12. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
12. குரைஷிகள் கேட்கிறார்கள்: இந்த குர்ஆன் மக்கா, தாயிஃப் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப் பட்டிருக்கக் கூடாதா?” (43:31) அந்த இரண்டு பெரிய மனிதர்கள் யார்?
பதில்:
1. மக்காவின் வாலித் இப்னு முகிரா
2. தாயிஃபின் உர்வா பின் மஸ்ஊத் அத்-
தகாஃபி ஆகிய இருவரும் என திருக்குர்ஆன் விளக்கத்தை எழுதிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
குரைஷிகள் மனிதரையே தூதராக அனுப்பியதை விரும்பவில்லை:
ஆனால் அல்லாஹ் ஆரம்ப காலத்திலிருந்தே மனிதர்களுக்கு வழிகாட்டும் தூதர்களை மனிதர்களிலிருந்தே அனுப்பினான். வேறு உயிரினங்களை அவன் தேர்ந்தெடுக்கவில்லை. இது வரை அல்லாஹ் அனுப்பிய தூதர்கள்:
★ வானத்திலிருந்து இறங்கவில்லை.
★ சிலரை
தவிர மற்றவர்கள் எல்லாம் சாதாரண குடும்பத்திலேயே பிறந்தவர்கள்.
★ அவர்கள்
கடைவீதிகளில் நடமாடுபவர்களாக இருந்தனர்.
★ மற்ற
மனிதர்கள் போல் உணவையும், நீரையும் அல்லாஹ்விடமிருந்து
பெறக்கூடயவர்களாக இருந்தனர்.
இறை நிராகரிப்பாளர்கள் விரும்புவது என்னவென்றால் வேதம் கொடுக்க இறை தூதர்களை அல்லாஹீதாலா தேர்ந்தெடுக்க விரும்பும் நபர் ஒர் செல்வந்தராகவும் அதிக செல்வாக்கு உள்ளவராகவும் மதிப்புக்குரிய வராகவும் எல்லோரும் விரும்பிச் செல்பவர்பவராகவும் இருக்க வேண்டும்.
அவர்களுடைய கேள்வி எல்லாம் ஏன் மக்காவின் பெரிய மனிதர்களான வாலித் பின் முகீரா, உத்பா பின் ராபியா மற்றும் தாயிஃபின் மேற்குடியவராகிய உர்வா பின் மஸ்ஊத், கினானாஹ் பின் அப்தி அமர், இப்னு அப்த் யாலீல் போன்றோரை தூதராக ஆக்கவில்லை? ஏன் இப்பெரிய பணியை செய்வதற்கு அநாதையாக பிறந்த ஒருவரை, பரம்பரை சொத்தில்லாத, இள வயதில் ஆடுகளை ஓட்டிய ஒருவரை,
மனைவியின் செல்வத்தைக் கொண்டு வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தும் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளான்? இதற்கு ஏன் முஹம்மது பின் அப்துல்லாஹ்வை தூதராக நியமித்துள்ளான்? என்பதே.
இந்த இறை நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் கருணையை பங்கிட விரும்புகிறார்கள். அவர்கள் அல்லாஹ் யாரை தேர்தெடுக்க வேண்டும் யாரை தேர்தெடுக்கக் கூடாது என்று தாங்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் ஞானத்தில் கேள்வி எழுப்புகிறார்கள் அதில் தலையிடுகிறார்கள்.
அல்லாஹ் உயர் அந்தஸ்தும் செல்வமும்
கொடுத்ததால் தங்களுக்கு நபித்துவமும் வழங்க வேண்டும் என்று விரும்புவது எவ்வளவு
முட்டாள்தனம்?
★ எவ்வளவு தான் திட்டமிட்டாலும் வழிவகுத்தாலும் அல்லாஹ்வின் ஆணைக்கு மாறாக செயல்படுத்த முடியாது.
★ எல்லாம் ஒரே மனிதருக்கு கொடுக்கப்படுவதில்லை அது போலவே எல்லாம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை
அல்லாஹ்விற்கு தெரியும் யாரை தன் தூதை எடுத்துக்கூற அனுப்புவது என்று:
வாலித் பின் முகீரா கேட்டான்: "புலமை மிக்க என்னை விட்டு விட்டு எழுத படிக்காத முஹம்மதின் மீது ஏன் அல்லாஹ் குர்ஆனை இறக்கியுள்ளான்? ஏன் தாயிஃபின் உர்வா பின் மஸ்ஊத் அத்- தகாஃபி விட்டு வைத்தான்? என்று கேட்டான்.
அதற்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் பதிலளிக்கின்றான்:
[43:32] "உமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்.” இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்."
[43:33] "நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்."
[43:34] "அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்)."
الحمدلله
No comments:
Post a Comment