12. அல்லாஹ் கூறுகின்றான்! திருக்குர்ஆன் ஒரு மலை மேல் இறக்கப்பட்டால் அது
அ. நன்றியுடன் இருக்கும்
ஆ. ஸஜ்தா
செய்யும்.
இ. நடுங்கிப் பிளந்து போகும் (தாங்காது தூள் தூள் ஆகிவிடும்).
ஈ. பஞ்சு போல் இலேசாகி விடும்.
உ. அல்லாஹ்வின்
புகழ் பாடும்.
பதில்: நடுங்கிப் பிளந்து போகும். (தாங்காது தூள் தூள் ஆகிவிடும்). "(நபியே!) நாம் ஒரு
மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோம் ஆனால், அல்லாஹ்வின்
பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள்
சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
(59:21).
திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறங்கிய ஒரு தெய்வீக புத்தகம். அது நபி முஹம்மத் ﷺ அவர்களுக்கு
வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களால் 23 வருடங்களில் சிறிது சிறிதாக வழங்கப் பட்டது. இது எக்காலத்திற்கும் பொருந்தும் வசனங்க ளுடைய ஒரு இலக்கிய அதிசயம், அறிவுப் பெட்டகம்.
சட்டம், ஞானம், வழிபாடு, சம்மன், கட்டளைகள், பிரார்த்தனைகளைக்
கொண்டு வாழ்க்கை, மரணம், மறுமைக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்கின்றது. மாபெரும் உண்மைகள், கடந்த கால கதைகள், நபிகளின் வரலாறுகள், அறிவார்ந்த
போதனைகள் கொண்ட இப்புத்தகத்தை பல நூற்றாண்டுகளாக அல்லாஹ் ஒரு சொல்லோ ஒர் அர்த்தமோ மாறாமல்
பாதுகாத்துள்ளான். மேலும் இதை தூய வானவர்கள் மட்டுமே தொடக்கூடிய "லாஹீல் மஹ்ஃபூஜ்" என்ற மகத்துவமிக்க நூலில் அழியாது பாதுகாத்து வருகின்றான்.
அல்லாஹ் திருக்குர்ஆனிலேயே அதனைப் பற்றி
விவரித்துள்ளான்:
- பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும்.'' (2:2).
- இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க வேதம் (56:77).
- பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. (56:78). தூய்மையானவர்களைத் தவிர(வேறெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்(56:79).
- பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் கொண்ட, (24:34) மிக்க மேலான ஞானம் நிறைந்த வேதம் ஆகும். (36:2; 43:4, 54:5).
- பேரொளியும், தெளிவுமுள்ள (5:15) பெருமை பொருந்திய வேதம் (85:21).
- இவ்வேதம் நன்மை- தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய, (2:185)
- இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வரக்கூடிய, (65:11)
- நன்மாராயம் கூறி, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தெளிவான வசனங்களையும் (41:3,4)
- சிந்தித்துப் பார்ப்பதற்காக எல்லாவித உதாரணங்களையும் (39:27)
- நல்லுணர்வு பெறுவோருக்கு நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டு எளிதாக்கப்பட்ட வசனங்களையும் (54:17) கொண்டுள்ளது.
இதன் வசனங்கள், இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தாகவும், முஃ மின்களுக்கு, இருள்களி லிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் செலுத்து பவைகளாகவும், நேர் வழிகாட்டியாகவும், நல்லரு ளாகவும் (10:57) உள்ளன. இவை முரண்பாடில்லாமல் ஒன்றுகொன்று ஒப்பான தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தோல்(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து பிறகு, அவர்களுடைய இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. (39:23). யார் இதை வாசித்து அதன்படி நடக்கிறார்களோ அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கொடுத்து, அவர்களை பாதுகாத்து, மறுமையின் இன்னல்களிலிருந்து அவர்களை இரட்சிக்கும். குர்ஆனில் எதுவும் தாறுமாறாக இல்லை. அதன் நடை தனித்துவம் மிக்கது. அது செய்யுளும் இல்லை, உரைநடையும் இல்லை. இரண்டும் கலந்தது. அது நம்மை அல்லாஹ்வின் அருகாமையில் கொண்டு செல்லும். அதனை ஓதக் கேட்கும் போது மனம் மாறும். அதை ஓதும் போது ஓதுபவரின் அந்தஸ்தை உயர்த்தும். அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் கிடைக்கும்.
"(இவ்வேதம்) மிக்க
பாக்கியம் வாய்ந்தது ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை
விட்டு விலகி) க்கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்."
(6:155).
நபிﷺ அவர்கள் குர்ஆனைப்பற்றி கூறிய சிலவற்றை
காண்போம்:
"குர்ஆன் தன்னை படிப்பவருக்கு மறுமைநாளில் பரிந்துரைக்கும்"
"யார் அதை தன் முன் வைத்து ஓதுகிறார்களோ அவர்களை அது சொர்க்கத்தின் பால் வழி நடத்தும். யார் அதை புறந்தள்ளு கிறார்களோ அவர்களை நரகத்திற்கு இட்டு செல்லும்"
"யார் உயர்ந்த மனிதர்கள் என்றால் திருக்குர்ஆனை அறிந்து, அதனை மற்றவர்களுக்கு கற்றுத் தருபவர்கள்.''
"குர்ஆனை ஓதுங்கள்! உங்களை சுவர்க்கத்திற்கு உயர்த்தி கொள்ளுங்கள்! உங்கள் குரலை இனிமையாக்கிக் கொள்ளுங்கள்! உங்கள் சுவர்க்கத்தின் அந்தஸ்து நீங்கள் கடைசியாக இவ்வுலகில் ஓதிய குர்ஆனின் வசனத்தை பொறுத்து
இருக்கும்."
No comments:
Post a Comment