66. கப்ருகளை
சென்று அடையும் வரை எது மனிதனை அல்லாஹ்வை விட்டு பராக்காக்கி விட்டது?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்: செல்வத்தைப்
பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டு)
பராக் காக்கி விட்டது- நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை,
விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர்
அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து
கொள்வீர்கள். அவ்வாறல்ல- மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை
உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப்
பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால்
பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு
அளிக்கப் பட்டிருந்த) அருட்கொடைகளைப்
பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படு வீர்கள். (அத் தகாதுர், 102:1-8)
மனிதனுக்கு
பல வகையான ஆசைகள் இருக்கும் அவை:
*
நிறைய செல்வத்தை அடைய
*தன்னோடு போட்டி இடுபவரோடு வெற்றி பெற
*
மற்றவர்களைக் காட்டிலும் உயர்வு பெற
*
அதிகாரத்திற்காக போட்டியிட
*
பதவிக்காக போட்டியிட
*
அதிக வசதிகளை பெற
*
அதிக இன்பத்திற்காக
* வாழ்வில்
உயர்வானவற்றை பெற
*
தன்னை பற்றியும் தன் செல்வங்களைப் பற்றியும் பெருமையாக பேச
*
தன் குழந்தைகள் அதை விட பெரிதாக அடைய வேண்டும் என.
இம்மாதிரியான கவலைகளிலே மரணத்தை அடையும் வரை மனிதன் மூழ்கி விடுகின்றான். தன்னை படைத்தவனையும், தன்னை நிர்வகிப்பவ னையும் மறந்து விடுகின்றான். ஷைத்தான் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அவனது ஆசையை மேலும் தூண்டுவிடுவான். மறுமைக் காக சம்பாதிப்பதற்கு பதிலாக இவ்வுலகில் செல்வத்தை சேமித்து சேமித்து வைப்பான். அவனுக்கு மரணத்தை பற்றியோ, மண்ணறையை பற்றியோ, மறுமையின் கேள்வி கணக்கு பற்றியோ, நரக நெருப்பை பற்றியோ நினைக்க நேரமிருக் காது. அவன் சேமித்து வைத்த செல்வத்தை மரணத்திற்கு பின் அவனோடு எடுத்து செல்லவும் முடியாது.
ஆகையால்
அல்லாஹ் இந்த சூராவில் அவனுக்கு ஒன்றுக்கு இரண்டு தடவை நரக நெருப்பை பற்றி அச்சமூட்டி
எச்சரிக்கின்றான். இது வரை அவன்
அறிந்து கொண்ட (عِلْمَ ٱلْيَقِينِ)
நரக நெருப்பை, நிச்சய மாக நடக்கும் மறுமை நாளில் தன் கண்களால் (عَيْنَ ٱلْيَقِينِ) நேரில்
காண்பான்.
அவன் மிக கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்த செல்வம் அவனுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட பரிசு. அது அவனுக்காக கொடுக்கப்பட்ட சோதனை பொருள். அதற்காக அவனுக்கு அதைப் பற்றிய கேள்வி கணக்கு நிச்சயம். அவன் அதை எப்படி சம்பாதித் தான், எப்படி செலவழித்தான் என்று கேட்கப்படும். அவன் அதை அடைந்தவுடன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினானா, அதற்காக ஜகாத் கொடுத் தானா அதனை தேவையுள்ளோருக்கு கொடுத் தானா என்று கேட்கப்படும்.
யா
அல்லாஹ்! நாங்கள் உன்னை வணங்குவதற் கும், எங்கள் கடமைகளை சரி வர செய்வதற்கும், நாங்கள்
அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்க ளுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் உன்னிடமே நாம்
உதவி தேடுகிறோம். எங்களை கல்லறையின் தண்டனையிலிருந்தும் நரகத்தின்
நெருப்பிலிருந் தும் காத்தருள்வாயாக. மறுமை நாளின் கேள்வி கணக்குகளை எங்களுக்கு
எளிதாக்குவாயாக. எங்களை எளிதாக சுவர்க்கத்தில் நுழையும் படி செய்வாயாக! ஆமீன்!
الحمدلله
No comments:
Post a Comment