10. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
10. "உங்கள் நபி உங்களுக்கு நான் அனுப்பிய தூது செய்தியை அறிவித்தாரா?" என்ற அல்லாஹ்வின் கேள்விற்கு மறுமை நாளில் எந்த சமுதாயம், "எங்களுக்கு எந்த தூதரும் வரவில்லை" என்று பதில் கூறுவதாக ஹதீஸ் கூறுகிறது.
பதில்: நூஹ் (அலை) மின் சமுதாயம்
அல்லாஹ்வின் திருத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்:
"மறுமையில் நூஹ் (அலை) அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் ஒன்று கூடுவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் [அலை] அவர்களை நோக்கி), '(என்னுடைய செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத் தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?' என்று கேட்பான். அதற்கு நூஹ் (அலை) அவர்கள், 'ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)' என்று பதிலளிப்பார்கள். பிறகு, அல்லாஹ் நூஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தினரிடம், 'இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்து விட்டாரா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள், 'இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை' என்று பதில் கூறுவார்கள். உடனே, அல்லாஹ் நூஹ் (அலை) அவர்களிடம் 'உங்களுக்காக சாட்சியம் சொல்பவர் யார்?' என்று கேட்பான். நூஹ் (அலை) அவர்கள், 'முஹம்மத் ﷺ அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் (எனக்காக சாட்சியம் சொல்வார்கள்)' என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் (அலை) அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத் தாருக்கு) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம். 'அவ்வாறே உங்களை மக்களுக்கு சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்' என்ற புகழுயர்ந்த இறைவனின் (2:143) வசனம் இதைத் தான் குறிக்கிறது. [ஸஹீஹ் புகாரி, 3339].
நூஹ் (அலை) முடைய சரித்திரம் திருக்குர்ஆனில் விரிவாக சூரா ஹீத், அஷ்ஷுஃரா, அஸ்-ஸாப்பாத், நூஹ் ஆகியவைகளில் தொகுக்கப் பட்டுள்ளது.
ஆதம் (அலை) அவர்களுக்குப் பின் முதலில் தோன்றிய ரஸுல் நூஹ் (அலை). அவர் பெயர் 43 தடவை திருக்குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 21 தடவை அவருடைய சரித்திரத்தோடும், மீதமுள்ள வை மற்ற நபிமார்களோடும் கூறப்பட்டுள்ளன. அவருடைய சரித்திரத்தை மக்காவில் இறக்கியருளப்பட்ட சூராக்களில் மட்டுமே காணலாம். இவை நபி ﷺ க்கு ஆறுதல் அளிக்கக் கூடிய வகையிலும், அகம்பாவம் மற்றும் பிடிவாத குணம் கொண்ட உயர்மட்ட குரைஷிகளை அச்சமூட்டி எச்சரிக்கப்படும் வகையிலும், அல்லாஹீதாலாவால் இறக்கி அருளப்பட்டன. மக்கத்து குரைஷிகள், நூஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தாரைப் போலவே முஹம்மது நபி ﷺ மிடம் நடந்து கொண்டனர்.
950 வருட காலம் தன் சமூகத்தாரை ஆதம் (அலை) உபதேசித்த ஒரே இறைவன் [لاإله إلا الله] என்ற அதே தூதுச் செய்தியையே நூஹ் (அலை)மும் தம் மக்களுக்கு உபதேசித்தார். அப்போது, அவர்கள் தங்கள் விரல்களால் காதுகளை மூடிக் கொண்டும், தங்கள் துணிகளால் உடம்பை போர்த்திக் கொண்டும், அவரிடமிருந்து விலகி சென்றும், அவருக்கு கீழ்படியாமலும், அவரை கேலி செய்தும், அவமதித்தும், தங்கள் மூதாதையர்கள் மூடநம்பிக்கை கொண்டு வணங்கிய தெய்வங்களை வழிபட்டும் இருந்தனர். மேலும் அவரை கொல்லவும், நாடு கடத்தவும் திட்டமிட்டனர். அவர்கள் காட்டிய அதே ஆணவத்தை மறுமைநாளில் (தங்களை படைத்த எல்லாம் அறிந்தவனிடம்) எல்லோரும் தங்கள் நபியோடு எழுப்பப் படும் நாளிலும் காட்டுவர். அதனால் அவர்களை பிரளயத்தில் மூழ்கச்செய்து, அவரை பின்பற்றிய கப்பலில் ஏறிய வெகு சொற்பமானவர் களை காப்பாற்றினான்.
முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு அம்ர் இப்னு அல் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது: “அல்லாஹ்வின் தூதர் நூஹ் (அலை)மின் மரணம் நெருங்கியபோது, அவர் தனது மகன்களை அழைத்து அறிவுரை கூறினார்: “உண்மையில் நான் உங்களை இரண்டு விஷயங்களைச் செய்யும் படியும், மேலும் இரண்டு விஷயங்களைத் தவிர்க்கும் படியும் எச்சரிக்கின்றேன். சிலை வழிபாட்டை கொண்டு அல்லாஹ்விற்கு இணை வைப்பதையும், அகம்பாவம் கொள்வதையும் தவிர்த்து இருங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை உங்கள் கோட்பா டாக கருதுங்கள். ஏழு வானங்களையும், ஏழு பூமியையும், அவை இரண்டிற்கு இடையில் உள்ள அனைத்தையும் ஒரு தராசின் ஒரு பக்கத்தில் வைத்து, மறுபுறம் لاإله إلا الله “அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்ற வார்த்தைகள் வைக்கப் பட்டால், முந்தையதை விட இது தராசில் அதிக கனமாக காட்டும். ஏழு வானங்களை யும், ஏழு பூமியையும் சூழ்ந்துள்ள இரும்பு வளையத்தில் இவ்வார்த்தை களை வைத்தால் அவ்வளையம் சுக்கு நூறாக நொறுங்கி விடும். அல்லாஹ்வின் பரிசுத்ததனத்தை பிரகனப்படுத்தி அவன் புகழ் பாடி பிரார்த்தித்தால் உங்களுக்கு சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். "[மஸ்னத் அஹமத், 7101].
நூஹ் (அலை) அவர்களின் சமுதாயம் தெற்கு ஈராக்கில் இப்போதைய நகரமான குஃபாவிற்கு அருகில் வாழ்ந் தனர். அவருடைய கப்பல் தரையிறங்கிய ஜூதி மலை சிரியா மற்றும் துருக்கிஎல்லையில் அமைந்துள்ளது. இதை கீழேயுள்ள வரை படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment