2. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
2. முதன் முதலில் யார், யாருக்கு ஸலாம் கூறினார்?
பதில்: ஆதம் (அலை) வானவர்களுக்கு.
அபூ ஹுரைரா (ரஜி) அறிவிக்கிறார்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் ஆதம் (அலை) மை 60 முழ உயரமுள்ளவராகப் படைத்தான். அவரைப் படைத்த பின் அவரிடம், "நீர் சென்று அந்த வானவர்களின் குழுவை வாழ்த்தி அவர்களின் பதிலைக் கேளுங்கள். உங்கள் வாழ்த்து (வணக்கம்) மற்றும் பதில் (உங்கள் சந்ததியினரின் வணக்கங்கள்." எனவே, ஆதம் (அலை) வானவர்களிடம், "அஸ்ஸலாமு அலைக்கும்" (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார்கள். வானவர்கள் பதில் அளித்தார்கள், "அஸ்ஸலாமு அலைக்கா வ ரஹ்மது-ல்லாஹி" (அதாவது அமைதியும் அல்லாஹ்வின் கருணையும் உங்கள் மீது உண்டாவதாக) வானவர்கள் ஆதம் (அலை) மின் வணக்கத்துடன், 'வ ரஹ்மது-ல்-லாஹி,' என சேர்த்து பதில் கூறினார்கள். சொர்க்கத்தில் நுழையும் எந்தவொரு நபரும் ஆதாமை (தோற்றத்திலும் உருவத்திலும்) ஒத்திருப்பார்கள். ஆதாமின் படைப்பிலிருந்து மக்கள் உயரம் குறைந்து கொண்டே வருகிறார்கள்." (ஸஹீஹ் புகாரி, 4, புத்தகம் 55, ஹதீஸ் எண், 543).
அஸ்ஸலாமு அலைக்கும் என்ற
● இந்த அற்புதமான மற்றும் தெய்வீகமான வார்த்தை சொர்க்கத்தில் எங்கு சென்றாலும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். (56:26).
● இந்த வார்த்தை ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும்
ஒழுக்கத்தை போதிக்கும் தன்மை பெற்றது.
● இது இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும்
போது கூறக்கூடிய வார்த்தை.
● இது எப்போதும் கடை பிடிக்கக் கூடிய,
அல்லாஹ்வின் சாந்தத்தை, கருணையை,
ஆசிர்வாதங்களை நினைவு படுத்தும் சொல்.
● ஒருவர் ஸலாம் கூறும் போது கட்டாயமாக
பதிலளிக்கக்க வேண்டும்.
● இதை கூறும் போது அல்லாஹ் முப்பது
நன்மைகளை பதிவு செய்கின்றான்.
● இது
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் தத்துவம்
● இந்த நல்வாக்கியம் மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். (14:24)
● அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக்
கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. (14:25)
● ‘உங்களுக்கு ஸலாம் கூறப்படும்பொழுது,
அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம்
கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்’.
● நல்ல விசுவாசிகள் “ஸலாமுன் அலைக்கும்” உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறி சுவர்க்கத்தில் வரவேற்கப்படுவர்.)(13:24)
● எல்லாச்சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு
ஏற்றது. துக்கமாக இருப்பவர்களிடமும் கூறலாம். மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும்
கூறலாம். காலை, மாலை, இரவு
எந்த நேரங்களிலும் கூறலாம்
இறைத்தூதர் நபி ﷺ அவர்கள் எங்களுக்கு ஆறு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி கட்டளை யிட்டார்கள். 1) நோயாளிகளை நலம் விசாரிப் பது, 2) மரணத்தவரின் பின் தொடர்ந்து செல்வது, 3) தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறும்போது, அவருக்காக ‘யர்ஹமுகல்லாஹ்’ என்று மறுமொழி கூறுவது, 4) நலிந்தவருக்கு உதவுவது, அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது, 5) மக்களிடையே ‘ஸலாம்’ எனும் சாந்தியைப் பரப்புவது, 6) சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது’. தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ கூறாதபோது அவருக்கு மறுமொழி கூறவேண்டிய அவசியமில்லை. (ஸஹிஹ் முஸ்லிம், புத்தகம் 26, எண் 5379)
நபி ﷺ கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்- ஆஸ் குறிப்பிட்டுள்ளார்: “இஸ்லாத்தில் எந்த செயல் மிகச்சிறந்தது? என்று. அதற்கு நபி ﷺ அவர்கள், "மற்றவர்களுக்கு உணவளிப்பது, தெரிந்தவர், தெரியாதவர் எல்லோருக்கும் ஸலாம் கூறி வாழ்த்து தெரிவிப்பது." (ரியாதுஸ்- ஸாலிஹீன், 844, அல்-புகாரி மற்றும் முஸ்லிம்).
الحمدلله
No comments:
Post a Comment