Monday, October 24, 2022

13.  மறுமை நாளில் அல்லாஹ் سبحانه وتعالىٰ   மனிதர்களை எப்படிப்பட்ட குழுக்களாக பிரிப்பான்:

  அ. நம்பிக்கையாளர்கள்,  நிராகரிப்பவர்கள்.
  ஆ.வலப்பக்கத்தார் மற்றும் இடப்பக்கத்தார்.
  இ. மூன்று குழுக்களாக.
  ஈ.  அவர்களுடைய   பாவங்களுக்கு ஏற்ப.     

 

பதில்: (இ) மூன்று குழுக்களாக. (56:7-11).

"
அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள். (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?) (இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரி சத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?) (மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களேயாவார்கள். இவர்கள் (இறைவனுக்கு) அண்மையில் க்கப்பட்டவர்கள்..". (56:7-11)

அல்லாஹ் சூரா ரூம் இல் தெரிவிக்கின்றான்:

சுவர்க்கம் புக இரண்டு தகுதிகள் தேவை. 1. ஈமான் 2. ஸாலிஹான (நல்ல) அமல்கள். "மேலும் (இறுதித் தீர்ப்புக் குரிய) நிலைபெறும் போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள். ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப் படுவார்கள்.'' "இன்னும், எவர்கள் காஃபிராகி, நம் வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அ(த்தகைய)வர்கள், வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள். " (30:14 to 16)

மூன்றாவது தேவை - நற்செயல்கள் தீய செயல்களை விட அதிக எடையு டன் இருக்க வேண்டும். நற்செயல்கள் அதிகம் செய்தோர் தன் வினைப்புத்தகத்தை தம் வலக்கையில் பெறுவர். இடக்கையில் வினைச்சுவடியை பெறுபவர் தனக்குத் தானே அழிவை ஏற்படுத்தி கொண்டவர்கள். நரக நெருப்பை சுவைக்கப் போகின்றவர்கள்.

இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

"
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கை யில் கொடுக்கப்படுகின்றதோ அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப் படுவான். இன்னும் தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப் படுகின்றதோ-அவன் (தனக்கு) 'கேடு' தான் எனக் கூவியவனாக -  நரகத்தில் புகுவான்.'' (84:6-12).

கடைசி தகுதியானது அல்லாஹ்வை திருப்திபடுத்தி அவனை மகிழ்விக்கச் செய்வது.  அவர்கள் யார் என்றால் தன் வாழ்நாளை அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக ஒதுக்குபவர்கள், அவனுக்காக அதை தியாகம் செய்பவர்கள்இஸ்லாத்தை முதல் அழைப்பிலேயே ஏற்றுக் கொண்டவர்கள், தொழுகைக்கு அதன் உரிய நேரத்தில் நிற்பவர்கள்,  நபிமார்கள், அல்லாஹ்விற்காக ஷஹீத் ஆனவர்கள், இஸ்லாத்தை போதனை செய்பவர்கள். இவர்கள் வலப்பாரிசத் தில் உள்ளவர்களை விட உயரிய பதவியை பெறுவர். அவர்கள் முந்திய வர்கள். "சாபிகூன்" என அவர்களை அல்லாஹ் அழைக்கின்றான்.

இந்த வகையை சேர்ந்தவர்களில் நிறைய பேர், இஸ்லாம் தோன்றிய காலத்தில் தன் நம்பிக்கைக்
காக மிக்க சோதனைக்கு உள்ளானவர்களும், வெகு சிலர் அந்த சமுதாயத்திற்கு பின்பு வந்தவர்களும்.

இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: "(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்திய வர்களேயாவார்கள். இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப் பட்டவர்கள். இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர். முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தி
னரும், பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகை
யினரும் " (56:10 - 14).

"
ஆகவே, (முஃமின்களே!) நீங்கள் மாலையி(லாகும் பொழுதி)லும், நீங்கள் காலையி(லாகும் பொழுதி)லும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருங்கள்." (30:17)

அல்லாஹ்வே! எங்களை  "சாபிகூன்"களாக இறக்கச் செய்வாயாக! ஆமின் யா ரப்!


No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...