Sunday, October 16, 2022

 

5. மூஸா (அலை), ஃபிர்அவனிடமும் அவருடைய சமுதாயத்தினருடனும் இருக்கும் போது கொடுக்கப்பட்ட ஒன்பது அத்தாட்சிகள் யாவை?

பதில்: ஃபிர்அவனின் சமுதாயம் கண்ட ஒன்பது அத்தாட்சிகள்:

1. கைத்தடி பாம்பாக மாறுவது.

2. வலக்கை ஒளி வீசுவது.

3. பஞ்சம், குறைந்த விவசாயம்.

4. வெள்ளம்.

5. வெட்டுகிளி.

6. பேன்.

7. தவளைகள்.

8. இரத்தம்.

9. கடல் பிளவுபடுவது.

 

சிலர் இவைகளைத் தவிர சில சம்பவங்களை அத்தாட்சி என கருத்து தெரிவிக்கின்றனர்:

   * பஞ்சம் மற்றும்  குறைந்த விவசாயத்தை இரண்டு அத்தாட்சிகளாக சிலர் கருதுகின்றனர்

   * மூஸா (அலை) தன் சகோதர் ஹாரூன் (அலை)   மையும் நபியாக்கி  அவருக்கும் சரி நிகரான அதிகாரத்தை கொடுத்தது,

   * கொடுங்கோலன் ஃபிர்அன் அவர்கள் இருவரை யும் கொல்ல நினைத்தும் அவர்களை  கொலை செய்யமுடியாமல் போனது.

 * சூனியக்காரர்களை தோற்கடித்தது.

 * சூனியக்காரர்கள் மூஸா  ஹாரூன் (அலை)  இறைவனின் மீது உடனே நம்பிக்கை கொண்டது.

 *காரூனின் செல்வம் பூமியில் பொதிந்தது 

 அல்லாஹ் தான் இதை நன்கறிந்தவன்!

 

"நிச்சயமாக நாம் மூஸா (அலை)முக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்தோம். அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான். (17;101)

 

" (அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்." (17:102)

 

இந்த ஒன்பது அத்தாட்சிகளை இப்னு அப்பாஸ் குறிப்பிடுவதாவது: "அவருடைய கைத்தடி, ஓளி வீசும் கை, பஞ்சம், கடல் பிளந்தது, வெள்ளம், வெட்டுக் கிளி, பேன், தவளை, இரத்தம்." முஹம்மது பின் காப் கூறுகிறார்அவை: "அவரது கை, கைத்தடி, சூரா ஆராஃப்பில் குறிப்பிடப்பட்ட ஐந்து அத்தாட்சிகள், செல்வம் புதைவது மற்றும் சினாய் மலை".  முஜாஹித், இக்ரிமா, அஷ்- ஷாபி மற்றும் ஃகதாதா கூறுகிறார்கள்: " அவருடைய கை, கைத்தடி, பஞ்சம், குறைந்த விளைச்சல், வெள்ளம், வெட்டுக்கிளி, பேன், தவளை மற்றும் இரத்தம்."

 

முதல் இரண்டு அத்தாட்சிகளை கூறும் 

வசனங்கள்:

இறைவன், "மூஸாவே! உம் கைத்தடியை நீர் கீழே எறியும்" என்றான். அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார், அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒர் பாம்பாயிற்று. (இறைவன்) கூறினான்: "அதைப் பிடியும், பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்." "இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும், அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும்.(20:19-22)

"உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிகுந்து, மாசற்ற வெண் மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படும் போது உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ் னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும் (28:32).

மூன்றாவது அத்தாட்சி:

"பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.” (7:130). சிலர் இதனை இரண்டு அத்தாட்சிகளாக கருது கின்றனர்.

பின் வரும் ஐந்து அத்தாட்சிகள்:

 அவர்கள் மூஸாவிடம், “நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள். " (7:132). “ஆகவே அவர்கள் மீது, கனமழையை யும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர். " (7:133). தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் “மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதி யின் படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்” என்று கூறினார்கள்.” (7:134).

அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கிய போது அவர்கள் மாறு செய்தே வந்தனர். ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத் தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். இஸ்ராயீ லின் மக்கள் பொறுமையாக வும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டு பண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாட மாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம். (7:135 to 137)

கடைசி அத்தாட்சி:

செங்கடல் பிளப்பதை ஒரு அத்தாட்சியாக இப்னு அப்பாஸ் குறிப்பிடுகிறார். அல்லாஹ்வே தன் வசனத்தில் இதை அத்தாட்சி என்றே குறிப்பிட்டுள்ளான்.

உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. (பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம். மேலும், நாம் மூஸாவை யும், அவருடன் இருந்த அனைவரையும் காப் பாற்றினோம். பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. (26: 63 to 67).  இதையே மற்றுமொரு இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: "அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக!" (20:77). "மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டி ருக்கும் போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித் தோம் (என்பதையும் நினைவு கூறுங் கள்)." (2:50).

சிலர் சில சம்பவங்களை அத்தாட்சி என கருத்து தெரிவிக்கின்றனர்.

முஹம்மது பின் காப் காரூனின் செல்வம் அழிந்ததை ஒரு அத்தாட்சியாக கருதுகிறார். மூஸா (அலை)  மின் கைத்தடி பாம்பாக மாறி அவர்கள் வரவழைத்த பாம்புகளை உண்டவுடன், “(மனந்திருந்திய சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்து கொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” என்று கூறினார். எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தி யதினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) சூனியத் தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும், அல்லாஹ் தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்திருப் பவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறி னார்கள்).” (20:72 and 73).  சூனியக்கார்கள் கொண்ட திடமான இறை நம்பிக்கையை ஒரு அத்தாட்சியாக சிலர் கருதுகின்றனர்.

“(அல்லாஹ்) கூறினான்: “நாம் உம் கையை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது; நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து விடுவீர்கள்.” (28:35)

அல்லாஹ் ஹாருன் (அலை) மிற்கு சரி நிகரான அந்தஸ்தை கொடுத்தான். கொடுங்கோலனான ஃபிர்அவுன் அந்த சகோதர்களை கொல்ல பல தடவை முயன்றும் கொல்ல முடியவில்லை. இதை சிலர் ஓர் அத்தாட்சியாக கருதுகின்றனர்.

மூஸா(அலை)  மட்டுமே நபிமார்களிலே மிகுந்த அத்தாட்சிகள் வழங்கப் பட்டவர்.  எகிப்தை விட்டு வந்ததும் இஸ்ராயிலின் சந்ததிகளுக்கு அல்லாஹ் பல அத்தாட்சிகளை அனுப்பினான்.  ஃபிர்அவுன் இறந்த பிறகும் அவன் அடக்கியாண்ட இஸ்ராயிலின் சந்ததிகளின் எண்ணங்களை மாற்ற முடியவில்லை. அது  அவர்கள்  இரத்தத்தில் ஊறி விட்டது. அவர்கள் நல்ல அறிவுள்ள மனிதர்களாக மாறவே வெகு காலம் ஆனது.  அவர்கள்  புனித பூமியை வெல்ல போர் செய்ய முன் வரவில்லை. ஆகையால் மூஸா (அலை)   தனக்கும் தன் சமுதாயத்தினர் இடையே இணக்கம் ஏற்பட அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். ஆகையால் அல்லாஹ் அந்த புனித பூமியை வெல்ல நாற்பது ஆண்டுகள் ஆக்கினான். அம்மனிதர்கள் இறந்து, அவர்களுடைய சந்ததிகள், போர் புரிந்து  புனித பூமியை வென்றனர்.  அவர்களுக்கு அல்லாஹ் பல அத்தாட்சிகளை  காண்பித்தான். அவை:

1. அல்லாஹ் மூஸா (அலை)முடன்  நேரிடையாக பேசியது. (4:164).

2. மூஸா  கடவுளை காண ஆசைப்பட இறைவன் அவர் முன் தோன்றினான்.

3. சினாய் மலையை அவர்கள் மேல் உயர்த் தினான். (2:63, 93; 4:154; 7:171)

4. கற்பாறையிலிருந்து பன்னிரண்டு நீரூற்றுகளை உதித்தோடச் செய்தது.

5.. நிழலிடும் மேகங்கள்

6. மன்னா & சல்வா (7:160)

7.  பசுவை அறுத்து கொலை செய்வதனை  கண்டுபிடிப்பது.(2:73)

8. இறந்த பனீ இஸ்ராயீலர்களை உயிர்பித்தது (2:55 & 56) .

9. நல்லுபதேசம் எழுதிய பலகைகளை பெறுவது (7:144)

1. அல்லாஹ் மூஸா (அலை)முடன் இவ்வுவகில் நேரிடையாக பேசியுள்ளான்:

"மூஸா (அலை) முடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்." (4:164). அல்லாஹ் ஆதம் (அலை)  உடனும், நபி முஹம்மத் (ﷺ) உடனும் வானத்தில் பேசியுள்ளான். அல்லாஹ், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான். (7:144).

2. மூஸா  (அலை) கடவுளை காண ஆசைப்பட அவர் இறைவன் அவர் முன் தோன்றினான்:

மூஸா (அலை),  “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப் பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்தி ருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்." (7:143).

3. சினாய் மலையை அவர்கள் மேல் உயர்த் தினான்:

தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்” (என்று நாம் வாக்குறுதி வாங்கினோம் (2:63 and 93). “ நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்” (என்று கூறினோம்). (7:171). மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம். (4:154) 

4,5,6. பன்னிரண்டு நீரூற்றுகள், நிழலிடும் மேகங்கள், மன்னா & சல்வா:

உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (மூஸா (அலை) அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம் (நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும் படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு, ஸல்வா வையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்" (7:160).

7. பசுவை அறுத்தது:

"(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலையுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன் (இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான். (2:73).

8. இறந்த பனீ இஸ்ராயீலர்களை உயிர்ப்பித்தது:

''மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக் கொண்டது. நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம். (2:55 & 56).

9. நல்லுபதேசம் எழுதிய பலகைகளை பெறுவது:

"மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலி ருந்து (மேலானவராக ) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை உறுதியாக பிடித்து கொள்ளும்.'' (7:144). மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய  நல்லுபதேசங்களை யும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்). (7:145).

 

         அல்லாஹ் தான் இதை நன்கறிந்தவன்!

 

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...