2. பைத்துல் மாமூர்)
وَالْبَیْت
الْمَعْمُور) என்பது என்ன?
பதில்: இதை "குடியிருக்கும் வீடு", "நிறுவப்பட்ட
வீடு", "அடுத்தடுத்து வரு பவர்கள் வீடு"
என்றும் கூறுவர். பைத்துல் மாமூர் ஏழாவது சுவர்க்கத்தில், நம்
காபாவிற்கு நேர் மேலே அமைந்துள்ளது. அல்லாஹுதாலாவின் 'அர்ஷ்'க்கு நேர் கீழே உள்ளது.
அல்லாஹ்
சூரா 'தூர்' இல் 'பைத்துல் மாமூர்'
மேல் சத்தியம் (52:4) செய்து "நிச்சயமாக உம்முடைய
இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும். அதனைத் தடுப்பவர்
எவருமில்லை." (52:7&8) என்று கூறியுள்ளான்.
'பைத்துல்
மாமூர்' ஏழாவது சுவர்க்கத்தில் இருப்பவர்களுக்கு காபாவாக
உள்ளது. இதற்கு இரண்டு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் 70,000 வானவர்கள் இங்கு வந்து அல்லாஹ்வை வணங்குகிறார்கள். நாம் காபாவை
தவாஃப் செய்வதைப் போல் செய்து, பின் ஒரு வாயில் வழியே உள்ளே நுழைந்து மறு வாயில் வழியே
வெளியேறுகின்றனர்.
அதன்
பிறகு அந்த வானவர்கள் மறுபடியும் பைத்துல் மாமூர் வருவதில்லை. ஒவ்வொரு குழுவும்
ஒரு தலைவரை நியமித்து, அவரோடு தங்களுக்கு என்று நியமிக்கபட்ட
இடத்தை அடைந்து வாழ் நாள் முழுவதும் அல்லாஹ்வை வணங்குகின்றனர்.
நபி
(ﷺ) அவர்கள் " ஏழு சுவர்க்கங்களிலிலும்,
ஒவ்வொரு நான்கு விரல்கள் அளவு இடைவெளி யில், ஒரு வானவர் நின்று ருக்குவும், ஸுஜுதும் செய்து கொண்டு இருப்பதாகவும், அவர்கள்
மறுமை நாள் வரை தஸ்பீஹ் ஓதிக் கொண்டு இருப்பதாகவும் " கூறியுள்ளார்.
சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் எவ்வளவு வானவர்களை
படைத்துள் ளான் என்பதை இதை கொண்டு அறியலாம்.
[மக்காவிலுள்ள
நம் காபாவிலும் இரண்டு வாயில் களும், ஒரு சன்னலும்
இருந்தது. ஆனால் இப்போது ஒரே ஒர் கதவு மட்டும் உள்ளது. அதுவும் மிக உயர மான
இடத்தில் அமைந்துள்ளது. அதில் செளதி அரசு நிர்வாக அரபுகள் மட்டும் உள்ளே செல்ல
அனுமதியுண்டு. மற்றவர்களுக்கு உள்ளே செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. நமது நபி (ﷺ)அவர்கள் இரண்டு வாயில்களையும்
கீழே தரையை தொட்டு இருக்குமாறு அமைக்க விருப்பப்பட்டார். ஆனால் தன் வாழ்
நாளில் அதை அவரால் நிறைவேற்ற இயலவில்லை].
நபி (ﷺ), அல் இஸ்ரா சென்ற போது ஏழாவது வானத்தை அடைந்தார். அவர் கூறினார்: "பின் எனக்கு பைத்துல் மாமூர் காட்டப்பட்டது. நான் ஜிப்ரீல் (அலை) மை பார்த்து “அது என்ன?” என்று கேட்டதற்கு, அவர் இது பைத்துல் மாமூர். இங்கு தினமும் 70,000 வானவர்கள் வந்து அல்லாஹ்வின் இபாதத் செய்கின்றனர். இங்கு வந்து போன பின் அவர்கள் மீண்டும் வர மாட்டார்கள்." என்று. (ஸஹிஹ் புகாரி, 3207, ஸஹிஹ் முஸ்லிம், 164)
இந்த இஸ்ரா யாத்திரையின் போது நபி (ﷺ) அவர்கள் இப்ராஹிம் (அலை) பைத்துல் மாமூர் மேல் தன் முதுகை சாய்த்துக் கொண்டிருந்தார். இப்பூமியில் காபா கட்டிய செயலுக்காக அவருக்கு கிடைத்த வெகுமதி ஏழாவது சுவர்க்கம், அதாவது அல்லாஹ்வின் மிக அருகில்!
இது போல ஒவ்வொரு சுவர்க்கத்திலும் காபாவைப் போல் ஒரு வீடு உண்டு. அதை அங்குள்ளவர்கள் தவாஃப் செய்யவும் கிப்லாவாகவும் பயன் படுத்துகின்றனர். முதல் சுவர்க்கத்தில் உள்ள வீட்டிற்கு அல் இஜ்ஜாஹ் என்று பெயர். அல்லாஹ் தான் இதை நன்கறிவான்!
என் எண்ணப்படி, உங்கள் செல்வம் உங்களை ஹஜ் செய்ய மக்கா கொண்டு செல்ல அனுமதிக் கவில்லையானலும் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் உங்கள் நான்கு கடமைகளையும் சரி வர செய்து நற்காரியங்ளை நிறைய செய்தீர்களா னால் சுவர்க்கம் சென்று தினமும் தவாஃப் செய்யலாம்.
சுபஹானல்லாஹ்!
No comments:
Post a Comment