5. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
5. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்குப்பின் ஒருவராக வந்த அல்லது ஒரே காலத்தில் வாழ்ந்த ஆறு நபிமார்களின் பெயர்களை கூறுக.
பதில்: இப்ராஹிம் (அலை), லூத் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாஃக் (அலை), யாகூப் (அலை), யூசுஃப் (அலை).
■ லூத் (அலை), இப்ராஹிம் (அலை)மின் ஒன்று விட்ட சகோதரர்.
■ இஸ்மாயில் (அலை) மற்றும் இஸ்ஹாஃக் (அலை), இப்ராஹிம் (அலை) மின் மக்கள்.
■ யாகூப் (அலை), இஸ்ஹாஃக் (அலை)மின் மகன்.
■ யூசுஃப் (அலை) யாகூப் (அலை) மின் மகன்.
இப்ராஹிம் (அலை)ம் [லூத் (அலை) மோடும் தன் மனைவி பீபி சாராவுடன்] பாபிலோன் மக்களை விட்டு வேறு நாட்டிற்கு சென்றார் என்று அல்குர்ஆன் என்று கூறுகிறது.
(இதன் பின்னரும்) லூத் (அலை) (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம் [அலை]): “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.” (29:26)
இப்ராஹீம் [அலை] பிரார்த்தனை:
தனக்கு வெகு காலம் சந்ததி இல்லாததால் தனக்கு ஒரு ஒழுக்கமுள்ள மகன் வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்.
அல்லாஹீதாலாவும் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து இஸ்மாயில் (அலை) என்ற ஸாலிஹான மகனை அருளினான்.
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்) இப்ராஹீம் [அலை] மை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது” என்று கூறினான். (2:124).
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அல்லாஹ்வின் வீட்டின் (காபா) அடித்தளத்தை உயர்த்தி பிரார்த்தித்த போது:
“எங்கள் இறைவனே! இவ்வூர் மக்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (2:129).
அல்லாஹீதாலா தன் நண்பன் இப்ராஹீம் (அலை) மின் இந்த பிரார்த்தனையை அங்கீகரித்து இஸ்மாயிலின் சந்ததியிலிருந்து முஹம்மது நபி ﷺ யையும், அவருக்கு குர்ஆனையும் இறக்கி தன் அருளை நிறைவேற்றினான்.
பின்னர் அல்லாஹீதாலா வானவர்களை அனுப்பி அவருக்கு பிபீ சாரா மூலமாக ஒரு மகன் பிறக்கப் போகும் நற்செய்தியை அனுப்பினான்:
அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள். (15:53)
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார் களாக்கினோம். (21:72)
மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார். (29:27)
காண்பீர்! எப்படி அல்லாஹீதாலா இப்ராஹிம் (அலை) மின் பிரார்த்தனையை அங்கீகரித்து அவரின் சந்ததியிலிருநது தூதர்களை அனுப்பி, வேதங்களை இறக்கி அவருக்கு நிலையான சுவனபதிகளை சொந்தமாக்கினான் என்று.
No comments:
Post a Comment