4. ரம்ஜான் கேள்வி-பதில்:
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
4. ஹதீஸ் குத்ஸியில் எதை தன் மேலாடை என்றும், அங்கி என்றும் அல்லாஹ் கூறுகின்றான்?
அல்லாஹ் தன்னை தானே பற்றி கூறும் ஹதீஸீகளுக்கு ஹதீஸ் குத்ஸி என்று கூறுவர்.
பதில்:
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ﷺ அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரஜி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்: "பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை எனது அங்கியாகவும் உள்ளன. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடு வானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்." [40 ஹதீஸ் குத்ஸி, 19].
விளக்கம்:
பெருமை என்பது தன்னை பற்றி தானே பெரிதாக நினைத்து கொள்வது. வல்லமை என்பது அவனது திறன், செல்வம், உயர் பதவி மற்றும் அதிகாரம்.
பெருமை மற்றும் பெரும் வல்லமை என்பவை அல்லாஹ்விற்கே உரிய பண்புகளாகும். அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது. யாரும் தான் உடுத்தியிருக்கும் உடையை மற்றவருக்கு பங்கு போடமாட்டார்கள். மேலும் எல்லோருக்கும் மேலானவான அல்லாஹ்வே இந்த இரண்டு பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளான். இந்த இரண்டு பண்புகளும் அவன் படைத்த படைப்பினங்களுக்கு பொருந்தாது. அதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அப்படி உரிமை கொண்டாடு பவனை அல்லாஹீதாலா தண்டிப்பான். அவனை நரகத்திலே சேர்ப்பான்.
அல்லாஹ் அவனை அவமானப்படுத்துவான். மேலும் அவனை தாழ்ந்தோர்களில் தாழ்ந்தவனாக்குவான். நபி ﷺ அவர்கள் கூறியதாக
அம்ர் பின் ஷுஐப் (ரஜி) அவர்கள் தம்
தந்தையிடமி ருந்தும், தாத்தாவிடமிருந்தும் கேட்டது:
"நியாயத்தீர்ப்பு நாளில் மனிதர்கள் ஒன்று கூடும் போது கர்வம் கொண்ட
வர்கள் மனித உருவத்தில் உள்ள சிறு துகள்களை போல் இருப்பார்கள். அவர்கள் எங்கும்
அவமானத்தால் மூடப்பட்டிருப்பார்கள், அவர்கள் புலாஸ்
என்ற நரகத்தில் உள்ள சிறைச்சாலையில் இழுத்துச் செல்லப்படுவார்கள். பெரும்
நெருப்பில் மூழ்கி, அந் நெருப்பில் எரிந்த மற்ற
மனிதர்களின் உடல்களிலிருந்து விழுந்த துளிகளை குடித்துக் கொண்டே சீர்குலைந்து
போவார்கள்." [ஜாமி அத்-திர்மிதி, 2492].
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:
اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ
"நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை." (4:36).
● அவனது பர்ஜ்க் (கல்லறை) வாழ்க்கையில்
தினமும் காலையிலும் மாலையிலும் நரக நெருப்பு அவனுக்கு காண்பிக்கப்படும்.
● மறுமை நாளில் அவன் கேள்வி கணக்கு
கேட்காமலே நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவான்.
ஆகையால் அல்லாஹ் சுபஹானஹீதாலாவின் மேன்மையை அறிந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் மனிதர்ளுக்கு கொடுத்த அருட் கொடைகளை கொண்டு அவர்கள் பெருமையும் கர்வமும் கொள்ளாதிருக்க அல்லாஹ் இந்த ஹதீஸால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றான்.
الحمدلله
No comments:
Post a Comment