23. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
23. எவர் மறுமை நாளில் குருடராக எழுப்பப் படுவார்?
பதில்: “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான். [20:124].
இந்த உலகில் அவரது வாழ்க்கை கடினமாக இருக்கும்:
■ அவருக்கு அமைதி இருக்காது;
■ மாறாக, அவரது தவறான வழிகாட்டுதலால் அவரது இதயம் சிரமப்படும்;
■ வெளி வாழ்க்கை சௌகரியமாகத் தோன்றினாலும், உள்ளே மகிழ்ச்சியாக இருக்காது;
■ அவரது இதயம் தூய்மையான உறுதியையும் வழிகாட்டுதலையும் கொண்டிருக்காது;
■ அவர் குழப்பத்திலும், , சந்தேகத்திலும், நிச்சயமற்ற நிலையிலும் இருப்பார்;
■ மறுமை நாளில் குருடராக எழுப்பப்படுவார்.
ஆகையால் அல்லாஹ் திருக்குர்ஆனில் பிறிதொரு இடத்தில் கூறுகின்றான்:
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு) அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம். [17:97].
இதன் தொடர்ச்சியாக திருக்குர்ஆன் கூறுகிறது:
(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான். [20:125].
(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டுவிட்டாய்” என்று கூறுவான். [20:126].
ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும். [20:127]
இதை தவிர்க்க, தொழுகையை நிலைநிறுத்தும் படி அல்லாஹீதாலா கூறுகின்றான்:
"பொறுமையை நிலை நிறுத்திவீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்." [29:130]
الحمدلله
No comments:
Post a Comment