனில்
குறிப்பிடப்பட்டுள்ள சுவர்க்கங்களை கூறுக.
இந்த சுவர்க்கங்கள் ஒன்றன் மேல் ஒன்றாயிருக்கும். ஃபிர்தௌஸ் என்ற சுவர்க்கம் தான் அடுக்குகளில் உயர்ந்ததாக இருக்கும். சுவர்க்கங்களைப்பற்றி திருக்குர்ஆன் கூறுவதை காண்போம்:
1.ஜன்னத்துல்
ரௌஜாத்:
"எவர்
ஈமான் கொண்டு ஸாலிஹான அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில்
(رَوْضَاتِ
ٱلْجَنَّاتِ) இருப்பார்கள் அவர்கள் விரும்பியது
அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.” (42:22)
2. ஜன்னத்துல்
ஆலியா:
"அவர்
திருப்தியான சுக வாழ்க்கையில் - உயர்ந்த சுவர்க்கத்தில் (جَنَّةٍ عَالِيَة)
இருப்பார். அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.” (69:21-23)
"உன்னதமான
சுவர்க்கச் சோலையில் - அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.” (88:10)
3. ஜன்னத்துல்
அத்ன்:
"முஃமினான
ஆண்களும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவ னபதிகளை (جَنَّاتِ عَدْنٍ)
வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில்
அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத
மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அது தான் மகத்தான
வெற்றி. ” (9:72)
"நிலையான
(அந்த) சவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில்
(சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.” (13:23)
"அவர்களுக்கு
அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும்.” (16:31)
"அவர்களுக்கு
அங்கு கடகங்கள் அணிவிக்கப்படும், ஸுன்துஸு, இஸ்தப்ரக்
போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து
இருப்பார்கள்.” (18:31).
"அச்சுவனபதிகளில்
அவர்கள் வீணான எதையும் செவியுறமாட்டார்கள். இன்னும் அங்கே அவர்களுக்குக்
காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு
இருக்கிறது. ” (19:61)
4. ஜன்னத்துல்
ஃபிர் தௌஸ்:
"நிச்சயமாக
எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள்
(விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.” (18:107)
5. ஜன்னத்துல்
மாவா:
"ஸித்ரத்துல்
முன்தஹா என்ற இலந்தை மரத்தின் சமீபத்தில் தான் ஜன்னத் துல் மாவா என்னும்
சுவர்க்கம் இருக்கிறது.” (53:14 &15)
"எவர்கள்
ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார் களோ அவர்களுக்கு அவர்கள்
செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்)
விருந்தினராய் (உபசரிக்கப் படுவார்கள்).” (32:19)
6. ஜன்னத்துல்
நயீம்:
"பாக்கியம்
நிறைந்த சுவனபதியின் (جَنَّةِ
النَّعِيمِ) வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை
ஆக்கிவைப்பாயாக!" இந்த பிரார்த்தனையை இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்தார். ” (26:85)
"அவருக்குச்
சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும்
உண்டு.” (56:89)
"அவர்களில்
ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் -
நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?” (70:38)
"வேதமுடையவர்கள்
மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை
அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த
சுவனபதிகளில் நுழைய வைப்போம்.” (5:65)
"இன்பமயமான
சவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.” (10:9).
7. ஜன்னத்துல்
குல்த்:
"பயபக்தியுடையவர்களுக்கு
வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் (جَنَّةُ الْخُلْدِ)
நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்" என்று (அவர்களிம்
நபியே!) நீர் கூறும். ” (25:15)
8. சாந்தியும்
சமாதானமுமுள்ள வீடு;
"அவர்களுக்கு
அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமு முள்ள வீடு (دَارُ السَّلَامِ)
உண்டு.” (6:127)
[اللَّهُمَّ إِنِّي
أَسْأَلُكَ الْجَنَّةَ] “ஓ அல்லாஹ்! நான்
உன்னிடம் சுவர்க்கத்தை வேண்டுகின்றேன்! ” என்று பிரார்த்தித்தால்,” சுவர்க்கம் அல்லாஹ்விடம்
கூறும் “அல்லாஹ்வே இவருக்கு சுவர்க்கத்தை அளிப்பாயாக!"
நபி ﷺ குறிப்பிட்டுள்ளார்:
“யார் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தை
மூன்று முறை கேட்கிறார்களோ, அவர்களுக்கு சுவர்க்கம், ஓ அல்லாஹ்! இவருக்கு சுவர்க்கத்தை அளிப்பாயாக! என்று கூறும்."
No comments:
Post a Comment