Tuesday, June 11, 2024

 

5 ஹஜ் கேள்வி-பதில்.

السلام عليكم ورحمة الله وبركاتة 

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

5. ஒருவர் இஹ்ராம் நிலையில் இருக்கும் போது ஹஜ் செய்ய மக்கா நகரத்திற்குள் நுழைய தடுக்கப்பட்டால் அவர் என்ன செய்ய  வேண்டும்?

பதில்:

ஒருவர் எந்த காரணத்தினாலோ இஹ்ராம் நிலையில் மக்கா சென்று ஹஜ் அல்லது உம்ரா செய்ய தடை செய்யப்பட்டால், அவர் தடுக்கப்பட்ட அவ்விடத்திலே யே ஹாதி தன்னோடு இருந்தால் அதை பலியிட்டு அதன் பாகங்களை அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்த அளித்து, முடி வெட்டி இஹ்ராமை களைய வேண்டும். அல்லது ஹாதியை காபாவிற்கு அனுப்பி அங்கு பலியிடும் வரை காத்திருந்து பின் முடி வெட்டி இஹ்ராம் களைய வேண்டும்.

தடுக்கப்படுவது என்பது

நோய் காரணமாக,

பகைவர்களால், அல்லது

மக்காவை அடையும் வழி தவறவிட்டால்

அத்-தவாரி கூறுகிறார், "தடுக்கப்படுவது என்பது ஒரு மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எல்லாம் அடங்கும்."

அல் ஹஜ்ஜாஜ் பின் அமர் அல்- அன்சாரி, நபி அவர்கள்கூறியதாக இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார்: "யாராவது காலை அல்லது கால் எலும்பை முறித்து விட்டால் அமர் இஹ்ராம் களைந்து பின், ஹஜ்ஜை அடுத்த ஆண்டு செய்ய வேண்டும்."

நபி வரலாற்றிலே இந்த மாதிரி சம்பவம் ஹுதைபியா என்ற இடத்திலே நடந்துள்ளது. நபி அவர்கள் தன் 1400 தோழர்களுடன் ஹஜ் செய்ய இஹ்ராம் கட்டிய நிலையில் மதினாவிலிருந்து 70 ஒட்டகங்களோடு (பலி கொடுக்க) பறப்பட்டு ஹீதைபியா என்ற இடத்தில் தங்கி இருந்தனர். அப்போது மக்காவில் இருக்கும் எதிரிகளான குரைஷிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைந்து ஹஜ் செய்ய அனுமதிக்கவில்லை. அடுத்த வருடம் வந்த மூன்றே நாள் தங்கி ஹஜ் செய்யலாம் என்று உடன்படிக்கை செய்து கொண்டனர்.

உடன்படிக்கை எழுதி முடித்ததும் நபி அவர்கள் தோழர்களை ஒட்டகம் பலியிட்டு முடி இறக்கி இஹ்ராம் களைய கட்டளையிட்டார். விரக்தி அடைந்த தோழர்கள் நபி அவர்களின் கட்டளையை ஏற்காமல் இருந்தனர். அதனை கண்ட நபி அவர்கள் அவர்கள் முன்னிலையில் தன் ஒட்டத்தை பலியிட்டு தன தலை முடி நீக்கி இஹ்ராம் களைய மனமில்லாமல் நபி தோழர்கள் குர்பானியை நிறைவேற்றினர். அப்போது தான் சூரா ஃபதஹ் இறக்கப்பட்டது.

ஆயிஷா (ரஜி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் துபா பின்த் அல்-ஜுபைர் அவர்களிடம், "நீங்கள் ஹஜ் செய்ய விரும்புகிறீர்களா?" அவள் பதிலளித்தாள், "கடவுளின் அருளால் நான் ஹஜ் செய்ய நினைத்தேன், ஆனால் நான் வலியில் இருக்கிறேன்." நபி அவர்கள் அவளிடம், "ஹஜ்ஜை நிறைவேற்றி, ஒரு நிபந்தனையை விதித்து, 'கடவுளே! நீ என்னைத் தடுக்கும் இடத்திலிருந்து இஹ்ராமிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்" என்று கூறுங்கள் என்றார்.

الحمدلله

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...