25. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
25. எந்த செயல் ருகூவிலும் மற்றும் ஸஜ்தா விலும் விரும்பத்தகாதது?
பதில்: குர்ஆன் ஓதுவதை. ஆனால் குர்ஆனின் துவாக்களை ஓதலாம்.
நபி ﷺ அவர்கள் குறிப்பிட்டதாக இப்னு அப்பாஸ் (ரஜி) கூறுகிறார்: "தொழுகையில் ருகூவு மற்றும் ஸஜ்தாவில் குர்ஆன் ஓதுவது எனக்கு தடுக்கப் பட்டுள்ளது. ருகூவில் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தும், ஸஜ்தாவில் நீங்கள் கடுமையாக, பிரார்த்திக்கவும் பாடுபட்டால், அந்த பிரார்த்தனை உங்களுக்கு பதிலளிக்கப்படும்.” [ஸஹிஹ் முஸ்லிம், 479a]
நபி பெருமானார் ﷺ ருகூவிலும் மற்றும் ஸஜ்தா விலும் ஓதும் வாசகங்களை திருக்குர்ஆனின் வசனங்களிலிருந்து பெறப்பட்டது என கீழ் கண்ட ஹதீஸ் கூறுகிறது: இப்னு அம்ர் கூறுகிறார்: [فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ] மகத்தான உம்முடைய இறைவனின் திரு நாமத்தை கொண்டு தஸ்பீஹ் செய்வீராக!" [56:96] என்ற வசனம் இறக்கப்பட்ட போது இறை தூதர் ﷺ கூறினார்கள் இதை உங்கள் ருகூவில் கூறுங்கள். [سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى] மிக்க மேலான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக!" [87:1] என்ற வசனம் இறக்கப்பட்ட போது இறை தூதர் ﷺ கூறினார்கள் இதை உங்கள் ஸஜ்தாவில் கூறுங்கள் என்று. [ சுனன் அபி தாவூத், 869].
தான் எழுதிய "தாபியின் அல் ஹாக்காக்" என்ற நூலில் இமாம் அல் ஜயாலி கூறுகிறார்: ' நான்கு இமாம்களும் "ருகூவிலும் மற்றும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவது விரும்பத்தகாதது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்"
ஷாஃபி அறிஞரான இமாம் அல் கொய்லுபி கூறுகிறார்: "ஒருவர் தொழுகையில் குர்ஆன் ஓத நினைத்தால் நின்றுக் கொண்டிருக்கும் நிலை தவிர மற்ற நிலைகளில் குர்ஆன் ஓதுவது விரும்பத்தகாதது." மாலிக்கி அறிஞரான இமாம் அல் ஸாவி கூறுகிறார்: "ருகூவிலும் மற்றும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவது விரும்பத்தகாதது, ஸஜ்தாவில் குர்ஆன் துவாக்களை ஓதுவதைத் தவிர."
ருகூவில் குர்ஆன் துவாக்களை ஓதுவது அனுமதிக் கப்பட்டதாக நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள். ஆயிஷா (ரஜி) அறிவிக்கிறார்: நபி ﷺ அவர்கள், சுப்ஹானக- அல்லா ஹீம்ம ரப்பனா வ பிஹம்திக அல்லாஹீம்மக்ஃபிரலி" [மிக்க பரிசுத்தமானவனே! நான் உன் புகழ் பாடுகிறேன். அல்லாஹ் நீ என்னை மன்னிப்பாயாக!] (அல் புகாரி மற்றும் முஸ்லிம்). இமாம் இப்னு ஹாஜர் மற்றும் இமாம் தகீக் அல் ஈத் கூறுகிறார்கள்: "இந்த ஹதீஸால், ருகூவிலும் துவாக்கள் ஓதுவது அனுமதிக்கப்பட்டதாக அறியலாம்"
குர்ஆன் அல்லாஹ்வின் மதிப்பிற்குரிய சொல்லாக இருப்பதால் அல்லாஹ்வின் வார்த்தைகளை அவனிடம் பணிந்து, நம்மையே சமர்ப்பித்து ருகூவிலும், ஸஜ்தாவிலும் இருக்கும் போது
குர்ஆன் வாசிப்பதை தவிர்த்து அவன்
புகழ் பாடுவதே விரும்பத்தக்கது. அந்நேரத்தில் அல்லாஹ்வோடு மிக நெருங்கி இருப்பதால்
நமக்கு வேண்டியதை முறையிட்டு பெற்றுக் கொள்வது சாலச் சிறந்தது.
الحمدلله
No comments:
Post a Comment