Wednesday, April 3, 2024

 

24. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة   

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ     

24. அல்லாஹ் எந்த இரண்டு குடும்பத்தினரை அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்?

 பதில்: اِنَّ اللّٰهَ اصْطَفٰۤى اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَى الْعٰلَمِيْنَۙ‏ (3:33), ஆதம் (அலை) மையும், நூஹ் (அலை) மையும், இப்ராஹீம் (அலை) மின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான். (3:33).

அல்லாஹ், ஆதம் (அலை) மை தன் கைகளாலே படைத்து அதில் உயிரை ஓதினான். அல்லாஹ் சுபஹானஹீதாலா எல்லாவற்றின் பெயரை அவருக்கு  அறிவித்து, வானவர்களுக்கு அவரை ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டான். அவரை சுவனபதியில் வசிக்கச் செய்தான். அல்லாஹ் தன் ஞானத்தால் ஆதம் (அலை) மை பூமிக்கு அனுப்பினான்.

அல்லாஹ் நூஹ் (அலை) மை முதல் நபியாக  தேர்ந்தெடுத்து சிலைகளை வணங்கிய மக்களிடம் அனுப்பினார். அவரும் இரவு-பகல் பாராமல், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் நீண்ட காலம் உபதேசித்தார். ஆனால் அவருடைய சமுதாயத்தினர் அதை புறக்கணித்தனர். ஆகையால் அல்லாஹ் அவரையும் அவரை பின் பற்றிய விசுவாசிகளைக் காப்பாற்றி, அவரை கேலிசெய்தவர்களையும் புறக்கணித்தவர்களையும் மூழ்கடித்தான்.

அல்லாஹ் சுபஹானஹீதாலா இப்ராஹிம் (அலை) மின் குடும்பத்தினர் பலரை:

நேர்வழியில் நடத்தினான்;

பயபக்தி உடையவர்களாகவும் ஆக்கினான்;

தூய்மைபடுத்தினான்;

நல்லொழுக்கமுள்ளவராகவும்;

கஷ்டங்களை ஏற்று பொறுமையுடையவராகவும்;

இறைவனின் கட்டளையை நிறைவேற்றுபவர்களாகவும்;

தவ்பா செய்து பாவங்களை விட்டு விலகுபவர்களாகவும்;

தொழுபவர்களாகவும், ருகூஃ ஸுஜ்துவிலும் அழுது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பவராகளாகவும்;

ஜகாத் கொடுப்பவர்களாகவும் ஆக்கினான்;

எண்ணற்ற அருள் வளங்களை அருளினான்;

இம்மையிலும் மறுமையிலும் உயர்த்தினான்;

நபிமார்களாக ஆக்கினான்;

வேதங்களை கற்று கொடுத்தான்;

அவர்களின் சிலர் மீது வேதங்களை இறக்கினான்.

அவர்களைத் தனது மார்க்கத்தைப் பிரசங்கிப்பதற்கும்,

உலகைச் சீர்திருத்துவதற்கும் தேர்ந்தெடுத்தான்.

தனக்கு விரும்பியவர்களாக ஆக்கினான்.

உயர்ந்த நற்பெயரை கொடுத்தான்.

உன்னதமான சுவனபதிகளில் அவர்களை நுழைவித்தான்.

அல்லாஹ் இம்ரானின் குடும்பத்தாரை, அவரது மனைவி, அவரது மகள் மர்யம் பின்த் இம்ரான், ஈஸா (அலை) மின் தாயார் தன் திருப்பணிக்காக தேர்ந்தெடுத்தான்.

 இம்ரானின் மனைவி தன் கர்ப்பத்திலுள்ளதை அல்லாஹ்விற்கு முற்றிலும் அர்ப்பணிக்க நேர்ந்து கொண்டாள் (3:35);

★ (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்று, அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டு, அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி (ன் தீங்குகளி) லிருந்து காப்பாற்றத் திடமாக அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினாள் (3:36);

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான் (3:37);

அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். அல்லாஹ் அவளுக்குக் கணக்கின்றி உணவளித்தான் (3:38);

அல்லாஹ் அவளை தேர்ந்தெடுத்து, தூய்மையாக்கி, உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) ஆக்கினான். (3:42);

★ “உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” என்று மர்யமுக்கு கட்டளையிட்டான்   (3:43);

அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார் என்று

★ “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.” (3:46);

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான் (3:48);

இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).  “எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”  “நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.” (3: 49 to 51)

அல்லாஹ், “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று கூறினான் (3:55);

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.  (3:59).

الحمدلله

  

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...