3. கீழே கொடுக்கப்பற்றவற்றை செய்துவிட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது?
1. ஒரு மனிதனை கொலை செய்து விடுவது.
2. ஒரு விசுவாசியை தெரிந்தோ/தெரியாமலோ
கொல்வது.
3. மனைவியை ஜிஹார் கூறுதல்.
4. இஹ்ராம் அணிந்த பின் வேட்டையாடி
விலங்கினை கொல்வது.
5. ஹஜ் புரியும் போது பலி பிராணியை
அல்லாஹுதாலா பெயர் சொல்லி பலியிடாவிட்டால்/ கிடைக்காவிட்டால்
6. தாங்கள் செய்த ஒப்பந்தத்தை
(சத்தியங்களை) முறிப்பது.
7. திருடினால்.
பதில்:
1. 2:178.
2. 4:92 & 93.
3. 58:3
4. 5:95
5. 2:196
6. 5:89
7. 5:38
1.
ஒரு மனிதனை கொலை செய்து விடுவது:
"ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது
உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப்
பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய
கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான
முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக், கொலை செய்தவன்
பெருந்தன்மையுடனும், நன்றியறிதலு டனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உம் இறைவனிடமிருந்து
கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக்
கடுமையான வேதனையுண்டு. (2:178).
2. ஒரு விசுவாசியை தெரிந்தோ/தெரியாமலோ கொல்வது:
2. அ. "உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக
கொலை செய்து விட்டால் அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய
குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் -
அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன் னித்து) அதை தர்மமாக
விட்டாலொழிய. கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃ
மினாக இருந்தால், முஃ மினான ஓர் அடிமையை விடுதலை
செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை. இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை)
செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு
கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை
செய்யவும் வேண்டும். இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால்,
அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள்
நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண
ஞானமுடையவனாகவும் இருக்கிறான் '' (4:92).
2. ஆ.
ஒரு விசுவாசியை தெரிந்து கொல்வது:
"எவனேனும்
ஒருவன், ஒரு முஃமினை வேண்டு மென்றே கொலை செய்வானாயின்
அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன்
மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு
மகத்தான வேதனை யையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்." (4:93)
3. மனைவியை
ஜிஹார் கூறுதல்.
"மேலும்
எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய [ஜிஹார்] பின் (வருந்தித்) தாம் கூறியதை
விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும்
ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக்
கொண்டே நீங்கள் உபதேசிக் கப்படுகிறீர்கள் மேலும் அல்லாஹுதாலா, நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்."
"ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒரு வரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங் கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்கவேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் வேண்டும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வ தற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புக ளாகும்." (58:3 & 4).
4. இஹ்ராம் அணிந்த பின் வேட்டையாடி விலங்கினை கொல்வது:
"ஈமான்
கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில்
வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே
அதைக் கொன்றால், (ஆடு, மாடு,
ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப்
பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது. அதற்கு உங்களில் நீதமுடைய இருவர்
தீர்ப்பளிக்க வேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும். அல்லது பரிகாரமாக
ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும்
இல்லையாயின்) தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது
(அதற்கு ஈடாகும்;). முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து
விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ
அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும்,
(குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க
உரியோனாகவும் இருக்கின்றான்." (5:9).
5. ஹஜ்
புரியும் போது பலி பிராணியை அல்லாஹுதாலா பெயர் சொல்லி பலியிடாவிட்டால்/
கிடைக்காவிடடால்:
"குர்பானீ
கொடுக்க சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று
நாட்களும், பின்னர் (தம் ஊர்) திரும்பியதும் ஏழு
நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச்
சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின்
பக்கத்தில் இல்லை யோ அவருக்குத் தான்- ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில்
கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.'' (2:196).
6. தாங்கள்
செய்த ஒப்பந்தத்தை முறிப்பது:
"உங்கள்
சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்.
எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில்
தவறினால்) உங்களைப் பிடிப்பான். (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமா வது,
உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக் கும் ஆகாரத்தில்
நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது
ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர்
பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள்
சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு
நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு
விளக்குகிறான்." (5:89)
7. திருடினால்:
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான். (5:38).
No comments:
Post a Comment