4. உங்களுக்கு தெரியுமா அல்லாஹ் சுபஹானஹீதாலா திருக்குர்ஆனில், நம்பிக்கை
கொண்டு, நற்கருமங்களைச் செய்கின்றவர்கள் [الَّذِينَ آمَنُوا
وَعَمِلُوا الصَّالِحَاتِ] தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் என கூறுகின்றான் என்று?
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள். [98:7].
அவர்கள் ஒப்பற்றவர்கள்:
[40:58] குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்;
[38:28] அல்லது ஈமான் கொண்டு நல்லமல்கள்
செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம்
ஆக்கிவிடுவோமா?
[45:21] எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை,
எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச்
சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள்
உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும். உங்களில் சொற்பமானவர்களே
(இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
அல்லாஹீதாலா அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களை நல்லவர்களாக்கி, நேர்வழிகாட்டி, மகத்தான கூலியையும் நல்குவான்:
[33:44] எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
[33:70] ஈமான் கொண்டவர்களே! நீங்கள்
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே
சொல்லுங்கள். [33:71] (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச்
சீராக்கி நற்கருமங்களை செய்ய வைப்பான்; உங்கள் பாவங்களை
உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன்
தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.
[25:70] எவர் தவ்பா செய்து ஈமானுங் கொண்டு,
நற் செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக
மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும்,
மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
[25:71] இன்னும், எவர்
தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர்
நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.
[5:93] ஈமான் கொண்டு, நற்கருமங்கள்
செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும்,
ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும்,
(விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்
பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும்,
மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து
வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள்
வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது
குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ்
நேசிக்கிறான்.
[47:2] ஆனால், எவர்கள்
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து,
முஹம்மது (ஸல்) மீது
இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள
உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய
தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும்
சீராக்குகின்றான்.
[48:29] முஹம்மது (ஸல்) அவருடன் இருப்பவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல)
அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான
கூலியையும் வாக்களிக்கின்றான்.
[28:84] எவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால்
அவருக்கு அதைவிட மேலானது உண்டு; எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர்
அவர்கள் செய்ததற்குச் சமமான கூலியைப் பெறுவார்கள்.
[30:44] எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே
நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
[65:11] அன்றியும், ஒரு தூதரையும் அல்லாஹ் (அனுப்பி வைத்தான்); அவர்
அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு
ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம்
கொண்டு வருவதற்காக.
[42:26] அன்றியும் ஈமான் கொண்டு நல்ல அமல் செய்பவர் (களின்
பிரார்த்தனை) களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப் படுத்துகிறான்; மேலும் அல்லாஹ்
அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
[30:45] ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன்
அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
[4:146] யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்)
கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும்
கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான
நற்கூலியை அளிப்பான்.
[3:57] ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய
[103:3] ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக்
கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் உபதேசிக்கிறார்களோ
அவர்கள் (நஷ்டத்திலில்லை).
[4:16] உங்களில் விபச்சாரத்தை செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை
கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து
நற்கருமங்களை செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்
மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.
ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ
அவர்கள் நஷ்டத்திலில்லை.
[11:11] துன்பங்களைப் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு
மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.
[28:80] கல்வி ஞானம் பெற்றவர்கள் கூறினார்கள் “உங்களுக்கென்ன கேடு! ஈமான்
கொண்டு, நல்ல
அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப்
பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று.
[29:7] அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த
நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
[22:50] “எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ
அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
ஆட்சி அதிகாரத்தை கூலியாக கொடுப்பான்:
[24:55] உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை (ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர் களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்து வதாகவும், அவர்களு டைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்;
சுவனத்தை கூலியாக கொடுப்பான்:
[2:62] ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர் களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் நற்கூலி (சுவர்க்கப் பூங்கா) நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[29:9] அன்றியும் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்கிறார்களோ அவர்களை நல்லடியார்களுடன் நிச்சயமாக
நாம் சேர்த்து விடுவோம்.
[42:22] ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ
அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள்
விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.
[2:25 & 41:8]
அவற்றில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்.
(இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
[29:58] சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில்,
நிச்சயமாக நாம் அமர்த்துவோம். இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும்
உண்டு;
[11:23 & 2:
82] நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு
நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ
அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
[84:25] எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி
உண்டு.
[22:14; 31:8 & 47:12] நிச்சயமாக,
அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சுவனபதிகளில்
பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்
கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச்
செய்கிறான்.
[85:11] அவர்களுக்கு அதுவே மாபெரும்
பாக்கியமாகும்.
[32:19] எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ
அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள்
தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உபசரிக்கப்படுவார்கள்).
[22:23] அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும்,
முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
[2:25] அவர்களுக்கு
உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் போதெல்லாம்
“இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப் பட்டிருக்கிறது”
என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான்
(அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும்
அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள்
அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
நன்மைகள் செய்யாத இறைமறுப்பாளர்களின் நிலை:
[32:12] மேலும், தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிடுவோம்”
[35:36] எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத் தானிருக்கிறது; அவர்கள்
மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும்
மாட்டாது;
[35:37] இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்:
“எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச்
செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று
கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில்
சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக்
கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும்
வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின்
பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு
உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).
ஆகையால் விசுவாசிகளுக்கு அல்லாஹீதாலா கட்டளையிடுகிறான்:
[5:105] ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.
பிரார்த்தனை:
[27:19] சுலைமான் (அலை), “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
[46:15] மனிதன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள்
கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய
ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு
உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக சீர்படுத்தியருள்வாயாக!
நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும்,
நான் முஸ்லிம்களில் உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக இருக்கின்றேன்”
என்று கூறுவான்.
ஓ அல்லாஹ்! திடமான நம்பிக்கை கொண்டும், நற்கருமங்களைச் செய்தும், நாங்கள் படைப்புகளில் மிக மேலானவர்களாக எங்களை ஆக்குவாயாக! ஆமீன்!
الحمدلله
No comments:
Post a Comment